கடந்த ஆண்டு மத்தியில் இருந்து வாரா வாரம் படம் வருகிறதோ இல்லையோ வாட்ஸ் ஆப் அப்டேட்டுகளை வெளியிட்டுக்கொண்டே இருக்கிறது. உலகின் பெருவாரியான மக்கள் பயன்படுத்தும் சமூக வலைதள செயலியான வாட்ஸ் அப் அதன் பயனர்களுக்கு எளிமையான பல வசதிகளை செய்து தர முயன்று கொண்டே இருக்கிறது.
அந்த வகையில், குரூப் வீடியோ கால் பேசும் வசதியும், அதில் குறிப்பிட்ட ஒருவரை மட்டும் மியூட் செய்து கொள்ளும் வசதியையும் வாட்ஸ்அப் அறிமுகம் செய்திருந்தது. அதேபோல சமீபத்தில் பயனர்களால் அனுப்பப்படும் தவறான மெசேஜ்களை எடிட் செய்து கொள்ளும் வசதியையும் வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகப்படுத்த போவதாக அறிவித்து இருந்தது.
சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை பயன்படுத்தும் சமூக வலைத்தளங்கள் எல்லாமே தங்களது உள்ளடக்கங்கள் குறித்து கவனிக்கத் தொடங்கியுள்ளன. இந்நிலையில் ஸ்டேட்டஸ் பிரிவில் அப்டேட்டை வெளியிட உள்ளது. அந்த வகையில் Whatsapp status-களில் வைக்கப்படும் போட்டோக்கள், வீடியோ உள்ளிட்ட உள்ளடக்கங்கள் சென்சிட்டிவாக இருக்கும் பட்சத்தில் அதனை பயனர்கள் ரிப்போர்ட் செய்யும் புதிய அப்டேட்டை அறிமுகம் செய்ய இருப்பதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.
வாட்ஸ்அப் பயனர் மற்றொருவரது ஸ்டேடஸ் குறித்து புகாரளித்தால், அது விதிமுறைகளை மீறுகிறதா என்பதைச் சரிபார்க்க, மதிப்பாய்வுக் குழுவுக்கு அனுப்பப்படும். அதை மதிப்பாய்வு செய்த பின்னர், உள்ளடக்கம் சென்சிட்டிவாக இருந்தால் அதை மற்றவர்கள் பார்க்க முடியாதபடி மாற்றிவிடும்.
ஏற்கனவே, வாட்ஸ் அப்பில் செய்திகள் மற்றும் தொடர்புகளைப் புகாரளிக்க அனுமதிக்கிறது. நீங்கள் ஒரு தொடர்பு பற்றி புகாரளிக்கும்போது, உரையாடலில் உள்ள கடைசி 5 செய்திகள் WhatsApp க்கு அனுப்பப்படும். ஆனால் தவறான செய்திகளை குறிப்பிட்டும் புகாரளிக்க வாய்ப்புகள் உள்ளன. அதன்படி தவறான உள்ளடக்கங்கள் இருந்தால் அந்த தொடர்பை தடை செய்து விடுவர்.
இதையும் படிங்க: ஃபிளாஷ் லைட்டை நோட்டிஃபிகேஷன் அலர்ட்டாக பயன்படுத்துவது எப்படி..?
வாட்ஸ் ஆப்பின் இந்த ரிப்போர்டிங் சேவை தற்போது ஆண்ட்ராய்டுக்கான வாட்ஸ் அப் பீட்டா வெர்ஷன் சோதனையாளர்களுக்கு ஸ்டேட்டஸ்களை புகார் அளிக்கும் வசதியை வழங்கி வருகிறது. கூடிய விரைவில் இந்த சேவை அனைத்து வாட்ஸ் ஆப் பயனாளர்களுக்கும் வழங்கப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: WhatsApp, Whatsapp Update