ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

அக்டோபர் மாதம் என்றாலே வாட்ஸ்அப்பிற்கு பிரச்சனை தான்.!

அக்டோபர் மாதம் என்றாலே வாட்ஸ்அப்பிற்கு பிரச்சனை தான்.!

வாட்ஸ்அப்

வாட்ஸ்அப்

WhatsApp Outage | வட்ஸ்அப் முடக்கம் பற்றி ஜோக்ஸ், மீம்ஸ் மற்றும் பலவிதமான செய்திகள் பகிரப்பட்டு வந்தன. வாட்ஸ்அப் செயலி மட்டுமல்லாமல், வெப் வெர்ஷனிலும் இயங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜாலியான சாட்டிங் முதல் முக்கியமான தகவல் பரிமாற்றம் வரை வாட்ஸ்அப் மற்றவருடன் தொடர்பு கொள்வதில் மிக மிக முக்கியமான ஒரு தளமாக மாறியிருக்கிறது. நண்பர்கள், அக்கம் பக்கத்தினர், உறவினர்கள், தொலைதூர உறவு மட்டுமல்லாமல் மிகப்பெரிய வணிக பரிவர்த்தனைகளுக்கும் வாட்ஸ்அப் அவசியமாக மாறி விட்டது. ஆனால் கடந்த செவ்வாய் அன்று, உலகம் முழுவதும் திடீரென்று இரண்டு மணி நேரம் வாட்ஸ்அப் இயங்கவில்லை.

வாட்ஸ்அப் இயங்குகிறதா, செய்தி அனுப்ப முடியவில்லை, வாட்ஸ்அப் அழைப்புகள் மேற்கொள்ள முடியவில்லை என்பதை டிவிட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் மற்றும் சாதாரண எஸ்எம்எஸ்களின் மூலம் பலரும் உறுதி செய்து கொண்டனர். ஆனால், அக்டோபர் மாதம் வாட்ஸ்அப் இயங்குவதில் பிரச்சனை ஏற்படுவது இது முதல் முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பே, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கிரிப்டோ சம்பந்தப்பட்ட விவகாரத்தில் வாட்ஸ்அப் முடங்கியது. அக்டோபர் மாதம் என்றாலே வாட்ஸ்அப்பில் பிரச்சனை வருகிறதே?

வட்ஸ்அப் முடக்கம் பற்றி ஜோக்ஸ், மீம்ஸ் மற்றும் பலவிதமான செய்திகள் பகிரப்பட்டு வந்தன. வாட்ஸ்அப் செயலி மட்டுமல்லாமல், வெப் வெர்ஷனிலும் இயங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் ஒவ்வொரு நாட்டிலுமே ஆயிரக்கணக்கில் இதைப் பற்றி டவுன்டிடெக்டர் என்ற வலைதளத்தில் புகார் தெரிவித்திருந்தனர். இதற்கு முன்பு ஒரு சில அப்டேட்கள் காரணமாக வாட்ஸ்அப் செயலி சில நிமிடங்கள் மட்டுமே முடங்கி இருக்கும். ஆனால் 2 மணி நேரம் செயலியின் முடக்கம் என்பது ஆச்சரியப்படும்படி இருக்கிறது. திடீரென்று வாட்ஸ்அப் ஏன் முடங்கியது என்ற கேள்விக்கு வாட்ஸ்அப்பின் தாய் நிறுவனமான மெடாவிடம் பதில் இல்லை. ஆனால், செயலி முடக்கம் பற்றி தகவல் பரவத் தொடங்கிய உடனேயே, விரைவில் சரி செய்யப்படும் என்று மெடா சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Also Read : 'புதுசு கண்ணா புதுசு'.. சூப்பரான அப்டேட்களை அள்ளி வீசியுள்ள வாட்ஸ்அப்!

மெடா நிறுவனம் முடங்கிய அக்டோபர் 2021

இந்த ஆண்டு எந்த வித்தியாசமும் இல்லாமல் அனைத்து விதமான யூசர்களையும் பாதித்த வாட்ஸ்அப் செயலி அக்டோபர் 5 ஆம் தேதி, 2021 ஆம் ஆண்டு கிட்டத்தட்ட 6 மணி நேரம் செயல் இழந்தது. இதில் வாட்ஸ்அப் மட்டும்செயலிழக்காமல், மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட இரண்டு முன்னணி சமூக வலைத்தளங்களும் 6 மணி நேரம் வரை முடங்கியது. இதனால் கிரிப்டோ கரன்ஸி ட்ரேடிங் முதல் எண்ணெய் வணிகம் வரை பெரும்பாலான நிறுவனங்கள் தீவிரமாக பாதிக்கப்பட்டன. இந்தத் துறையில் இருப்பவர்கள் உடனடியாக வாட்ஸ்அப்பின் போட்டி செயலிகளான சிக்னல் மற்றும் டெலிகிராமிற்கு மாறினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மெட்டா நிறுவனத்தின் அனைத்து தகவல் பரிமாற்ற செயலிகளும் முழுவதுமாக முடங்கி இருந்த காலத்தில் கிட்டத்தட்ட 7 கோடி யூசர்கள் டெலிகிராமில் இணைந்தனர்.

Also Read : விலை இவ்வளவு கம்மியா? இந்தியாவில் அறிமுகமானது ஜியோபுக்... தாறுமாறு சிறப்பம்சங்கள்!

கச்சா எண்ணெய், கிரிப்டோகரன்சி உள்ளிட்ட பல்வேறு சந்தைகள் சம்பந்தப்பட்ட செய்திகள் பரிமாற்றத்துக்காக கூட வாட்ஸ்அப் பயன்பாட்டில் உள்ளது. ஐரோப்பா மற்றும் ஆசிய பசிபிக் கண்டம் முழுவதுமே வாட்ஸ்அப் தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட காலகட்டத்தில் வாட்ஸ்அப் முடங்குவது ஆச்சரியத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Published by:Selvi M
First published:

Tags: Tamil News, Technology, Whatsapp Update