நிரந்தரமாக மற்ற செயலிகளுக்கு மாறும் Whatsapp யூசர்கள்.. காரணங்கள் என்ன? ஆய்வு தெரிவிப்பது என்ன?

மற்ற செயலிகளுக்கு மாறும் வாட்ஸ் ஆப் யூசர்கள்

சர்வேயில் பங்கேற்ற 92 விழுக்காட்டினர், வாட்ஸ்ஆப் பேமண்ட்ஸ்-ஐ பயன்படுத்தமாட்டோம் எனக் கூறியுள்ளனர். 79 விழுக்காட்டினர் வாட்ஸ் ஆப் பிஸினஸ் அக்கவுண்ட் பயன்படுத்த விருப்பமில்லை எனவும், சர்வே எடுக்கும் நேரத்தில் 55 விழுக்காட்டினர் மாற்று செயலிகளை பதிவிறக்கம் செய்து வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

  • Share this:
வாட்ஸ் ஆப் யூசர்கள் மற்ற செயலிகளுக்கு மாறுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. பேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ் ஆப் நிறுவனம் அண்மையில் பிரைவசி பாலிசியில் புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்தியது. இதற்கு உலகம் முழுவதும் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. வாட்ஸ் ஆப் யூசர்களின் தனிப்பட்ட தகவல்கள் பேஸ்புக் நிறுவனத்துடன் பகிரப்படும் ஆபத்து உள்ளதாகவும், இது தனிநபர் தகவல் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் எனவும் குற்றம்சாட்டப்பட்டது.

உலகின் நம்பர் ஒன் பணக்காரராக இருக்கும் எலன் மஸ்க் முதல் Paytm நிறுவனர் வரை முன்னணி டெக் தொழில்நுட்ப நிறுவனர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், யூசர்களுக்கும் வாட்ஸ் ஆப்-ன் பிரைவசி பாலிசி அப்டேட் மீது சந்தேகம் கிளம்பியது.

மற்ற செயலிகளுக்கு மாறும் வாட்ஸ் ஆப் யூசர்கள்


இதனால், உலகம் முழுவதும் வாட்ஸ் ஆப் யூசர்கள் டெலிகிராம் , சிக்னல் உள்ளிட்ட பிற மெசேஜ் செயலிகளுக்கு மாறத் தொடங்கினர். கூகுள் பிளே ஸ்டோரில் வாட்ஸ் ஆப் பதிவிறக்கம் மிகப்பெரிய சரிவை சந்தித்தது. சிக்னல் மற்றும் டெலிகிராம் ஆப்களின் பதிவிறக்கம் மின்னல் வேகத்தில் உயர்ந்தது. இதனால், ஆபத்தை உணர்ந்து கொண்ட வாட்ஸ் ஆப் நிறுவனம், யூசர்களின் தனிப்பட்ட தகவல்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும், வாட்ஸ்ஆப் யூசர்களின் தனிப்பட்ட தகவல்கள் பேஸ்புக் நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்ளப்படாது என்றும் விளக்கம் கொடுத்தது. இருப்பினும், யூசர்களின் நம்பிக்கையை இழந்த வாட்ஸ் ஆப் நிறுவனத்தின் விளக்கத்தை பெரும்பாலானோர் பொருட்படுத்தவில்லை.

காரணம், அந்த நிறுவனத்தின் மீது யூசர்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. இதற்கு சான்றாக தற்போது வெளியாகியுள்ள ஆய்வு ஒன்றிலும் வாட்ஸ் ஆப் யூசர்கள் மற்ற செயலிகளை அதிகம் பயன்படுத்த தொடங்கியுள்ளது தெரியவந்துள்ளது. ஆன்லைன் சர்வே தளமான லோக்கல் சர்க்கிள்ஸ் , வாட்ஸ் ஆப் நிறுவனத்தின் புதிய பிரைவசி அப்டேட் குறித்து கேள்வி எழுப்பியது. சுமார் 17 ஆயிரம் பேரிடம் எடுக்கப்பட்ட இந்த ஆய்வில் 21 விழுக்காட்டினர், வாட்ஸ் ஆப்-க்கு பதிலாக மாற்று செயலிகளை பயன்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.

மற்ற செயலிகளுக்கு மாறும் வாட்ஸ் ஆப் யூசர்கள்


22 விழுக்காட்டினர் வாட்ஸ் ஆப் செயலியை பயன்படுத்துவதை முழுவதுமாக நிறுத்திவிட்டதாக கூறியுள்ளனர். சில யூசர்கள், வாட்ஸ் ஆப் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் தங்களின் புதிய பிரைவசி பாலிசி அப்டேட் குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். சர்வேயில் பங்கேற்ற 92 விழுக்காட்டினர், வாட்ஸ்ஆப் பேமண்ட்ஸ்-ஐ பயன்படுத்தமாட்டோம் எனக் கூறியுள்ளனர். 79 விழுக்காட்டினர் வாட்ஸ் ஆப் பிஸினஸ் அக்கவுண்ட் பயன்படுத்த விருப்பமில்லை எனவும், சர்வே எடுக்கும் நேரத்தில் 55 விழுக்காட்டினர் மாற்று செயலிகளை பதிவிறக்கம் செய்து வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

வாட்ஸ் ஆப் செயலிக்கு பதிலாக பெரும்பாலானோர் டெலிகிராம் மற்றும் சிக்னல் செயலிகளை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருவதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. வாட்ஸ் ஆப் செயலியின் புதிய அப்டேட் வரும் பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது. கடும் எதிர்ப்புகளை சந்தித்துள்ள வாட்ஸ் ஆப் நிறுவனம், தங்களது முடிவில் இருந்து மாற வேண்டும் என்பதே யூசர்களின் விருப்பமாக உள்ளது. அதே நேரத்தில் தனது பிரைவசி பாலிசியை அமல்படுத்துவதை எதிர்ப்பின் காரணமாக வாட்ஸ் அப் நிறுவனம் ஒத்திவைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published: