• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • வாட்ஸ்அப் புதிய கொள்கைகளை ஏற்காவிட்டால் என்ன நடக்கும் ? - அரசுக்கு வாட்ஸ்அப் நிறுவனம் பதில்!

வாட்ஸ்அப் புதிய கொள்கைகளை ஏற்காவிட்டால் என்ன நடக்கும் ? - அரசுக்கு வாட்ஸ்அப் நிறுவனம் பதில்!

வாட்ஸ் அப்

வாட்ஸ் அப்

பெர்சனல் டேட்டா புரொடக்சன் பில் சட்டம் அமலுக்கு வரும் வரை இந்த அனுகுமுறையை நாங்கள் கடைபிடிப்போம். என்று வெளிப்படையாக கூறியுள்ளது.

  • Share this:
    வாட்ஸ்அப் புதிய விதிமுறைகளை ஏற்காத யூசர்களின் கணக்கு கட்டுப்படுத்தப்படாது என்று வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    பேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ் அப் நிறுவனம் தங்களின் யூசர்களுக்கு புதிய சேவை விதிமுறைகளை அறிவித்திருந்தது. அதன் படி யூசர்களின் தகவல்களை சேகரித்து விற்பது தொடர்பான விதிமுறைகள் இடம்பெற்றிருந்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் இது வாட்ஸ்அப் யூசர்களின் பிரைவசியை பாதிக்கும் என பலரும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். முதலில் மேற்கூறிய விதிமுறைகளை ஒப்புக்கொள்ளாத யூசர்களுக்கான சேவை கடந்த மே 15 ஆம் தேதியுடன் நிறுத்தப்படும் என தெரிவித்திருந்தது.

    பின்னர் வாட்ஸ் அப்பின் புதிய விதிமுறைகளை ஏற்காமல் போனாலும் யூசர்களின் கணக்குகள் நீக்கப்படாது என்று விளக்கம் கூறியிருந்தது. ஆனால் இதுகுறித்து யூசர்களுக்கு அவ்வப்போது நோட்டிஃபிகேஷன் வழங்கும் என்றும் தெரிவித்தது. சில வாரங்களுக்கு இந்த நோட்டிஃபிகேசன் வரும் என்றும் அதனை ஒப்புக்கொள்ளாத வாடிக்கையாளர்களின் சேவை படிப்படியாக நிறுத்தப்படும் என்று கூறியிருந்தது.

    வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு அதன் புதிய கொள்கைகள் மற்றும் விதிமுறைகள் குறித்து கடந்த மே 18ம் தேதி மத்திய அரசு கேள்வி எழுப்பியிருந்தது. அதில் வாட்ஸ்அப்பின் புதிய கொள்கைகள் இந்திய சட்டத்தின் மீறுவதாக தெரிவித்திருந்தது. இது குறித்து அரசுக்கு வாட்ஸ்அப் நிறுவனம் அளித்துள்ள பதிலில், பெரும்பாலான வாட்ஸ்அப் யூசர்கள் எங்கள் கொள்கைகள் மற்றும் விதிமுறைகளை ஏற்றுக்கொண்டுவிட்டனர். ஆனாலும் அதனை ஏற்றுக்கொள்ளாத வாட்ஸ்அப் யூசர்ஸின் செயல்பாடுகளை நாங்கள் கட்டுப்படுத்தமாட்டோம்.

    நாங்கள் வாடிக்கையாளர்களுக்கு எங்களது புதிய கொள்கை மற்றும் விதிமுறைகள் குறித்து தொடர்ந்து அறிவுறுத்துவோம். வாட்ஸ்அப்பின் புதிய அணுகுமுறை அனைத்து யூசர்களுக்கு வணிகத்துடன் தொடர்பு கொள்ள விரும்புகிறார்களா? இல்லையா? என்பதை தேர்வு செய்வதை வலுப்படுத்தும். பெர்சனல் டேட்டா புரொடக்சன் பில் சட்டம் அமலுக்கு வரும் வரை இந்த அனுகுமுறையை நாங்கள் கடைபிடிப்போம். என்று வெளிப்படையாக கூறியுள்ளது.

    முதன்முதலில், புதிய விதிமுறைகளை ஒப்புக்கொள்வதற்கு யூசர்களுக்கு ஆரம்பத்தில் பிப்ரவரி 8 வரை காலஅளவு வழங்கப்பட்டது. ஆனால் பல சர்ச்சைகளுக்கு பிறகு, வாட்ஸ்அப் யூசர்களின் காலக்கெடுவை மே15 வரை நீட்டித்தது குறிப்பிடத்தக்கது. வாட்ஸ்அப்-ஐ இதுவரை சுமார் 500 மில்லியனுக்கும் அதிகமான யூசர்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது கொரோனா பரவல், மற்றும ஊரடங்கு காரணமாக பெரும்பாலான நிறுனங்கள் தங்கள் பணியாளர்களை வீட்டில் இருந்தபடியே பணி செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது.

    இந்நிலையில் பணியாளர்களுடன் தொடர்புகொள்ள வாட்ஸ்அப் செயலியையே நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் வாட்ஸ்அப் செயலி அறிவித்துள்ள புதிய கொள்கைகள் மற்றும் விதிமுறைகளால் குழப்பம் நிலவியது. இருப்பினும் தற்போது யூசர்களின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தாது என வாட்ஸ அப் அறிவித்துள்ளதால் அவர்களுக்கு சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: