Home /News /technology /

அடிதூள்... வாட்ஸ் அப்பில் விரைவில் வருகிறது அசத்தல் அனிமேஷன் அப்டேட்.

அடிதூள்... வாட்ஸ் அப்பில் விரைவில் வருகிறது அசத்தல் அனிமேஷன் அப்டேட்.

வாட்ஸ்அப்

வாட்ஸ்அப்

WhatsApp update : மெட்டாவுக்குச் சொந்தமான வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் போன்ற தளங்களில் மெசேஜ்களுக்கு பதிலளிக்கும் வகையிலான மெசேஜ் ரியாக்ஷன் அம்சத்தில் ஈடுபட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் தகவல்களை பரிமாறிக்கொள்ள உதவும் முதன்மையான செயலியாக வாட்ஸ் அப் உள்ளது. வெறும் குறுஞ்செய்திகள் மட்டுமின்றி, வீடியோ, வாய்ஸ், டெக்ஸ்ட் சாட் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மற்றும் தனிநபர் மட்டுமல்லாது குழுவிலும் செய்திகளை பரிமாறிக்கொள்ளும் வசதிகள் உள்ளதால் வாட்ஸ் அப்பை உலகம் முழுவதும் பில்லியன் கணக்கிலான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

மல்டி டிவைஸ் சப்போர்ட், மெசேஜ் தானாக டெலிட், ஆடியோ மெசெஜ் ப்ரீவ்யூ, என நாள் ஒரு வண்ணம் பொழுதொரு மேனியுமாக வாட்ஸ் அப்-பை அதன் தாய் நிறுவனமான மெட்டா அப்டேட் செய்து வருகிறது. சமீபத்தில் கூட வாட்ஸ்அப் செயலியில், ஃபேஸ்புக் பக்கத்தைப் போல கவர் போட்டோ வைக்கும் வசதி ஏற்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த வசதி வாட்ஸ்-அப் பிசினஸ் கணக்கு வைத்திருப்போருக்கு அறிமுகப்படுத்தும் என என்ற தகவலும் வெளியானது.

இப்படி நாளுக்கு நாள் புதுப்புது அப்டேட்டுகளை வெளியிட்டு வரும் வாட்ஸ் அப் நிறுவனம் விரைவில் மிகப்பெரிய அப்டேட் ஒன்றை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டரில் மெசெஜ்களுக்கு அனிமேஷன் ரிப்ளே கொடுப்பது போலவே விரைவில் வாட்ஸ் அப்பிலும் “Reaction Animation” என்ற வசதியை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது. கடந்த சில நாட்களாக வாட்ஸ்அப் மெசேஜ் ரியாக்ஷன்கள் அம்சம் குறித்து பேசு பொருளாக மாறியுள்ளது.

இதையும் படியுங்கள் :  ஃபேஸ்புக், யூடியூப்புக்கு வருகிறது மிகப்பெரிய சவால்... சீன ஆப் அதிரடி
 நிறுவனம் கடந்த சில மாதங்களாக இதன் உருவாக்கப் பணியில் இருக்கிறது. மெட்டாவுக்குச் சொந்தமான வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் போன்ற தளங்களில் மெசேஜ்களுக்கு பதிலளிக்கும் வகையிலான மெசேஜ் ரியாக்ஷன் அம்சத்தில் ஈடுபட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு பயனர் பெறும் ஒரு மெசேஜ்-க்கு எழுத்து மூலமாகவோ அல்லது இமோஜி மூலமாகவோ எதிர்வினையாற்ற முடியும். ஆனால் வரவிருக்கும் அம்சத்தின் மூலம் பயனர்கள் அனிமேஷன் ரியாக்ஷன் மூலமாக பதிலளிக்கலாம்.


WABetaInfo அறிக்கையில் வெளியாகியுள்ள தகவலின் படி, ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ், வாட்ஸ்அப் வெப், வாட்ஸ்அப் டெஸ்க்டாப்பின் பீட்டா பயனர்களுக்கான சோதனை நடைபெற்று வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அம்சம் ஆண்ட்ராய்டுக்கான வாட்ஸ்அப் பயனர்களுக்கு உருவாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் பயன்பாட்டில், புதிய அனிமேஷன் தேர்வானது இமோஜி தேர்வு செய்யும் பகுதிக்கு அடிப்பகுதியில் இடம்பெறும் என அறிக்கைத் தகவல் காட்டுகிறது.

 

இதையும் படியுங்கள் : உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட்டை நிரந்தரமாக டெலிட் செய்வது எப்படி?

இமோஜி விரும்பிகளின் கவனத்தை இந்த அம்சம் மேலும் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அறிக்கையில் காணப்படும் தகவலின்படி இந்த அம்சம் தற்போது வரை எந்த பயனருக்கும் அல்லது சோதனையாளருக்கும் கிடைக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. கடந்த வாரம் WABetaInfo-ல் ஒரு இமோஜி ஐகான் காட்டப்பட்டது.

இதை கிளிக் செய்யும் போது ஆறு இமோஜிகள் கொண்ட பேனல் காட்டப்பட்டது. அதில் கட்டைவிரல், சிவப்பு இதயம், அழுகிற முகம், கூப்பிய கைகள், அதிர்ச்சியடைந்த முகம் மற்றும் கண்ணீருடன் கூடிய முகம் ஆகியவை இடம் பெற்றன. இந்த அம்சத்தில் குறிப்பிட்ட ஆறு இமோஜிகள் மட்டுமே இடம்பெறுமா அல்லது கூடுதல் இமோஜிகள் வருமா என்பது குறித்த தகவல் தற்போதுவரை தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: WhatsApp, Whatsapp Update

அடுத்த செய்தி