சாட்டிங் இன்னும் ஜாலியாகும் - ஸ்டிக்கர்களை களமிறக்கிய வாட்ஸ்அப்

வாட்ஸ்அப் செயலியில் பயனர்கள் மிகவும் எதிர்பார்த்த ஸ்டிக்கர்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. விரைவில், இந்த வசதியை ஆன்ட்ராய்டு பயனர்கள் அனுபவிக்கலாம்.

Web Desk | news18
Updated: October 26, 2018, 6:54 PM IST
சாட்டிங் இன்னும் ஜாலியாகும் - ஸ்டிக்கர்களை களமிறக்கிய வாட்ஸ்அப்
வாட்ஸ் அப் செயலி
Web Desk | news18
Updated: October 26, 2018, 6:54 PM IST
வாட்ஸ்அப் செயலியில் பயனர்கள் மிகவும் எதிர்பார்த்த ஸ்டிக்கர்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. விரைவில், இந்த வசதியை ஆன்ட்ராய்டு பயனர்கள் அனுபவிக்கலாம்.

உலகம் முழுவதும் அதிகம் பேரால் பயன்படுத்தப்படும் செயலிகளில் ஒன்றான வாட்ஸ் அப் சந்தையில் தனக்கென உள்ள மதிப்பை தக்க வைக்க பல புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. சமீபத்தில், இரவிலும் கண்கூசாமல் பயன்படுத்துவதற்கு ஏதுவான டார்க் மோட், செயலியை திறக்காமலேயே திரையிலேயே பதில் அனுப்பும் வசதிகள் கொண்டு வரப்பட்டன.

(Photo: WhatsApp)


தற்போது, பயனர்கள் மிகவும் எதிர்பார்த்த ஸ்டிக்கர் அம்சங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இன்னும், ஒரு வாரத்தில் இது அப்டேட் ஆக வழங்கப்பட உள்ளது. ‘ஹைக்’ செயலியில் இருந்த ஸ்டிக்கர் வசதிகள் பெரும் வரவேற்ப்பை பெற்றது. தமிழ் சினிமாவின் டயலாக்குகளை ஹீரோக்கள் கூறுவது போல எல்லாம் ஸ்டிக்கர்கள் வலம் வந்தன. இதனால், சாட்டிங்குகள் வெகு ஜாலியாக மாறியது.

(Photo: WhatsApp)


ஸ்டிக்கர் அம்சங்களுக்கு வரவேற்பு இருப்பதினால், வாட்ஸ்அப் பயனாளிகளுக்கு ஏற்றது போல இணைத்துள்ளது. விரைவில், இது அடுத்த கட்டத்துக்கு செல்லலாம். இத்துடன் வாட்ஸ்அப் செயலியில் ஸ்டிக்கர் ஸ்டோர் சேர்க்கப்பட்டுள்ளது. பயனர்கள் இதில் இருந்து ஸ்டிக்கர்களை டவுன்லோடு செய்து பயன்படுத்தலாம்.

மேலும் செய்திகள்..
Loading...
#CBIvsCBI இது என்ன புது மாதிரியான உளவு?

தமிழக கபடி வீரர் அருண் அரசுப்பணியில் இருந்து நீக்கம்

Also See..

First published: October 26, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...