'வாட்ஸ்அப் பேமண்ட்' தொடங்கியது - எஸ்பிஐ, ஐசிஐசிஐ, எச்டிஎப்சி வங்கிகள் இணைப்பு

'வாட்ஸ்அப் பேமண்ட்' தொடங்கியது - எஸ்பிஐ, ஐசிஐசிஐ, எச்டிஎப்சி வங்கிகள் இணைப்பு

'வாட்ஸ்அப் பேமண்ட்' லைவ் தொடங்கியது

இந்த சேவையை நீங்கள் பயன்படுத்த உங்களுக்கு தேவையானது எல்லாம், யுபிஐக்கு ஆதரவளிக்கும் ஒரு வங்கியின் டெபிட் கார்டு மட்டுமே ஆகும்.

  • News18
  • Last Updated :
  • Share this:
வழக்கமாக வாட்ஸ்அப் ஆப்ஸில் (WhatsApp) புகைப்படம் அல்லது வீடியோ உள்ளிட்டவற்றை மற்றவர்களுக்கு அனுப்புவது போன்றே வாட்ஸ்அப் பேமண்ட் (WhatsApp Payments) சேவையில் மற்றவர்களுக்கு பணம் அனுப்ப முடியும். வாட்ஸ்அப் நிறுவனம் இந்த அம்சத்தினை 2018ம் ஆண்டு முதல் சோதனை செய்து வந்த நிலையில் தற்போது 'வாட்ஸ்அப் பேமெண்ட்' அம்சத்தை வெளியிட்டுள்ளது. இது ஆப்ஸின் வழியாக பணம் அனுப்ப உங்களை அனுமதிக்கும் ஒரு அம்சமாகும். 

யுபிஐ பேமெண்ட்களை (UPI payments) செயல்படுத்த இந்தியாவில் 20 மில்லியன் பயனர்களுக்கு வாட்ஸ்அப் பேமெண்ட் அம்சம் இப்போது கிடைக்கிறது. பேஸ்புக்கிற்கு சொந்தமான வாட்ஸ்அப் இயங்குதளத்தின் வாட்ஸ்அப் பேமெண்ட்கள் இப்போது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, ஐசிஐசிஐ வங்கி, எச்.டி.எஃப்.சி வங்கி மற்றும் Axis வங்கி (State Bank of India, ICICI Bank, HDFC Bank and Axis Bank) ஆகியவற்றுடன் நேரலையில் இருப்பதை உறுதிசெய்கிறது.

மேலும் பயனர்கள் பேமண்டுகளை சிக்கலின்றி மேற்கொள்ள, இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தின் (என்.பி.சி.ஐ) ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம், (National Payments Corporation of India’s (NPCI) Unified Payment Interface (UPI) பேமண்ட்டுகளில் இப்போது கிடைக்கிறது. இந்தியாவுக்கான பேஸ்புக் (Facebook Fuel for India) உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக இந்த அறிவிப்பு வந்துள்ளது. இது இந்தியாவுக்கான பேஸ்புக்கின் முதல் மாபெரும் உச்சிமாநாடு ஆகும். 

இது டிஜிட்டல் இந்தியாவுக்கான (Digital India) முன்முயற்சியின் ஒரு பகுதியாக, நாட்டில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை செயல்படுத்த இந்திய அரசு தொடர்ந்து ஊக்குவிக்கும் நேரத்தில் வாட்ஸ்அப் பேமெண்டின் இத்தகைய செய்தி வருகிறது. இந்தியாவின் வாட்ஸ்அப் தலைவர் அபிஜித் போஸ் (Abhijit Bose), கடந்த நவம்பர் மாதத்தில், வாட்ஸ்அப் ஆப்ஸ்ஸுக்குள் இந்தியாவில் உள்ள பயனர்களுக்கு பணம் செலுத்துவதற்க்கான வாட்ஸ்அப் பேமெண்ட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. 

"இந்தியா முழுவதும் உள்ள வாட்ஸ்அப் பயனர்களுக்கு எளிய மற்றும் பாதுகாப்பான டிஜிட்டல் பேமெண்ட் களை வழங்குவதற்காக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎப்சி வங்கி மற்றும் ஆக்ஸிஸ் வங்கி (State Bank of India, ICICI Bank, HDFC Bank and AXIS Bank) போன்றவற்றுடன் கூட்டு சேர்ந்ததற்காக நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்றார். மேலும் யுபிஐ (UPI) ஒரு உருமாறும் சேவையாகும், இதற்கு முன்னர் எங்கள் டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் நிதி சேர்க்கை (Digital Economy and Financial Inclusion) ஆகியவற்றின் நன்மைகளை முழுமையாக அணுக முடியாத ஏராளமான பயனர்களுக்கு இதை கொண்டு வருவதற்கான வாய்ப்பை நாங்கள் இப்போது பெற்றுள்ளோம், ”என்றார். 

இந்த நேரத்தில், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) நாட்டில் 120 மில்லியனுக்கும் அதிகமான யுபிஐ பயனர்களைக் (UPI users) கொண்டுள்ளது. இது யுபிஐ (UPI) அமைப்பில் சுமார் 28% பங்கைக் கொண்டுள்ளது. யுபிஐ, அல்லது ஒருங்கிணைந்த கொடுப்பனவு இடைமுகத்தின், பரிவர்த்தனைகள் மாதாமாதம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன என்று இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தின் (National Payments Corporation of India (NPCI)) சமீபத்திய தகவல்கள் கூறுகிறது. நவம்பர் 2020 க்கான யுபிஐ பரிவர்த்தனைகள் 2.21 பில்லியனாக உயர்ந்தன,

Also read... 2020ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட இந்திய பெண் பிரபலங்கள் யாரெல்லாம் தெரியுமா?

இது அக்டோபரில் 2.07 பில்லியனை விட 6.7% அதிகமாகும். செப்டம்பரில், யுபிஐ பரிவர்த்தனைகள் 1.8 பில்லியனாக இருந்தன. கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளும் கடந்த சில மாதங்களில் அதிகரித்துள்ளன. ஏனெனில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் டிஜிட்டல் பேமெண்ட்களுக்கான மாற்றத்தை மக்களிடையே கொண்டுவந்துள்ளது. வாட்ஸ்அப் பேமெண்ட்கள் Paytm, PhonePe , Amazon Pay மற்றும் Google Pay உள்ளிட்ட கட்டண தளங்களுடன் போட்டியிடும். சுவாரஸ்யமான இந்த புதிய வாட்ஸ்அப் (WhatsApp) சேவை 10 இந்திய பிராந்திய மொழிகளில் அணுக கிடைக்கிறது. 

இந்த சேவையை நீங்கள் பயன்படுத்த உங்களுக்கு தேவையானது எல்லாம், யுபிஐ பயன்பாட்டைப் பெற்ற ஒரு வங்கியின் டெபிட் கார்டு மட்டுமே ஆகும். அது இருக்கும் பட்சத்தில் இதை நீங்கள் உடனடியாக பயன்படுத்தலாம். வாட்ஸ்அப்பின் (WhatsApp) ஒவ்வொரு அம்சத்தையும் போலவே, ஒவ்வொரு கட்டணத்திற்கும் தனிப்பட்ட UPI PINஐ உள்ளிடுவது உட்பட, பாதுகாப்பு மற்றும் தனியுரிமைக் கொள்கைகளின் வலுவான தொகுப்புடன் இந்த பணம் செலுத்தும் அம்சம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக வாட்ஸ்அப் கூறுகிறது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: