வாட்ஸ் அப் என்பது வெறுமனே மெசேஜ், ஃபோட்டோ, வீடியோ மற்றும் டாகுமெண்ட் போன்றவற்றை அனுப்புவதற்கான தளமாக முன்பு இருந்த நிலையில், தற்போது நீங்கள் சாட் செய்யும்போதே உங்கள் நண்பர்களுக்கு அல்லது உறவுகளுக்கு பணம் அனுப்புவதற்கான வசதியும் இருக்கிறது.
உங்கள் கான்டாக்ட் லிஸ்ட்டில் உள்ள யாருக்கு வேண்டுமானாலும் நீங்கள் பணம் அனுப்பலாம். இது யுபிஐ சேவையை அடிப்படையாகக் கொண்டது. நீங்கள் பணம் அனுப்புவது மட்டுமல்லாமல், பணமும் பெற்றுக் கொள்ளலாம். முன்னதாக, கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வாட்ஸ் அப் பே சேவை சோதனை அடிப்படையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. பின்னர் 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், வாட்ஸ் அப் பே சேவையை படிப்படியாக அமல்படுத்துவதற்கு ஒப்புதல் கிடைத்தது. முதல் கட்டமாக, நாட்டில் உள்ள 10 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு இந்தச் சேவையை வாட்ஸ் அப் வழங்கி வருகிறது.
வாட்ஸ் அப் பே சேவையை பெறுவது எப்படி?
வாட்ஸ் அப் பே சேவையை பயன்படுத்துவதற்கு யூஸர் முதலில் கான்டாக்ட்ஸ் லிஸ்ட்டில் உள்ள ஒருவருக்கு பணம் அனுப்ப வேண்டும். இந்தக் கோரிக்கை மறுமுனையில் உள்ள வாடிக்கையாளருக்கு கிடைத்ததும், அந்த யூஸர் வாட்ஸ் அப்-பில் யுபிஐ அக்கவுண்ட் நிறுவி கொள்ளலாம்.
நீங்கள் கான்டாக்ட் லிஸ்ட்டில் உள்ள யாருக்கு வேண்டுமானாலும் பணம் அனுப்பலாம் அல்லது தொடர்புடையவர்களின் யுபிஐ ஐடியை என்டர் செய்வதன் மூலமாகவும் நீங்கள் பணம் அனுப்பலாம். கான்டாக்ட் லிஸ்ட்டில் இல்லாத ஒருவருக்கு, அவரது க்யூ ஆர் கோடு ஸ்கேன் செய்வதன் மூலமாகவும் நீங்கள் பணம் அனுப்பி வைக்கலாம்.
ஒருவேளை நீங்கள் வாட்ஸ் பே சேவைக்கு புதியவர் என்றால் உங்களுக்கான தகவல் தான் இது. உங்கள் சாட் பாக்ஸ்-இல் உள்ள ரூபாய் அடையாளத்தை கிளிக் செய்வதன் மூலமாக நீங்கள் பணம் அனுப்ப தொடங்கலாம்.
வாட்ஸ் அப் பே சேவையில் ப்ரைமரி அக்கவுண்ட் மாற்றுவது எப்படி :
ஆண்டிராய்டு ஃபோன்களில்:
உங்கள் ஃபோனில் வாட்ஸ் அப்-ஐ திறக்கவும்.
மோர் ஆப்ஷன்ஸ் என்பதன் மீது டேப் செய்யவும்.
டிராப் டவுன் ஆப்ஷனில் இருந்து பேமென்ட் என்பதை தேர்வு செய்யவும்
இப்போது கிடைக்கப் பெறும் ஆப்ஷனில், நீங்கள் ப்ரைமரியாக பயன்படுத்த விரும்பும் அக்கவுண்ட்-ஐ தேர்வு செய்யவும்.
இப்போது ‘மேக் பிரைமரி அக்கவுண்ட்’ என்பதை டேப் செய்யவும்.
ஐஃபோன்களில்
வாட்ஸ் அப் ஓப்பன் செய்து, செட்டிங்க்ஸ் செல்லவும்.
செட்டிங்க்ஸ்-இல் பேமெண்ட்ஸ் என்பதன் மீது கிளிக் செய்யவும்.
ரிலெவெண்ட் ஃபேங்க் அக்கவுண்ட் என்பதன் மீது டேப் செய்யவும்
மேக் பிரைமரி அக்கவுண்ட் என்பதன் மீது கிளிக் செய்யவும்
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.