Home /News /technology /

ஒரே நேரத்தில் 2 ஸ்மார்ட்போன்களில் சாட்டிங் - Whatsapp-ல் புதிய அறிமுகம்

ஒரே நேரத்தில் 2 ஸ்மார்ட்போன்களில் சாட்டிங் - Whatsapp-ல் புதிய அறிமுகம்

WhatsApp

WhatsApp

WhatsApp | ஸ்மார்ட்போன் பயன்பாடு என்பது தற்போது அனைவரிடமும் பெருகிவருகிறது. சாட்டிங்கிற்காக நாம் SMS பயன்படுத்திய நாட்கள் சென்று வெகுநாட்கள் ஆகிவிட்டது. இப்போதெல்லாம் வாட்ஸ்அப் தான் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.

  வாட்ஸ்அப் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதிகளைத் தொடர்ந்து சேர்க்க வேண்டும் என்பதில் ஆர்வமாக செயல்பட்டு வருகிறது, மேலும் பல சாதனங்களுடன் இந்த வாட்ஸ்அப்பை இணைப்பது தற்போதைய ஆண்டுகளில் இந்த நிறுவனம் எடுத்து வரும் மிக முக்கியமான முயற்சியில் ஒன்று என்றே சொல்லலாம்.

  இந்த வாட்ஸ்அப் மூலமாக போட்டோ, வீடியோ,மெஸ்சேஜ் என பல வழிகளில் பயன் பட்டாலும் ஒரே வாட்ஸ்அப் கணக்கை நம்மால் இரண்டு ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்த முடியாது. இதை லாப்டாப், டேப்லெட்டுகள் வசதியுடன் மட்டுமே பயன்படுத்த முடியும்.

  தற்போது இந்த நிறுவனம் வாட்ஸ்அப் செயலியின் இத்தகைய பயன்பாட்டு அம்சங்களை பரிசோதிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் எதிர்காலத்தில் வாட்ஸ்அப்பில் பல மாற்றங்கள் வரக்கூடும். இரண்டு ஆன்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கு இடையில் அரட்டை ஒத்திசைவு(chat sync) அம்சத்தை சோதிக்கத் தொடங்கியதால், அது எதிர்காலத்தில் மாறக்கூடும்.

  இதில் நாம் எடுக்கப்படும் ஒரு ஸ்க்ரீன்ஷாட்டை, வாட்ஸ்அப் ஃபில்டர்ஸ் விருப்பத்தை கொண்டு முறையே நான்காக பிரித்துள்ளனர். அவை அன்ரீட் சாட்ஸ், காண்டாக்ட்ஸ், நான் காண்டாக்ட்ஸ் மற்றும் க்ரூப்ஸ். இதன் கீழ் வாட்ஸ்அப் யூசர்கள் தங்கள் தேவைக்கு ஏற்றபடி தங்களது வாட்ஸ்அப் சாட்களை சரிசெய்து கொள்ளலாம்.

  தற்போது இதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதாவது நீங்கள் இரண்டு வெவ்வேறு ஸ்மார்ட்போன்களில் ஒரே வாட்ஸ்அப் எண்ணை பயன்படுத்தலாம், இரண்டிலும் உங்கள் எல்லா செய்திகளும் தானாகவே அப்டேட் ஆகிவிடும்.  விண்டோஸ் வெர்சன் Android பதிப்பு 2.22.15.13 என்ற தளத்திற்கான வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் பரிசோதித்து வருவதாக WABetaInfo நிறுவனம் இந்த வாரம் அறிவித்துள்ளது. யுனிவர்சல் விண்டோஸ் பிளாட்ஃபார்மில் உள்ள வாட்ஸ் அப்-பில் அறிமுகம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், தற்போது விண்டோஸ் நேடிவ் ஆப்-பிற்கான மேம்பாட்டு நிலையில் இந்த பரிசோதனை இருப்பதாகவும் தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

  Also Read : இனி யாரும் தேவையில்லாத மெசேஜ் அனுப்ப முடியாது.. whatsapp-ன் புதிய அப்டேட்

  உங்கள் ஸ்மார்ட்போனில் வைத்திருக்கும் சாட்டின் அளவைப் பொறுத்தே இது அமையும். வயர்லெஸ் மூலம் அதிகமான சாட்கள், அனுப்பப்பட்டால், இரண்டாவது ஸ்மார்ட்போனில் டவுன்லோட் ஆக சிறிது நேரம் ஆகலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

  டவுன்லோட் அம்சம் பயனர்களுக்கு எளிய கருவியாக இருக்கும். குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் மற்றொரு துணை சாதனத்திற்கு அனுப்பும்போது வாட்ஸ்அப் அனைத்து தரவையும் நீக்குகிறது. இந்த பயன்பாடு கூட பீட்டா பதிப்பில் மட்டுமே இருக்கிறது.  ஒரே வாட்ஸ்அப் எண்ணை ios ஃபோன்களில் இயக்குவதற்கும், சாதனங்களுக்கு இடையே உள்ள அனைத்து சாட்களையும் டவுன்லோட் செய்வதற்கும் வாட்ஸ்அப் கண்டுபிடித்திருக்கூடிய தீர்வாக இது அமைந்தாலும், வாட்ஸ்அப் தற்போது ஆண்ட்ராய்டில் உள்ள பல பயனர்கள் தங்கள் சாட்டை பிற சாதனத்திற்கு மாற்ற அனுமதி அளிக்கிறது.

  Also Read : ஒரு போன் கால் மூலம் WhatsApp அக்கவுண்ட் திருடப்படுவது எப்படி.? இதிலிருந்து தப்பிக்கும் வழிகள்!

  2022 மாற்றங்களை அதிகம் விரும்புபவர்களுக்காகவாட்ஸ் அப் சில வாரங்களுக்கு முன்பு தான் இந்த அம்சத்தை அறிவித்தது, இதன் மூலன் ஆன்றாய்டு போனிலிருந்து ஐபோனுக்கு கூட உங்கள் தரவுகளை மாற்றிக் கொள்ளலாம். இந்த பிஸியான [2022] காலகட்டத்தில் மெட்டாவுக்குச் சொந்தமான செய்தியிடல் இயங்குதளத்திற்கு இந்த கூடுதல் அம்சங்களை சேர்த்தது பயன்பாட்டின் புகழ் தொடர்ந்து வளர்ந்து வருவதை வாட்ஸ்அப் உறுதி செய்கிறது.
  Published by:Selvi M
  First published:

  Tags: Technology, Whatsapp Update

  அடுத்த செய்தி