வாட்ஸ் அப் நிறுவனத்தின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து தணிக்கை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்திருப்பதாக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.
மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி, திக்விஜய் சிங்கின் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், தனிநபர் தகவல் பாதுகாப்பில் மத்திய அரசு சமரசம் செய்து கொள்ளாது என்றார்.
மக்களவையில் பேசிய ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல், டீசல் ரயில் என்ஜின்களை மின்சார என்ஜின்களாக மாற்ற நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் தெரிவித்தார். சென்னை ஐசிப் இணைப்புப் பெட்டி தொழிற்சாலையை தனியார்மயமாக்கும் எண்ணம் இல்லை என்றும் பியுஷ் கோயல் தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.