ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

இனி வாய்ஸ் நோட்டையும் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸாக வைக்கலாம் - வேற லெவல் அப்டேட்..!

இனி வாய்ஸ் நோட்டையும் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸாக வைக்கலாம் - வேற லெவல் அப்டேட்..!

வாய்ஸ் நோட் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ்

வாய்ஸ் நோட் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ்

Whats app update | புதிய அம்சம்  மக்கள் தங்கள் உள்ளடக்கத்தை  சிறந்த முறையில் விளம்பரப்படுத்த உதவும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

வாட்ஸ் ஆப் நிறுவனம் சமீப காலமாக அதிகப்படியான அப்டேட்டுகளை தனது பயனர்களுக்கு வழங்கி வருகிறது. அவதார்களை ப்ரொபைல் படமாக வைப்பது, தனக்கு தானே செய்தி அனுப்பும் அம்சம், ஒரே வாட்ஸ் அப்பை இரண்டு டிவைஸ்களில் பயன்படுத்துவது என்று பல அப்டேட்கள் வந்த நிலையில் இப்பொது புதிய அப்டேட் ஒன்றை கொண்டு வந்துள்ளது.

வாட்ஸ் ஆப் மூலம் படம், வீடியோ, லிங்க் போன்றவற்றை ஸ்டேட்டஸாக வைத்து வந்த நமக்கு மற்றொரு விதத்தில் ஸ்டேட்டஸ் வைக்க வாய்ப்பளிக்கிறது.என்ன என்று யோசிக்கிறீர்களா? வாய்ஸ் நோட் தாங்க அது.

டைப் பண்ண கஷ்டப்படும் நபர்களானாலும் சரி, பெரிய செய்தியை குறைந்த நேரத்தில் தெளிவாக சொல்ல நினைப்பவர்களுக்கும் வாய்ஸ் நோட் தான் சரியாக கைகொடுக்கும். இது வரை தனிப்பட்ட அரட்டைகளில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பிக்கொண்டு இருந்தோம். அதை பலருக்கு தெரியப்படுத்த பகிர்ந்து கொண்டு இருந்தோம்.

அதை எளிதாகும் விதமாக குரல் நிலை அம்ச ஸ்டேட்டஸ் ஆக வைக்கும் புதிய அம்சத்தை வாட்ஸ் ஆப் கொண்டுவந்துள்ளது. புதிய அம்சம்  மக்கள் தங்கள் உள்ளடக்கத்தை  சிறந்த முறையில் விளம்பரப்படுத்த உதவும். உதாரணமாக, யாராவது தங்கள் பாடலை தொடர்புகளுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினால், அவர்கள் ஸ்டேட்டஸில் குரல் நிலை அம்சத்தைப் பயன்படுத்தி அதைப் பதிவிடலாம்

இந்த புதிய அம்சம் WaBetaInfo  2.22.21.5 ஆண்ட்ராய்டு பீட்டா செயலியில் கொண்டுவரப்பட்டுள்ளது. சோதைனைக்காக பீட்டா பயனாளர்களுக்கு வழங்கப்படும் இந்த அம்சம் விரைவில் அணைத்து பயனாளர்களுக்கு விரிவாக்கப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதே போல குரல் நிலை அம்ச ஸ்டேட்டஸையும் மற்ற பட, வீடியோ ஸ்டேட்டஸ்கள் போலவே யார் கேட்க வேண்டும், யாருக்கு தெரியக்கூடாது என்பதை கட்டுப்படுத்தலாம். ஆனால் அதில் திருத்தம் செய்யும் வாய்ப்பு குறித்து எந்த தகவலும் இல்லை.

இருப்பினும், இந்த அம்சத்திற்கு நேரக் கட்டுப்பாடும் உள்ளது. மக்கள் குரல் குறிப்பை 30 வினாடிகளுக்கு மட்டுமே பதிவு செய்ய முடியும். மேலும், நீங்கள் தற்போது வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸாக இடுகையிடும் படங்கள் அல்லது வீடியோக்களில் நடப்பதைப் போலவே, நிலைப் பிரிவு வழியாகப் பகிரப்படும் குரல் குறிப்புகள் 24 மணிநேரத்திற்குப் பிறகு தானாகவே நீக்கப்படும். அவற்றைப் பதிவேற்றிய பிறகும் குரல் நிலையை நீக்குவதற்கான விருப்பம் இருக்கும்.

First published:

Tags: Voice record, Whatsapp Update