தினமும் காலையில் எழுந்தவுடன் எதை செய்கிறோமோ இல்லையோ கையில் மொபைலை எடுத்து கொண்டு வாட்ஸ்அப்பில் உலா வரும் நபர்கள் தான் இன்று அதிகம் உள்ளனர். அதிலும் குறிப்பாக வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் மற்றவர்கள் என்ன மாதிரியான ஸ்டேட்டஸ்களை போஸ்ட் செய்துள்ளனர் என்பதை பார்ப்பதற்காகவே ஒரு தனி கூட்டம் உள்ளது. அதே போன்று அந்த ஸ்டேட்டஸை கலாய்க்க கூடிய ஒரு கூட்டமும் இதில் கலந்தே உள்ளது. இப்படி பலரையும் கவர்ந்துள்ள இந்த வாட்ஸ்அப் ஸ்டேட்டஸிற்கு என்று எப்போதும் தனி சிறப்பு இருக்கத்தான் செய்கிறது. இந்த ஸ்டேட்ஸில் தான் தற்போது ஒரு புது வித அப்டேட் ஒன்றை வாட்ஸ்அப் நிறுவனம் தரவுள்ளது.
பொதுவாக வாட்ஸ்அப் நிறுவனம் பல புதிய மற்றும் அற்புதமான அம்சங்களை உருவாக்கி வருகிறது. குறிப்பாக சில பீட்டா யூசர்களுக்கு புது வகையான அப்டேட்கள் விரைவில் வந்துவிடும். இந்நிலையில் தற்போது அறிமுகமாகவுள்ள 'ஸ்டேட்டஸில் ரியாக்ஷன்' செய்ய கூடிய அம்சத்தை அறிமுகம் செய்ய உள்ளதாக வாட்ஸ்அப் பீட்டா இன்போ (WABetaInfo) தெரிவித்துள்ளது. இந்த அம்சத்தின் மூலம், பயனர்கள் எட்டு எமோஜிகளுடன் அந்த ஸ்டேட்ஸிற்கு பதிலளிக்க முடியும். இந்த அம்சம் இன்ஸ்டாகிராமில் உள்ளதைப் போன்றதாகும். ஏற்கனவே இன்ஸ்டாகிராமில் உள்ள இந்த சிறப்பம்சத்தை பலரும் விரும்பி உள்ளனர். எனவே இதே அம்சத்தை வாட்ஸ்அப்பிலும் கொண்டு வர அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதை பற்றிய மேலும் சில தகவல்களையும் ஸ்கிரீன் ஷாட் மூலம் வாட்ஸ்அப் நிறுவனம் பகிர்ந்துள்ளது. மேலும் இந்த அம்சத்தை பெற்ற பீட்டா யூசர், இந்த எட்டு எமோஜிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து மற்றவர்களுக்கு அனுப்பலாம். அந்த வகையில், இந்த ஸ்டேட்டஸ் ரியாக்ஷனில் இதயம் எமோஜி, கண்களுடன் சிரித்த முகத்தை கொண்ட எமோஜி, மகிழ்ச்சியின் கண்ணீர் வரக்கூடிய எமோஜி, திறந்த வாய் எமோஜி, அழும் முகத்தை கொண்ட எமோஜி, வணக்கம் எமோஜி, கைதட்டல் எமோஜி, பார்ட்டி பாப்பர் எமோஜி மற்றும் நூறு புள்ளிகள் கொண்ட எமோஜி என 8 எமோஜிகள் உள்ளன.
உங்கள் வாட்ஸ்அப் கணக்கில் இந்த புதிய அப்டேட் உள்ளதா என்பதை அறிய, உங்கள் தொடர்புகளின் ஸ்டேட்டஸ் அப்டேட்டை கிளி செய்து, மேலே ஸ்வைப் செய்யவும். அதில் உங்களுக்கு எட்டு எமோஜிகள் வரும் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி உங்களால் ரீபிளே செய்ய முடிந்தால், இந்த புதிய அப்டேட் உங்களுக்கும் கிடைத்துள்ளது என்று அர்த்தம். அதே போன்று "ஸ்டேட்ஸிற்கு ரீபிளே செய்து வரக்கூடிய எமோஜி என்பது ஒரு மெசஜ் போன்று அனுப்பப்படும் என்று WABetaInfo கூறியுள்ளது. இந்த அப்டேட்டானது எல்லா யூசர்களுக்கும் வழங்கப்படவில்லை. இது ஒரு சில பீட்டா யூசர்களுக்கு மட்டுமே இந்த அம்சம் வெளியிடப்படுகிறது.
Also Read : Whatsapp-ன் புதிய பாதுகாப்பு அம்சம்... மோசடி நபர்களிடமிருந்து காப்பாற்ற புது ஐடியா
மேலும் வரும்நாட்களில் இது எல்லோருக்கும் வரக்கூடிய ஒரு அப்டேட்டாக இருக்கும் என்று வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் வாட்ஸ்அப்-இல் "login approval" எனப்படும் "இரட்டை சரிபார்ப்பு குறியீடு" அம்சமும் வரவுள்ளதாக தகவல்கள் தெரிகிறது. இது பயனர் கணக்குகளைப் பாதுகாக்கவும், தங்களது வாட்ஸ்அப் கணக்கில் வேறு யாராவது உள்நுழைய முயற்சித்தால் இது எச்சரிக்கை மெசேஜை தெரிவிக்கும் வகையில் அறிமுகப்படுத்த உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Emoji, Status, Technology, Whatsapp Update