ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

வாட்ஸ்அப்பில் புதிதாக அறிமுகமாகும் டூ நாட் டிஸ்டர்ப் மோட்.!

வாட்ஸ்அப்பில் புதிதாக அறிமுகமாகும் டூ நாட் டிஸ்டர்ப் மோட்.!

வாட்ஸ்அப்

வாட்ஸ்அப்

WhatsApp Do Not Disturb | ஒருவேளை நீங்கள் வேண்டுமென்றே எதிர் முனையில் இருப்பவரின் அழைப்பை புறக்கணித்ததாக அவர் நினைத்துக் கொண்டால், உண்மையிலேயே DND மோடில் இருந்ததால் தான் அழைப்பை கவனிக்க முடியவில்லை என்பதற்காக இந்த ஸ்க்ரீன்ஷாட்டை நீங்கள் அவருக்கு அனுப்பலாம்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

உலகம் முழுவதும் உள்ள மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் மெசஞ்சர் செயலிகளில் ஒன்றான வாட்ஸ் அப் தனது புதிய அப்டேட்டை வெளியிட உள்ளது. இந்த புதிய அப்டேட்டில் டு நாட் டிஸ்டர்ப் (Do Not Disturb) அல்லது டிஎன்டி (DND) என்றழைக்கப்படும் புதிய வசதியை சேர்த்துள்ளது

இது கிட்டத்தட்ட நாம் சாதாரணமாக மொபைலில் பயன்படுத்தும் DND எனப்படும் மோடின் சாயலாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதில் உள்ள புதிய அம்சம் என்னவெனில், ஒரு வேலை உங்கள் மொபைலானது DND மோடில் இருக்கும் போது, யாரேனும் உங்களுக்கு கால் செய்து அதை நீங்கள் கவனிக்காமல் இருந்தால், கால் வந்த நேரத்தில் உங்கள் மொபைல் DND மோடில் இருந்ததற்கான அடையாளத்துடன், மிஸ்டு கால் செய்தவரின் அந்த அழைப்பு விவரங்கள் திரையில் தோன்றும்.

இதன் மூலம் ஒருவேளை நீங்கள் வேண்டுமென்றே எதிர் முனையில் இருப்பவரின் அழைப்பை புறக்கணித்ததாக அவர் நினைத்துக் கொண்டால், உண்மையிலேயே DND மோடில் இருந்ததால் தான் அழைப்பை கவனிக்க முடியவில்லை என்பதற்காக இந்த ஸ்க்ரீன்ஷாட்டை நீங்கள் அவருக்கு அனுப்பலாம். மேலும் நீங்கள் வேண்டுமென்றே அவரை புறக்கணிக்கவில்லை என்பதற்கு ஆணித்தனமான ஆதாரமாகவும் இது அமையும்.

இந்த புதிய அப்டேட் ஆனது வாட்ஸ்அப் பீட்டா யூசர்களுக்காக கூகுள் பிளே ஸ்டோரில் தயாராக ஆக உள்ளது என்று தெரியவந்துள்ளது.

கடந்த ஜூன் மாதத்தில் தான் வாட்ஸ்அப் பல்வேறு வசதிகள் நிறைந்த தனது புதிய அப்டேட்டை வெளியிட்டிருந்தது. அதில் குழுவாக சேர்ந்து வாய்ஸ் கால் பேச அனுமதிக்கும் குரூப் கால் வசதியும், அவ்வாறு குழுவாக பேசிக் கொண்டிருக்கும் போதே குறிப்பிட்ட சில நபர்களை மியூட் செய்வது ஆகிய புதிய வசதிகளையும் அறிமுகப்படுத்தி இருந்தது.

Also Read : வாட்ஸ்அப் குரூப்களுக்கு நோட்டிஃபிகேஷன் நிறுத்தப்படுகிறதா.?

மேலும் குழுவாக சேர்ந்து பேசும் அந்த குரூப் வாய்ஸ் காலில், யாரேனும் ஒருவர் புதியதாக இணைந்தால் அவருடைய பெயர் கொண்ட பேனர் திரையில் தோன்றி, இவர் குரூப் சாட்டில் இணைந்துள்ளார் என்ற நோட்டிபிகேஷன் தோன்றும். பல்வேறு நபர்கள் குழுவாக சேர்ந்து பேசும்போது ஏற்படும் அதிகப்படியான இரைச்சலை தவிர்க்க வேண்டும் என்று விரும்பினால் அவர்களை மியூட் செய்து விட்டு நமக்கு தேவையானவர்களின் குரலை மட்டும் கேட்கக்கூடிய வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டது.

Also Read : ஐபோன் யூஸர்க்ளுக்கு வெளிவரும் 5G சாஃப்ட்வேர் அப்டேட் - எப்படி ஆக்டிவேட் செய்வது.?

இவை தவிர சமீபத்தில் தான் வாட்ஸ் அப் தனது புதிய அப்டேட்டில் வாட்ஸ் அப் கம்யூனிட்டிஸ் என்ற வசதியையும் அறிமுகப்படுத்தியது நினைவில் இருக்கலாம். இதன் மூலம் பலர் குழுவாக ஒன்றிணைந்து ஒரு குறிப்பிட்ட தலைப்பைப்பற்றி விவாதிக்கவும், தங்களது சந்தேகங்களை மற்றவர்களுடன் கேட்டு தெளிவு பெறவும் உதவியாக இருக்கும் வண்ணம் இந்த வசதி அளிக்கப்பட்டுள்ளது.

Published by:Selvi M
First published:

Tags: Tamil News, Technology, Whatsapp Update