வாட்ஸ்அப் செயலியில் வெளியாகும் அடுத்தடுத்த அப்டேட்ஸ்!

இரண்டாவதாக ஒரே நேரத்தில் பல சாதனங்களில் வாட்ஸ்அப் செயலியை இயக்கும் வாய்ப்பு வர உள்ளது.

வாட்ஸ்அப் செயலியில் வெளியாகும் அடுத்தடுத்த அப்டேட்ஸ்!
வாட்ஸ்அப்
  • News18
  • Last Updated: December 2, 2019, 1:57 PM IST
  • Share this:
வாட்ஸ்அப் செயலியில் அடுத்தடுத்து தொடர் அப்டேட்கள் வெளியாக உள்ளன. இது பயனாளர்களுக்குக் கூடுதல் வசதிகளை அளிக்கும் என்றும் வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பீட்டா வெர்ஷனைத் தொடர்ந்து சமீபத்தில்தான் விரல் ரேகை லாக் மற்றும் க்ரூப் ப்ரைவஸி ஆகிய அம்சங்கள் முழுமைபெற்று பயன்பாட்டுக்கு வந்தன. இதைத்தொடர்ந்து டார்க் மோட் அம்சம் ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் போன்களுக்கான பயன்பாட்டுக்கு விரைவில் வர உள்ளது. டார்க் மோட் அப்டேட்-க்குப் பின் தொடர்ந்து புதிய 3 அப்டேட்கள் வருகின்றன.

ஸ்நாப்சாட் செயலியில் சிறப்பு அம்சமான Self-destructing messages என்னும் அப்டேட்டை தற்போது வாட்ஸ்அப்-ம் பெற உள்ளது. மெசேஜ்கள் தானாகவே அழிந்துகொள்ளும் வகையில் நேரம் குறிப்பிட்டுக் கொள்ளலாம். டெலிட் மெசேஜ் ஆப்ஷனின் கீழ் இந்த புதிய அப்டேட் வரும்.


இரண்டாவதாக ஒரே நேரத்தில் பல சாதனங்களில் வாட்ஸ்அப் செயலியை இயக்கும் வாய்ப்பு வர உள்ளது. இது ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு எளிதில் கிடைக்க உள்ளது. மூன்றாவதாக Hide muted status என்னும் அப்டேட். குறிப்பிட்ட ஒரு கான்டாக்ட் நபரின் ஸ்டேட்டஸை மியூட் செய்ய இந்தப் புதிய அப்டேட் உதவும். தற்போதைய ‘மியூட் ஸ்டேட்டஸ்’ ஆப்ஷனின் அப்டேடட் வெர்ஷனாக இருக்கும்.

மேலும் பார்க்க: 6 மாதங்களுக்கு மேல் பயன்பாட்டில் இல்லாத ட்விட்டர் கணக்குகளுக்கு செக்..!
First published: December 2, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading