ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

அடடே.. ஸ்டேட்டஸில் இப்படி ஒரு வசதியா? சூப்பர் அப்டேட்ஸை கொண்டு வரும் வாட்ஸ் அப்!

அடடே.. ஸ்டேட்டஸில் இப்படி ஒரு வசதியா? சூப்பர் அப்டேட்ஸை கொண்டு வரும் வாட்ஸ் அப்!

தற்போது இது iOS பீட்டா பயனர்களிடம் மட்டும் சோதிக்கத் தொடங்கியுள்ளது. இந்த புதிய வசதியின் மூலம் பயனர்கள் 30 வினாடிகள் வரை குரல் குறிப்பை இடுகையிட முடியும்.

தற்போது இது iOS பீட்டா பயனர்களிடம் மட்டும் சோதிக்கத் தொடங்கியுள்ளது. இந்த புதிய வசதியின் மூலம் பயனர்கள் 30 வினாடிகள் வரை குரல் குறிப்பை இடுகையிட முடியும்.

தற்போது இது iOS பீட்டா பயனர்களிடம் மட்டும் சோதிக்கத் தொடங்கியுள்ளது. இந்த புதிய வசதியின் மூலம் பயனர்கள் 30 வினாடிகள் வரை குரல் குறிப்பை இடுகையிட முடியும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

வாட்ஸ்அப் பயனர் அனுபவத்தை மேம்படுத்த பல புதிய அம்சங்களை உருவாக்கி வருகிறது. அதன் வரிசையில் மெசேஜிங் ஆப்ஸ் விரைவில் உங்கள் வாய்ஸ் நோட்டை ஸ்டேட்டஸாகப் பகிர அவசதி ஏற்படுத்த உள்ளது.

தற்போது, ​​வாட்ஸ்அப் பயனர்கள் ஸ்டேட்டஸ் அப்டேட்களாக படங்கள் மற்றும் வீடியோக்களை மட்டுமே பகிர்ந்து வருகின்றனர். தற்போது திட்டமிட்டுள்ள வசதியை வாட்ஸ்அப் செயலியின் iOS பீட்டா பதிப்பில் சோதித்து வருகிறது.

Wabetainfo இன் கூற்று படி, உங்கள் நிலைப் புதுப்பிப்பில் குரல் குறிப்பைப் பகிரும் திறனை WhatsApp செய்து வருகிறது. ஆண்ட்ராய்டுக்கான வாட்ஸ்அப் பீட்டாவில் இந்த அம்சம் இன்னும் தயாரிக்கப்படவில்லை. தற்போது இது iOS பீட்டா பயனர்களிடம் மட்டும் சோதிக்கத் தொடங்கியுள்ளது. இந்த புதிய வசதியின் மூலம் பயனர்கள் 30 வினாடிகள் வரை குரல் குறிப்பை இடுகையிட முடியும்.

இதையும் படிங்க: வாட்ஸ் ஆப் பயன்படுத்துவோரின் 50 கோடி பேரின் தகவல்களை விற்ற ஹேக்கர்!

ஸ்டேட்டஸில் உங்கள் கருத்துகளைத் தட்டச்சு செய்யக்கூடிய இடத்திற்குக் கீழே தோன்றும் மைக்ரோஃபோன் ஐகானை அழுத்தி உங்கள் குரல் பதிவுகளை ரெகார்ட் செய்து பயன்படுத்தலாம். உங்கள் தனியுரிமை அமைப்புகளுக்குள் நீங்கள் தேர்வு செய்யும் நபர்களுடன் மட்டுமே உங்கள் குரல் நிலைப் புதுப்பிப்புகள் பகிரப்படும் என்றும் அவை எப்போதும் என்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்படும் என்றும் WhatsApp பீட்டா தெரிவித்துள்ளது.

இந்த அம்சம் உருவாக்க நிலையில் உள்ளது சோதனைக்காக சில பயனாளர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. சோதனை செய்து முடித்தபின் அனைவர்க்கும் இந்த வசதி வழங்கப்படும்.

WhatsApp டெஸ்க்டாப் பதிப்பிற்கு அழைப்புகள் வசதியை கொண்டு வர நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் போன் இல்லாமல் பயனர்கள் டெஸ்க்டாப் பயன்பாட்டிலிருந்து நேரடியாக அழைப்புகளைச் செய்ய முடியும். அழைப்புகள் தாவல் டேப் டெஸ்க்டாப் பயன்பாட்டில் பயனர்களின் அழைப்பு வரலாற்றையும் அழைப்பு அட்டையில் உள்ள அழைப்பைப் பற்றிய அனைத்து தகவல்களையும் காண்பிக்கும். இருப்பினும், இந்த அம்சமும் தற்போது உருவாக்க நிலையில் உள்ளது. பீட்டா பயன்பாட்டாளர்களுக்கு மட்டும் கிடைக்கிறது.


First published:

Tags: Voice record, Whatsapp Update