Home /News /technology /

whatsapp-ல் உங்களை பிளாக் செய்தவருக்கு மெசேஜ் அனுப்ப உதவும் 2 ரகசிய வழிகள்!

whatsapp-ல் உங்களை பிளாக் செய்தவருக்கு மெசேஜ் அனுப்ப உதவும் 2 ரகசிய வழிகள்!

வாட்ஸ் அப்

வாட்ஸ் அப்

Whastapp Trick | வாட்ஸ்அப்பில் உங்களை 'பிளாக்' செய்த ஒருவரை 'காண்டாக்ட்' செய்வது எப்படி? என்பது குறித்த விளக்கத்தை தற்போது பார்க்கலாம்.

    மிகவும் பிரபலமான இன்ஸ்டன்ட் மெசேஜிங் பிளாட்ஃபார்ம் ஆன வாட்ஸ்அப்பில் அணுக கிடைக்கும் மிகவும் கண்டிப்பான ஒரு அம்சம் தான் - பிளாக்கிங் (Blocking). முன்பின் தெரியாதவர்கள், தேவை இல்லாதவர்கள் தொடங்கி தனிப்பட்ட பிரச்சினை வரையிலாக, பல வகையான காரணங்களின் கீழ் பலரால் பயன்படுத்தும் இந்த அம்சம், வாட்ஸ்அப் யூசர்களின் பாதுகாப்பிற்கான முதல் மற்றும் பலமான படி என்றே கூறலாம்.

    இப்படியான வாட்ஸ்அப் பிளாக்கை (Block) மீறலாம், அதாவது வாட்ஸ்அப்பில் உங்களை ஒருவர் பிளாக் செய்து இருந்தாலும் கூட குறிப்பிட்ட நபருக்கு நீங்கள் மெசேஜ் செய்யலாம் என்று கூறினால் நம்புவீர்களா? நம்பித்தான் ஆக வேண்டும் . இதை செய்ய உதவும் இரண்டு வாட்ஸ்அப் ட்ரிக்ஸ் உள்ளது. அவைகளை பற்றிய விரிவான கட்டுரையே இது.

    மெட்டாவுக்குச் சொந்தமான வாட்ஸ்அப், டூ-ஸ்டேப் ஆத்தென்டிக்கேஷன், ஹைடிங் ஸ்டேட்டஸ், ஹைடிங் ப்ரொஃபைல் போட்டோ உட்பட பல வகையான செக்யூரிட்டி மற்றும் ப்ரைவஸி அம்சங்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த பட்டியலில் நீண்ட காலமாக இருக்கும் ஒரு அம்சம் தான் - பிளாக்கிங்.

    Also Read : ஒரே வாட்ஸ் அப் அக்கவுண்டை இரண்டு ஃபோன்களில் பயன்படுத்த விருப்பமா? இதைச் செய்தால் போதுமானது

    இதன்கீழ் நீங்கள் பிளாக் செய்யப்பட்டு இருந்தாலும் கூட, உங்களால் அந்த "தடையை" நீக்க முடியாவிட்டாலும், உங்களை பிளாக் செய்த நபருடன் உங்களால் 'சாட்' செய்ய முடியும் என்பதை நீங்கள் அறிவீர்களா? அதெப்படி என்கிற எளிமையான மற்றும் படிப்படியான வழிமுறைகள் இதோ:

    வாட்ஸ்அப்பில் உங்களை 'பிளாக்' செய்த ஒருவரை 'காண்டாக்ட்' செய்வது எப்படி?

    நீங்கள் பிளாக் செய்யப்பட்டிருந்தாலும் வாட்ஸ்அப் வழியாக அவருக்கு நீங்கள் மெசேஜ்களை அனுப்பலாம். இந்த விஷயத்தில் உங்களுக்கு இடையே உள்ள ஒரு பொதுவான நண்பரின் உதவி மட்டுமே தேவைப்படும்.

    உங்களையும், உங்களை பிளாக் செய்த நபரையும் உள்ளடக்கிய ஒரு வாட்ஸ்அப் க்ரூப்பை உருவாக்க உங்கள் நண்பரை கேட்கலாம். அந்த க்ரூப்பில் நீங்கள் அனுப்பும் அனைத்து மெஸேஜ்களையும் உங்களை பிளாக் செய்தவரும் பெறுவார். அதன் வழியாக உங்களை 'அன்பிளாக்' செய்யும்படி குறிப்பிட்ட நபரிடம் கோரிக்கை வைக்கலாம் அல்லது வற்புறுத்தலாம், இப்படித்தான் நீங்கள் அவரை மீண்டும் தொடர்பு கொள்ள முடியும்.

    ஒருவேளை நீங்கள் எந்தவொரு மூன்றாவது நபரையும் இதில் ஈடுபடுத்த விரும்பவில்லை என்றால், இதற்கு மற்றொரு தீர்வும் உள்ளது. அதை நிகழ்த்த கீழ்வரும் வழிமுறைகளை பின்பற்றவும்.

    01. வாட்ஸ்அப்பில் உள்ள செட்டிங்ஸ் மெனுவிற்குச் சென்று கீழே ஸ்க்ரோல் செய்து 'டெலிட் அக்கவுண்ட்' (Delete Account) என்பதைத் தேர்வு செய்யவும். ஆமாம் நீங்கள் படித்தது சரிதான் உங்கள் வாட்ஸ்அப் அக்கவுண்ட்-ஐ டெலிட் செய்யவும்!

    02. இப்போது, ​​உங்கள் மொபைலில் வாட்ஸ்அப்பை மீண்டும் இன்ஸ்டால் செய்து, உங்கள் அக்கவுண்ட்-ஐ மீண்டும் உருவாக்கவும்.

    03. வாட்ஸ்அப்பை மீண்டும் இன்ஸ்டால் செய்த பிறகு, உங்களை பிளாக் செய்துள்ள காண்டாக்ட்களுக்கு நீங்கள் மெசேஜ் அனுப்ப முடியும்.

    04. இந்த இடத்தில், நீங்கள் உங்களின் வாட்ஸ்அப் அக்கவுண்ட்-ஐ டெலிட் செய்தால், அனைத்து வாட்ஸ்அப் க்ரூப்களில் இருந்தும் நீங்கள் உடனடியாக நீக்கப்படுவீர்கள் என்பதும் நினைவில் இருக்கட்டும். எனவே, நீங்கள் அவற்றை மீண்டும் அணுக வேண்டும் அல்லது அந்தந்த க்ரூப்கள் ஒரு பொருட்டே இல்லை என்றால், அவைகளை புறக்கணித்து விட்டு பிளாக் செய்த நபரை சமாதானம் செய்வதில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.
    Published by:Vijay R
    First published:

    Tags: WhatsApp

    அடுத்த செய்தி