பெண் தொழில் முனைவோர்களுக்காக நிதி ஆயோக் உடன் இணைந்த வாட்ஸ்அப்!

தொழில் துறையில் வலம் வரும் பெண்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் விருதுக்கு ஐநா-வும் நிதி ஆயோக் உடன் இணைந்துள்ளது.

பெண் தொழில் முனைவோர்களுக்காக நிதி ஆயோக் உடன் இணைந்த வாட்ஸ்அப்!
மாதிரிப்படம்
  • News18
  • Last Updated: July 25, 2019, 8:17 PM IST
  • Share this:
இந்தியாவில் பெண் தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் நிதி ஆயோக் உடன் வாட்ஸ்அப் நிறுவனம் கூட்டணி அமைத்துள்ளது.

இந்தியாவில் பெண் தொழில் முனைவோர்கள் வளரவும் அவர்களை மேம்படுத்தவும் இந்தக் கூட்டணி புதிய திட்டங்களை செயல்படுத்த உள்ளது. மேலும், பெண் தொழில் முனைவோர்கள் சந்திக்கும் சவால்களைக் களையவும் வருடாந்திர திட்டங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன.

நிதி ஆயோக் வழங்கும் ‘இந்தியாவின் மாற்றத்துக்கு உதவிய பெண்கள்’ விருது வழங்க வாட்ஸ்அப் நிறுவனம் 1 லட்சம் அமெரிக்க டாலர்களை நிதி ஆகத் தருவதாகவும் ஒப்புக்கொண்டுள்ளது. இதுகுறித்து வாட்ஸ்அப் தலைவர் கேத்கார்ட் கூறுகையில், “இந்தியாவின் வருங்கால பெண் தொழிலதிபர்களையும் தலைவர்களையும் ஊக்குவிக்கும் பணியில் வாட்ஸ்அப் ஈடுபட்டுள்ளது பெருமை அளிக்கிறது.


ஒரு வலிமையான பொருளாதாரம் அமைய சிறு வணிகம் மிகவும் முக்கியம் ஆகும். அந்த வகையில் வாட்ஸ்அப் நிறுவனத்தின் ஒரு சிறு உதவி இந்தியாவின் வருங்கால பெண் சாதனையாளர்கள் உருவாக்கும் என்பதில் மிகவும் பெருமை அடைகிறோம்” என்றார்.

நடைமுறைச் சவால்களைத் தகர்த்து சாதனையாளர்களாக தொழில் துறையில் வலம் வரும் பெண்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் விருதுக்கு ஐநா-வும் நிதி ஆயோக் உடன் இணைந்துள்ளது. தனியார் நிறுவனம் ஒன்றுக்கும் அரசுக்கும் ஏற்படும் புரிந்துணர்வு ஒப்பந்தம் பல கட்ட பொருளாதார உதவியையும் வளர்ச்சியையும் அளிக்கும் என்கிறார் நிதி ஆயோக் தலைவர் அமிதாப் கண்ட்.

மேலும் பார்க்க: அமேசானுக்குப் போட்டியாக அறிமுகமானது கூகுள் ஷாப்பிங்..!
First published: July 25, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்