ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

பயனர்களுக்காக புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ள வாட்ஸ் அப்... என்னென்ன தெரியுமா?

பயனர்களுக்காக புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ள வாட்ஸ் அப்... என்னென்ன தெரியுமா?

வாட்ஸ்அப்

வாட்ஸ்அப்

வாட்ஸ் அப் இல்லையென்றால் ஒரு நொடி கூட இருக்க என்ற மனநிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ள நிலையில், பயனர்களின் வசதிக்காக பல்வேறு அம்சங்களை வாட்ஸ் அப் அவ்வப்போது அப்டேட் செய்து வருகிறது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • New Delhi, India

  உலகம் முழுவதும் பல கோடி  பயனர்கள் பயன்படுத்தக்கூடிய தகவல் பரிமாற்ற செயலியாக வாட்ஸ்அப் செயல்பட்டு வருகிறது. வாட்ஸ் அப் இல்லையென்றால் ஒரு நொடி கூட இருக்க முடியாது என்ற மனநிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ள நிலையில், பயனர்களின் வசதிக்காக பல்வேறு அம்சங்களை வாட்ஸ் அப் அவ்வப்போது அப்டேட் செய்து வருகிறது.

  ஆரம்பத்தில் வாட்ஸ் அப் குழுவில் 256 நபர்கள் இணைய முடியும் என்ற எண்ணிக்கை 512 ஆக அதிகரித்தது ,  விரைவாக மெசேஜ்களுக்கு ரிப்ளே செய்ய ஈமோஜிகளை அனுப்புவது போன்ற பல அப்டேட்டுகளை மெட்டா நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

  Read More: கொட்டிக்கிடக்கும் ஆபாசப் படங்கள்.. புது சிக்கலில் மாட்டும் ட்விட்டர்!

   முன்னதாக இந்த வரிசையில் வாட்ஸ் அப் பயனர்களைப் பாதுகாக்கவும், வாட்ஸ் அப் எப்போதும் பயனர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் வகையில் புதிய பிரைவசி அம்சங்களை ஏற்கனவே வெளியிட்டிருந்தது. இந்நிலையில் தான், தற்போது வாட்ஸ் அப் புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. என்னென்ன அம்சங்கள் இடம் பெற்றுள்ளது? பயனர்களுக்கு எந்த வகையில் உதவியாக இருக்கும்? என்பது குறித்து இங்கே விரிவாகத் தெரிந்துக் கொள்வோம்.

  தலைப்புகளுடன் இனி புகைப்படங்களை அனுப்பும் வசதி...

  வாட்ஸ் அப் தற்போது அறிமுகம் செய்துள்ள புதிய அப்டேட்டின் படி, இனி நீங்கள் எந்தவொரு புகைப்படம், கிராபிக்ஸ் மற்றும் எந்தவித செய்திகள் அனுப்பினாலும் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாவில் உள்ளது போன்று தலைப்புகளுடன் அனுப்ப முடியும். ' Forward media with a caption என்ற ஆப்ஷனைப் பயன்படுத்தி படங்கள், வீடியோக்கள் மற்றும் கிராபிக்ஸ் பிக்சர்ஸ் போன்றவற்றைத் தலைப்புகளுடன் இனி அனுப்ப முடியும். முன்னதாக பயனர்கள் படங்கள் அனுப்பும் போது அதற்கு கீழே அல்லது தனித்தனியாக எழுத வேண்டிய நடைமுறை தான் இருந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

  Read More: மொத்தமாக ரூ.2200 கோடி ஃபைன்.. அதிகார துஷ்பிரயோகம்.. அடிமேல் அடிவாங்கும் கூகுள்!

  அடுத்தப்படியாக வாட்ஸ் அப்பில், புகைப்படங்களை 'Background blur' and 'Profile photos என்பதின் மூலம் புகைப்படங்களை மங்கலாக்கிக் கொள்ளலாம். நீங்கள் அனுப்பும் புகைப்படத்தில் எது தேவையில்லையோ? அந்த படத்தில் சில பகுதியை எடிட் செய்து நீங்கள் மங்கலாக்க முடியும். தற்போது ஆன்ட்ராய்டு மற்றும் மற்றும் iOS பயனர்களுக்கு இமேஜ் எடிட்டிங் ஆப்சன் உள்ளது. கடந்த ஜுன் முதல் இது நடைமுறையில் உள்ளது. மேலும் பிற அம்சங்கள் பீட்டா சோதனையில் உள்ளதால் அப்டேட்டுகளுடன் அனைத்து வாட்ஸ் அப் மொபைல் பயனர்களுக்கும் விரைவில் கிடைக்கவுள்ளது.

  மேலும் வாட்ஸ் அப்பில் வரவிருக்கும் புதிய அம்சத்தின் படி, உங்களது புரோஃபைல் புகைப்படங்களை அனைவரும் பார்க்க முடியும். ஒரு வேளை  உங்களது புகைப்படத்தை யாரும் பார்க்க விரும்பவில்லை என்றால் அதற்கான ஆப்சனும் உள்ளது. எனவே இந்த புதிய அம்சங்கள் வாட்ஸ் அப் பயனர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை.

  Published by:Srilekha A
  First published:

  Tags: WhatsApp, Whatsapp Update