Home /News /technology /

டெலிகிராமின் முக்கிய அம்சத்தை காப்பி அடிக்கப்போகும் வாட்ஸ் அப்

டெலிகிராமின் முக்கிய அம்சத்தை காப்பி அடிக்கப்போகும் வாட்ஸ் அப்

Telegram

Telegram

Telegram v WhatsApp | வாட்ஸ்அப்பின் தாய் நிறுவனமான மெட்டா அவ்வப்போது வாட்ஸ் அப்பில் புதிது புதிதாக அப்டேட்களை அறிமுகப்படுத்தி வருகிறது. சமீபத்தில் கூட வாட்ஸ்அப் செயலியில், ஃபேஸ்புக் பக்கத்தைப் போல கவர் போட்டோ வைக்கும் வசதியையும், அனிமேஷன் இமோஜிக்களை கொண்டு வரும் முயற்சியிலும் மெட்டா நிறுவனம் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

மேலும் படிக்கவும் ...
உலகம் முழுவதும் மில்லியன் கணக்கில் யூஸர்களைக் கொண்டுள்ள வாட்ஸ் அப் செயலிக்கு போட்டியாக டெலிகிராம் விளங்குகிறது. வாட்ஸ் அப் மூலம் எப்படி குறுஞ்செய்திகளோடு, வீடியோ, புகைப்படங்கள், வாய்ஸ் மெசெஜ், குரூப் சேட்டிங் போன்ற வசதிகளை யூஸர்கள் அனுபவிக்கிறார்களோ, அதை விட அதிகமாகவே டெலிகிராமில் கிடைக்கிறது.

டெலிகிராம் மூலம் நீண்ட மற்றும் கலர் திருத்தம் செய்து வீடியோக்களை அனுப்ப முடியும், வாட்ஸ் அப் போல் செய்திகளை குவிக்காமல் டெலிகிராமில் இவ்வளவு நேரத்திற்கு ஒருமுறை மட்டுமே செய்திகள் வர வேண்டும் என குரூப் அட்மின் செட் செய்யலாம் என பல்வேறு வசதிகளை அடுக்கிக்கொண்டே செல்லலாம்.

அப்படி டெலிகிராமில் மிகவும் முக்கிய வசதியாக ‘போல்ஸ்’ சேவை பார்க்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட டெலிகிராம் குழுவிற்கு நீங்கள் நிர்வாகியாக இருந்தால், அதில் வினாடி வினா, வாக்கெடுப்பு போன்றவற்றை இந்த ‘போல்ஸ்’ மூலம் அமைக்கலாம். ட்விட்டரில் எப்படி கருத்துக்கணிப்புகள் நடத்தப்படுகிறதோ அதைப் போல் இதுவும் செயல்படுகிறது. இந்த சிறப்பம்சத்தை விரைவில் வாட்ஸ் அப்பில் கொண்டு வர மெட்டா நிறுவனம் முயன்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டெலிகிராம் செயலியில் உள்ள வாக்கெடுப்பு அம்சத்தை வாட்ஸ் அப்பிலும் கொண்டு வருவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும், முதலில் ஐபோன் யூஸர்களுக்கு இந்த அம்சம் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது

வாட்ஸ்அப்பின் தாய் நிறுவனமான மெட்டா அவ்வப்போது வாட்ஸ் அப்பில் புதிது புதிதாக அப்டேட்களை அறிமுகப்படுத்தி வருகிறது. சமீபத்தில் கூட வாட்ஸ்அப் செயலியில், ஃபேஸ்புக் பக்கத்தைப் போல கவர் போட்டோ வைக்கும் வசதியையும், அனிமேஷன் இமோஜிக்களை கொண்டு வரும் முயற்சியிலும் மெட்டா நிறுவனம் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகின.



தற்போது WABetaInfo நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின் படி, வாட்ஸ்அப் புதிய ‘வாக்கெடுப்பு’ (Poll) அம்சத்துடன் வரக்கூடும். புதிய அம்சம், குழு அரட்டைகளில் மட்டுமே பொருந்தக்கூடிய எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷனை பயன்பாட்டை கொண்டிருக்கும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read : வாட்ஸ் அப்பில் உங்களை பிளாக் செய்தவர்களுக்கு மெசேஜ் அனுப்புவது எப்படி? ஈஸியான ட்ரிக்ஸ்!

இந்த புதிய அம்சம், வாட்ஸ் அப் குழுவில் உள்ள உறுப்பினர்களை வாக்களிக்கவும், அதைப் பார்க்கவும், மற்றும் முடிவுகளை அறியவும் மட்டுமே உதவும் என்றும், டெலிகிராமை விட கூடுதலாக வசதிகளை சேர்ப்பது பற்றி வாட்ஸ் அப் நிறுவனம் ஆராய்ந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வாட்ஸ் அப் செயலியில் புதிய கருத்துக்கணிப்பு அம்சம் முதலில் ஆப்பிள் ஐபோன்களுக்கு அறிமுகப்படுத்தப்படும் என்றும், முதல் சுற்று வெளியிட்டிற்கு பிறகு டெஸ்க்டாப் மற்றும் ஆன்ட்ராய்டு யூஸர்களுக்கான பதிப்பு வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது.

Also Read : வாய்ஸ் நோட்ஸ்களை ரெக்கார்டிங் செய்வதில் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ள WhatsApp..

டெலிகிராமில் உள்ள மிக முக்கிய அம்சமான ‘போல்ஸ்’ வசதியை வாட்ஸ் அப்பில் கொண்டு வர மெட்டா நிறுவனம் தீவிரமாக முயன்றுவருவதாகவும், விரைவில் வாட்ஸ் அப் யூஸர்கள் செல்போனை அப்டேட் செய்ய காத்திருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Published by:Selvi M
First published:

Tags: Technology, Telegram, WhatsApp

அடுத்த செய்தி