முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / வாட்ஸ்அப் டெஸ்க்டாப் யூஸர்களுக்கு ஹேப்பி நியூஸ் - விரைவில் வருகிறது புதிய அப்டேட்.!

வாட்ஸ்அப் டெஸ்க்டாப் யூஸர்களுக்கு ஹேப்பி நியூஸ் - விரைவில் வருகிறது புதிய அப்டேட்.!

வாட்ஸ்அப்

வாட்ஸ்அப்

WhatsApp Update | வாட்ஸ்அப்-ஐ மொபைல்களில் மட்டுமல்ல டெஸ்க்டாப் ஆப் மூலமும் எண்ணற்ற யூஸர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான யூஸர்களால் பயன்படுத்தப்பட்டு வரும் மெட்டாவுக்கு சொந்தமான வாட்ஸ்அப்பானது நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் பணிபுரியும் அலுவலகம் உள்ளிட்டவற்றுடன் தொடர்பில் இருக்க பெரிதும் உதவ கூடிய இன்ஸ்டன்ட் மெசேஜிங் பிளாட்ஃபார்மாக இருக்கிறது.

ஃபோட்டோக்கள், வீடியோக்கள், டாக்குமென்ட்ஸ், கான்டாக்ட்ஸ்களை ஷேர் செய்ய உதவுவதோடு அன்புக்குரியவர்கள், நெருக்கமானவர்கள், உறவினர்கள், நண்பர்களுடன் பேசவும் உதவுகிறது. கடந்த 2015 முதல் யூஸர்களுக்கு இலவச வாய்ஸ் கால் அம்சத்தை வழங்கி வரும் வாட்ஸ்அப், சில ஆண்டுகளுக்கு முன்பாக இலவச வீடியோ கால் அம்சத்தையும் அறிமுகப்படுத்தியது.

மொபைல் நெட்வொர்க்கைப் பயன்படுத்தி கால்ஸ் செய்வதில் சிரமபடுபவர்களுக்கு வாட்ஸ்அப் கால்ஸ் மிகவும் முக்கியமானது. இன்டர்நெட் டேட்டா இருப்பின் மிகவும் லோ பேண்ட்வித்-ல் வாட்ஸ் அப் ஆடியோ மற்றும் வீடியோ கால்ஸ்களை எளிதாக செய்யலாம். வாட்ஸ்அப்-ஐ மொபைல்களில் மட்டுமல்ல டெஸ்க்டாப் ஆப் மூலமும் எண்ணற்ற யூஸர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

எனினும் டெஸ்க்டாப்பில் வாட்ஸ்அப் பயன்படுத்தும் யூஸர்களுக்கு தற்போது வரை கால்ஸ் செய்யும் ஆப்ஷன் இல்லை. வாட்ஸ்அப்பின் டெஸ்க்டாப் வெர்ஷனை அதிகம் பயன்படுத்தி வரும் லட்சக்கணக்கான யூஸர்கள், கால்ஸ் சப்போர்ட் வேண்டும் என பல மாதங்களாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இவர்களின் கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும் என தெரிகிறது. Wabetainfo வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் ஏற்கனவே ஒரு சில பீட்டா யூஸர்களுக்கு கால்ஸ் செய்வதற்கான tab-ஐ டெஸ்க்டாப் வெர்ஷனில் வாட்ஸ்அப் வழங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

calls tab மூலம் டெஸ்க்டாப்பில் வாட்ஸ்அப் பயன்படுத்தும் யூஸர்கள் தங்களது PC-யில் இருந்து நேரடியாக வாட்ஸ்அப் கால்ஸ் செய்வதற்கான ஆப்ஷனை பெறுவதோடு, தங்களின் கால் ஹிஸ்டரியை பார்க்கும் வகையில் Call History tab-ஐ பெறலாம். இந்த Tab வாய்ஸ் மற்றும் வீடியோ கால்ஸ் ஹிஸ்ட்ரியை சைட்பாரில் பார்க்க அனுமதிக்கிறது.

Also Read : வாட்ஸ்அப்பில் புதிதாக அறிமுகமாகும் டூ நாட் டிஸ்டர்ப் மோட்.!

டெஸ்க்டாப் யூஸர்களுக்கான இந்த புத்தம்புதிய அப்டேட் ஏற்கனவே சில பீட்டா டெஸ்ட்டர்களுக்காக வெளியிடப்பட்டுள்ள நிலையில் கால்ஸ் டேப் அம்சம் விரைவில் வாட்ஸ்அப் வெப் உள்ளிட்ட அனைத்து யூஸர்களுக்கும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய அம்சம் மூலம் கூகுள் மீட் மற்றும் ஜூம் உள்ளிட்டவற்றுக்கு சிறந்த மாற்றாக வாட்ஸ்அப் மாறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read : வாட்ஸ்அப்பில் இப்படி எல்லாம் கூட ட்ரிக்ஸ் இருக்கா..! இது தெரியாமா போச்சே

வாட்ஸ்அப் டெஸ்க்டாப் ஆப் இன்டர்ஃபேஸின் மேல் இடதுபுறத்தில் உள்ள ஸ்டேட்டஸ் மற்றும் நியூ சேட் ஆப்ஷன்களுக்கு இடையே Call tab இருக்கும் என தெரிகிறது. Calls-ஐ கிளிக் செய்வதன் மூலம் டெஸ்க்டாப் வெர்ஷனில் இருந்தே கால்ஸ் செய்வதற்கான ஆப்ஷன் இருக்கும். இதற்கிடையே கால் லிங்க்ஸ் எனப்படும் பயனுள்ள காலிங் டூலை வாட்ஸ்அப் சேர்த்துள்ளது, இது வாட்ஸ்அப் வீடியோ/வாய்ஸ் கால்ஸிற்கான லிங்கை உருவாக்கி, கால்ஸில் சேரும் மற்ற யூஸர்களுடன் ஷேர் செய்ய அனுமதிக்கிறது.

First published:

Tags: Tamil News, Technology, Whatsapp Update