2019-ன் இறுதியில் வெளிவருகிறது ’வாட்ஸ்அப் பே’!

வாட்ஸ் அப் (மாதிரிப்படம்)

டிஜிட்டல் பேமண்ட் முறைகளுக்கான விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டதால் வாட்ஸ்அப் பே வெளியாவதில் தாமதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
இந்தியாவில் சுமார் 300 மில்லியனுக்கும் அதிகமான பயனாளர்களைக் கொண்டுள்ள வாட்ஸ்அப், இந்தாண்டின் இறுதியில் ’வாட்ஸ்அப் பே’ வெளியாகும் என உறுதிபடுத்தியுள்ளது.

’வாட்ஸ்அப் பே’ 2019-ம் ஆண்டின் இறுதியில் வெளியாகும் என அந்நிறுவன தலைவர் கேத்கார்ட் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். UPI அடிப்படையிலான பணம் செலுத்தும் சேவையை இந்தியாவில் வாட்ஸ்அப் அறிமுகம் செய்கிறது. டிஜிட்டல் பேமண்ட் முறைகளுக்கான விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டதால் வாட்ஸ்அப் பே வெளியாவதில் தாமதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

தற்போது விதிமுறைகளின் அடிப்படையிலேயே ஒப்புதல் பெறப்பட்டுள்ளதால் இந்தாண்டின் இறுதியிலேயே வெளியாகிறது. ஒமிடியார் நெட்வொர் மற்றும் பாஸ்டன் கன்சல்டிங் குழுமம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ’இந்தியாவில் சிறு குறு வணிக வியாபாரிகளின் ஆண்டு வருமானம் 3 லட்சம் முதல் 75 கோடி ரூபாய் வரையில் உள்ளது. இவர்களுக்கு வாட்ஸ்அப் பே முறை மிகுந்த பயனளிப்பதாகவே இருக்கும்’ எனக் குறிப்பிட்டுள்ளது.

நிதி ஆயோக் தலைவர் அமிதாப் கண்ட் கூறுகையில், “இந்தியாவின் டிஜிட்டல் பேமண்ட் விதிமுறைகளை பூர்த்தி செய்ய வாட்ஸ்அப் நிறுவனத்துக்குக் காலதாமதம் ஆனது. ஆனால், இந்தியாவில் வாட்ஸ்அப் பே வெளியாக நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் பார்க்க: 199 ரூபாய்க்கு நெட்ஃப்ளிக்ஸ்... இந்திய ரசிகர்களைக் கவர சிறப்பு ஆஃபர்..!
Published by:Rahini M
First published: