முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / வாட்ஸ்அப் பயன்படுத்துவோருக்கு காத்திருக்கும் அட்டகாசமான புதிய அப்டேட்

வாட்ஸ்அப் பயன்படுத்துவோருக்கு காத்திருக்கும் அட்டகாசமான புதிய அப்டேட்

Whsatsapp update

Whsatsapp update

வருங்காலங்களில் தனது யூசர்களுக்கு சிறப்பான அனுபவத்தை தரும் வகையில் மேலும் பல புதிய அப்டேட்கள் வரவுள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது.

  • Last Updated :

இன்று நாம் எந்த வித தகவல்களையும் பிறருக்கு தெரிவிக்க நினைத்தாலும் உடனே நமது நினைவுக்கு வருவது வாட்ஸ்அப் செயலி தான். பல்வேறு சாட்டிங் செயலிகள் உலக அளவில் இருந்தாலும் அதிக படியான மக்களுக்கு உடனே மனதில் தோன்றும் அளவிற்கு இந்த வாட்ஸ்அப் செயலி மிக பிரபலமடைந்துள்ளது. நொடி பொழுதில் நமக்கு தேவையான எல்லா தகவல்களையும் பிறருக்கு பகிரவும், பேசவும், ஸ்டேட்டஸ் பார்த்து பொழுதை கழிக்கவும் இந்த செயலி பெரிதும் உதவுகிறது.

இப்படி உலகில் பல கோடி மக்கள் பயன்படுத்தும் வாட்ஸ்அப் செயலியில் அவ்வப்போது புது புது அப்டேட்களை விடுவது வழக்கம். குறிப்பாக தனது யூசர்களுக்கு சிறப்பான சாட்டிங் அனுபவத்தை வழங்குவதற்காக சமீப காலமாக பல அப்டேட்களை வாட்ஸ்ஆப் வழங்கி வந்தது. அதே போன்று தனி உரிமை பாதுகாப்பு ரீதியாகவும் பல்வேறு பிரைவசி அப்டேட்களை தந்துள்ளது.

அந்த வகையில் தற்போது வாட்ஸ்அப் செயலியில் நாம் வைக்கும் புரொபைல் போட்டோ, ஸ்டேட்டஸ், மற்றும் இதர விவரங்களை நமக்கு முன்பின் தெரியாத நபர்கள் பார்க்க முடியாதபடி செய்வதற்காக சில அப்டேட்களை தரவுள்ளது வாட்ஸ்அப் செயலியின் தலைமை நிறுவனமான மெட்டா. இதை பற்றிய அதிகார பூர்வ தகவல்களை வாட்ஸ்ஆப் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

இதையும் படிங்க:  ரூ.30,000 பட்ஜெட்டிற்குள் கிடைக்கும் சிறந்த குரோம்புக் லேப்டாப்களின் பட்டியல்...!

அதன்படி 'வாட்ஸ்ஆப் டெஸ்க்டாப் பீட்டா வெர்ஷன் 2.2149.1-வில் யார் நமது புரொபைல் போட்டோ மற்றும் ஸ்டேட்டஸ் போன்றவற்றை பார்க்க வேண்டும் என்பதை நமக்கு ஏற்றவாறு வைத்துக்கொள்ள 'My Contacts Except...' என்கிற ஆப்ஷன் வரவுள்ளது. இந்த புது அப்டேட் வாட்ஸ்அப்பை கணினியில் பயன்படுத்துவோருக்கு தற்போது வரவுள்ளது' என்று மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் யூசர்களுக்கு மேலும் ஒருசில நாட்களுக்கு பிறகு வரவிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய அப்டேட் மூலம் நீங்கள் எப்போது கடைசியாக வாட்ஸ்ஆப்-இல் வந்தீர்கள், உங்களை பற்றிய தகவல்கள் மற்றும் புரொபைல் போட்டோ ஆகியவற்றை உங்களின் மொபைல் கான்டாக்ட்டில் உள்ளவர்கள் மட்டும் பார்க்கும்படி செய்ய 'My Contacts Except...' என்கிற ஆப்ஷனை தேர்வு செய்து கொள்ளலாம். இதனால் உங்களின் தகவல்கள் முழுமையாக பாதுகாக்கப்படும். இந்த புதிய அப்டேட்டை வாட்ஸ்ஆப் டெஸ்க்டாப் மற்றும் வெப் யூசர்களுக்கு வரவுள்ளது.

இதையும் படிங்க: உடனடியாக அப்டேட் செய்யுங்கள்... ஐஃபோன், மேக்புக் யூஸர்களுக்கு அரசு எச்சரிக்கை

பாதுகாப்பு ரீதியாக கடந்த சில ஆண்டுகளாக வாட்ஸ்அப் செயலியில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளனர். குறிப்பாக நாம் பிறருக்கு அனுப்பும் சாட்ஸை நடுவில் ஹேக்கர்கள் அதை ஹேக் செய்து பார்க்காத வண்ணம் என்கிரிப்ஷன், டிகிரிப்ஷன் முறையை பயன்படுத்தி வருகின்றனர். இதன்மூலம் வாட்ஸ்அப் பயன்படுத்துவோரின் எல்லா தகவல்களும் மிக பத்திரமாக பாதுகாக்கப்படுகிறது என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

top videos

    வருங்காலங்களில் தனது யூசர்களுக்கு சிறப்பான அனுபவத்தை தரும் வகையில் மேலும் பல புதிய அப்டேட்கள் வரவுள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது.

    First published:

    Tags: WhatsApp, Whatsapp Update