வாட்ஸ் அப்பில் வீடியோ கால் பேசிக் கொண்டே பிரவுஸிங்.. புதிய வசதி அறிமுகம்

வாட்ஸ் அப்பில் வீடியோ கால் பேசிக் கொண்டே பிரவுஸிங்.. புதிய வசதி அறிமுகம்
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: October 4, 2018, 6:25 PM IST
  • Share this:
வாட்ஸ் அப் செயலி தனது ஆன்ட்ராய்டு பயனாளர்களுக்கு புதிய அப்டேட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.

வீடியோ காலிங்கில் இருக்கும் போது வாட்ஸ்அப்புக்குள்ளேயே யூடியூப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் வீடியோக்களை பார்க்க வசதிகளை ஏற்படுத்தியுள்ளது வாட்ஸ் அப்.

இந்த அப்டேட், வாட்ஸ் அப்பின் பீட்டா பதிப்பில் (2.18.301) கிடைக்கிறது.  இதன்படி, ஒருவர் வாட்ஸ் அப்பில் அனுப்பும் யூடியூப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் வீடியோக்களின் லிங்கை கிளிக் செய்தால், வாட்ஸ் அப்புக்குள்ளேயே அந்த குறிப்பிட்ட வீடியோக்களை பார்க்க முடியும்.


ஆனால், இதில் சில குறைகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, வீடியோ கால் முடிந்தால், யூடியூப் வீடியோவும் நின்றுவிடும். இதனை வாட்ஸ் அப் நிறுவனம் மேம்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. பிக்சர் இன் பிக்சர் வசதியானது ஆன்டிராய்டு பதிப்பு 4.4 மற்றும் அதற்கு மேல் உள்ள பதிப்புகளில் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், வீடியோ கால் பேசும்போதே திரையை சிறிதாக்கி மெசேஜ் செய்ய முடியும். இந்த வசதி ஐபோன் வாடிக்கையாளகளுக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

First published: October 4, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading