எச்சரிக்கை.. வாட்ஸ்அப்பில் பரவும் வேலை வாய்ப்பு குறித்த மோசடி செய்திகள்

எச்சரிக்கை.. வாட்ஸ்அப்பில் பரவும் வேலை வாய்ப்பு குறித்த மோசடி செய்திகள்

கோப்புப் படம்

கொரோனா ஊரடங்கு காலத்தில் வாட்ஸ்அப் மூலம் வேலை வாய்ப்பு குறித்த மோசடி செய்திகள் அதிகரித்திருக்கின்றன.

  • Share this:
கொரோனா வைரஸ் ஏற்படுத்திய தாக்கத்தினால் இன்று பலரின் அன்றாட வேலைகள் முற்றிலும் மாறிப் போயுள்ளன. இதை ஒருசிலர் பயன்படுத்திக் கொண்டு மோசடி செயலில் ஈடுபட்டு வருகின்றனர். இதுநாள்வரை எஸ்.எம்.எஸ் மற்றும் மின்னஞ்சல் வழியாக மோசடி நடந்ததுபோல இப்போது வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போன்வை அது அரங்கேறி வருகிறது. அட்டகாசமான வேலை வாய்ப்பு, கை நிறைய ஊதியம், இலவச உபகரணங்கள், ஒரு கல்லில் ரெண்டு மாங்காய் போன்ற கவர்ச்சிகர வார்த்தை வித்தைகளைக் காட்டி பலரையும் மோசடிக்காரர்கள் ஏமாற்றி வருகின்றனர்.

இந்தியன் எக்ஸ்பிரஸின் சமீபத்திய அறிக்கை இந்த வகையான வாட்ஸ்அப் செய்திகளில் சிலவற்றைத் தோண்டி எடுத்துள்ளது. வீட்டிலிருந்து வேலை, நல்ல ஊதியம் போன்ற செய்திகளின் பின்புலத்தை இந்நிறுவனம் ஆராய்ந்தது. இதில் 95% போலியான செய்திகள் என்பது தெரியவந்துள்ளது.

அப்படியான செய்திகளுடன் சேர்க்கப்பட்டுள்ள இணைப்புகளை கிளிக் செய்தவர்களின் நிதி விவரங்கள், ஏடிஎம் ரகசிய எண்கள் போன்றவற்றைக் கொடுக்கும்படி அவை கேட்கும் என்றும் அறிக்கை கூறுகிறது. கொரோனாவால் பலரும் வேலை இழந்தார்கள் என்பது நாடறிந்தது. இந்த வாய்ப்பை ஒருசில மோசடி கும்பல்கள் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டது. இந்தியன் எக்ஸ்பிரஸ் இது தொடர்பாக செக் பாயிண்ட் மென்பொருள் டெக்னாலஜிஸ் நிபுணர்களை அணுகியது.

செக் பாயிண்ட் சாப்ட்வேர் டெக்னாலஜிஸ் இந்தியா மற்றும் சார்க் (SAARC) நாடுகளுக்கான நிர்வாக இயக்குநர், சுந்தர் என். பாலசுப்பிரமணியன் பேட்டியளித்தபோது, சைபர் கிரிமினல்கள் ஊரடங்கு காலத்தில் வீட்டிலிருந்து வேலை செய்யலாம் என்று மக்களின் ஆர்வத்தைத் தூண்டி அவர்களை சிக்கலில் தள்ளப் பார்க்கிறார்கள். மோசடி செய்பவர்கள் தங்கள் ஏமாற்று வேலைகளை அதிகரிக்க புதிய நுட்பங்களைப் பயன்படுத்துகின்றனர் என்றார்.

Also read: பனியால் மூடிய இமயமலையின் அற்புதக் காட்சி - வைரலாகும் நாசாவின் புகைப்படம்

இவ்வகை போலிச் செய்திகளுடன் சேர்க்கப்பட்டுள்ள இணைப்புகள் வழக்கமாக உங்களை ஒரு வலைத்தளத்திற்குக் கொண்டுசெல்லும், இது பயனரின் டேட்டாவைக் கேட்கும், நீங்கள் அதை அளித்த பின்னர் உங்களின் தகவல்களை சட்டவிரோத நோக்கத்திற்காகப் மோசடி கும்பல் பயன்படுத்தும் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிக்கை தெரிவித்துள்ளது. இப்போது, உங்கள் ஸ்மார்ட்போனுக்கு இந்தச் செய்திகள் வருவதைத் தடுக்கும் எந்த நுட்பங்களும் செயல்பாட்டில் இல்லை.

வாட்ஸ்அப் எண்ட்-டு-எண்ட் என்கிரிப்ஷனை பயன்படுத்துவதால், இதுபோன்ற செய்திகளின் மூலத்தைக் கண்டறியவும் முடியாது. இருப்பினும், இந்த வகையான செய்திகளிலிருந்து பாதுகாப்பாக இருக்க பயனர்கள் பின்பற்றக்கூடிய சில உதவிக்குறிப்புகள் உள்ளன. இந்தச் செய்திகளைப் புறக்கணிப்பது முதலான சில எளிய வழிமுறைகளை நீங்கள் பின்பற்றினாலே போதும்.

இலவச காசோலை, பரிசு, சலுகை (Free paycheck, gift, offer) போன்றவற்றை வழங்குவதாகக் கூறும் எந்தச் செய்தியையும் நீங்கள் நம்பக்கூடாது. மேலும், பயனர்கள் ஒரு ஆன்டி - வைரஸை தங்கள் சாதனத்தில் வைத்துக்கொள்வது நல்லது. பாதுகாப்பற்ற தளங்களைத் திறந்திருந்தால் அது பயனர்களை எச்சரிக்கும். எப்போதும் நினைவில் கொள்ளுங்கள், இந்த உலகில் எதுவும் இலவசம் இல்லை, எனவே யாராவது ஏதாவது கொடுப்பதாகக் கூறினால் அதைப் புறக்கணிப்பது நன்மை அளிக்கும்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Rizwan
First published: