• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • Beeper : இனி இந்த ஒரு ஆப் போதும்..வாட்ஸ் அப், டெலிகிராம், ட்விட்டர் எல்லா ஆப்பையும் ஒரே இடத்தில் ஆபரேட் செய்யலாம்..

Beeper : இனி இந்த ஒரு ஆப் போதும்..வாட்ஸ் அப், டெலிகிராம், ட்விட்டர் எல்லா ஆப்பையும் ஒரே இடத்தில் ஆபரேட் செய்யலாம்..

பீப்பர் செயலி

பீப்பர் செயலி

ஒவ்வொரு செயலியையும் தனித்தனியாக ஆப்ரேட் செய்ய பயனர்கள் சிரமப்படுவதால் வாட்ஸ் அப், ட்விட்டர், டெலிகிராம் போன்ற செயலிகளை ஒரே இடத்தில் ஆப்ரேட் செய்யும் வகையில் பீப்பர் செயலி அறிமுகமாகி உள்ளது.

  • Share this:
பீப்பர் செயலியில் வாட்ஸ் அப், சிக்னல், டெலிகிராம் செயலிகளின் மெசேஜ்களையும் பார்க்க முடியும் என தெரிவித்துள்ள அந்நிறுவனம், மைக்ரோசாப்ட் மற்றும் வீ சாட் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறியுள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் பீப்பர் செயலி டெக் உலகில் அறிமுகப்படுத்தப்பட்டது. டிவிட்டர், பேஸ்புக் மெசெஞ்சர், ஆப்பிள் மெசஞ்சர், கூகுள் ஹேங்அவுட்ஸ் உள்ளிட்ட பல்வேறு மெசேஜ் செயலிகள் யூசர்கள் பயன்படுத்தி வருவதால், அவற்றின் நோட்டிபிகேஷன் மற்றும் மெசேஜ்களை படிப்பதில் சோர்வடைகின்றனர். மேலும், ஒவ்வொரு செயலியை பார்ப்பதற்கும் ஸ்மார்ட்போனில் ஒவ்வொரு பக்கத்துக்கு செல்ல வேண்டியிருப்பதால், பல செயலிகளை பல நாட்கள் பயன்படுத்தாமல் இருக்கும் நிலை உள்ளது.

இதனை கருத்தில் கொண்ட பெபல் ஸ்மார்ட்வாட்ச் நிறுவனம், Beeper App என்ற புதிய செயலியை உருவாக்கியுள்ளது. டிவிட்டர், பேஸ்புக், மெசஞ்சர், டெலிகிராம், சிக்னல், ஸ்கைப், கூகுள் ஹேங்கவுட்ஸ், ஐ.ஆர்.சி, எஸ்.எம்.எஸ் 15 மெசேஜ் செயலிகள் இந்த ஒரே செயலியில் கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய பீப்பர் செயலியின் நிறுவனர் எரிக் மிகிகோவ்ஸ்கி, மெசேஜ் செயலிகளின் HUB -ஆக பீப்பர் செயலி இருக்கும் என தெரிவித்துள்ளார். ஆனால், இந்த செயலி மற்ற செயலிகளைப்போல் இலவசம் கிடையாது. ஒவ்வொரு மாதம் 10 டாலரை யூசர்கள் கட்டணமாக செலுத்த வேண்டும்.

ALSO READ: சமூக வலைத்தளங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு: உறுதியளித்த முன்னணி நிறுவனங்கள்!

எந்த மெசேஜ் செயலியில் நோட்டிபிகேஷன் வந்தாலும், பீப்பர் செயலியில் இருந்தவாறு அந்த ஆப்களில் பதில் அளிக்கலாம். கடந்த சில மாதங்களாக பீப்பர் செயலியின் செயல்பாடு குறித்து வெளியாகாமல் இருந்த நிலையில், அதன் நிறுவனர் எரிக் மிகிகோவ்ஸ்கி, பீப்பர் செயலியை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார். அனைத்து செயலிகளும் ஒரே தளத்தில் இயங்கும்போது, அதனை பயன்படுத்தும் ஆன்டிராய்டு, ஆப்பிள் போன் யூசர்கள், மேக் யூசர்கள் பல்வேறு நடைமுறை சிக்கல்களை எதிர்கொண்டு வருவது தெரியவந்துள்ளதாக கூறியுள்ளார்.

யூசர்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப பீப்பர் செயலியில் புதிய அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், அந்த சிக்கல்களை 3 விதமாக நிவர்த்தி செய்து வருவதாக விளக்கம் அளித்துள்ளார். முன்கூட்டியே பணம் செலுத்தியவர்கள், சந்தாதாரர்கள், பதிவு செய்தவர்கள் என்ற அடிப்படையில் கோரிக்கைகள் தீர்க்கப்பட்டு வருவதாக எரிக் கூறியுள்ளார். வாட்ஸ் அப், சிக்னல் செயலிகளும் பீப்பர் செயலியில் இடம்பெற்றுள்ளதாக கூறியுள்ள அவர், மைக்ரோசாப்ட் (Microsoft), வீ சாட் (Wechat), லிங்ட் இன் (Linked in), குரூப் மீ (Group Me)உள்ளிட்ட மெசேஜ் தளங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், விரைவில் அந்த செயலிகளும் பீப்பரில் இடம்பெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: