ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

இந்தியர்களுக்குத் தொடர் சிக்கலைத் தரும் வாட்ஸ்அப்..!

இந்தியர்களுக்குத் தொடர் சிக்கலைத் தரும் வாட்ஸ்அப்..!

இந்தியாவில் மட்டும் சுமார் 400 மில்லியன் பயனாளர்கள் வாட்ஸ்அப் பயன்படுத்துகின்றனர்.

இந்தியாவில் மட்டும் சுமார் 400 மில்லியன் பயனாளர்கள் வாட்ஸ்அப் பயன்படுத்துகின்றனர்.

இந்தியாவில் மட்டும் சுமார் 400 மில்லியன் பயனாளர்கள் வாட்ஸ்அப் பயன்படுத்துகின்றனர்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

ஸ்பைவேர் தாக்குதலால் இந்தியாவில் நம்பகத்தன்மையை இழந்துள்ள வாட்ஸ்அப் தற்போது நாட்டின் டிஜிட்டல் வர்த்தகத்துக்கும் சிக்கலை ஏற்படுத்தும் சூழலைக் கொண்டு வந்துள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

வாட்ஸ்அப் நிறுவனம் தற்போது டிஜிட்டல் பேமன்ட் முறையை இந்தியாவில் வெளியிடத் தயாராகி வருகிறது. இது வெளியானால் இந்தியாவின் டிஜிட்டல் பேங்கிங் முறை மிகவும் பாதிக்கப்படும் என பொருளாதார வல்லுநர்கள் எடுத்துரைத்துள்ளனர்.

ஆன்லைன் வர்த்தகம், டிஜிட்டல் பணப்பரிமாற்றம் போன்றவை எல்லாம் பயனாளர் ஒருவரின் அத்தனை  தகவல்களையும் பரிமாறும் ஒரு இடமாக டிஜிட்டல் பேமன்ட் தளம் இருக்கும். இந்திய அரசு போதுமான சைபர் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்காவிட்டால் இது ஒரு தகவல் திருட்டுக்கு வழிவகுக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பெகாசஸ் என்னும் ஸ்பைவேர் தாக்குதலால் சர்வதேச அளவில் பயனாளர்கள் அதிருப்தியில் உள்ளனர். இந்திய அரசும் வாட்ஸ்அப் இடம் விளக்கம் கேட்டுள்ளது. இந்தியாவில் மட்டும் சுமார் 400 மில்லியன் பயனாளர்கள் வாட்ஸ்அப் பயன்படுத்துகின்றனர்.

இதனால் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறையை வாட்ஸ்அப் கொண்டு வந்தால் இந்திய அரசு கூடுதல் கட்டுப்பாடுகள் உடன் செயல்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க: ஜியோ உடன் இணைந்தது சன் நெக்ஸ்ட்... தென்னிந்தியாவைக் கைப்பற்ற புது கூட்டணி!

Published by:Rahini M
First published:

Tags: WhatsApp