ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

'புதுசு கண்ணா புதுசு'.. சூப்பரான அப்டேட்களை அள்ளி வீசியுள்ள வாட்ஸ்அப்!

'புதுசு கண்ணா புதுசு'.. சூப்பரான அப்டேட்களை அள்ளி வீசியுள்ள வாட்ஸ்அப்!

வாட்ஸ்அப்

வாட்ஸ்அப்

WhatsApp Update | குறுஞ்செய்தி பகிர்வு தளமான வாட்ஸ்அப் தற்போது poll என்ற கருத்துக்கணிப்பு, ஆட்டோ டவுன்லோட் மற்றும் அவதார் அம்சத்தை பீட்டா யூஸர்களுக்கு வழங்கியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆண்ட்ராய்டு போன்கள், ஐபோன்கள் மற்றும் டெஸ்க்டாப் என அனைத்துவிதமான யூஸர்களுக்கும் அடுத்தடுத்து பல்வேறு அம்சங்களை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தி வருகிறது. சமீபத்தில் கூட வாட்ஸ்அப் Call Link அம்சத்தை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் வாட்ஸ்அப் வீடியோ அல்லது ஆடியோ காலில் இணைய விரும்புவோருக்கு லிங்க் அனுப்பினாலே போதும், அவர்கள் குழு காலில் இணைந்து கொள்ள முடியும். குறுஞ்செய்தி பகிர்வு தளமான வாட்ஸ்அப் தற்போது poll என்ற கருத்துக்கணிப்பு, ஆட்டோ டவுன்லோட் மற்றும் அவதார் அம்சத்தை பீட்டா யூஸர்களுக்கு வழங்கியுள்ளது. இதன் மூலமாக இனி வாட்ஸ் அப் குரூப்பில் கருத்துக்கணிப்பு நடத்தலாம், தங்களைப் போன்ற உருவங்களை மாற்றிக்கொள்ளலாம். இந்த அம்சங்களைப் பற்றி இங்கே விரிவாக காணலாம்...

வாட்ஸ்அப் அவதார்:

மெட்டாவுக்குச் சொந்தமான வாட்ஸ்அப் நிறுவனம் தற்போது அவதார் அம்சத்தை அறிமுகப்படுத்துவது தொடர்பான சோதனை முயற்சியில் இறங்கியுள்ளது. வாட்ஸ்அப் யூஸர்கள் தங்களைப் போலவே மெய்நிகர் உருவத்தை உருவாக்கிக்கொள்ளும் அவதார் ஆப்ஷனை தற்போது ஆண்ட்ராய்டில் பீட்டா யூஸர்களிடம் சோதனை செய்து வருகிறது. அதன் படி வாட்ஸ்அப் செட்டிங் மெனுவில் “அவதார்” என்ற ஆப்ஷன் புதிதாக சேர்க்கப்பட்டிருக்கும், அதனை கிளிக் செய்து யூஸர்கள் தங்களுக்கு பிடித்தமான அவதாரை உருவாக்கிக்கொள்ள முடியும்.

ஒருமுறை அவதாரை உருவாக்கிவிட்டீர்கள் என்றால், அது வாட்ஸ்அப் ஸ்டிக்கர்கள் தொகுப்பில் சேர்க்கப்படும். அதன் மூலமாக நீங்கள் உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு உங்கள் அவதாரை ஷேர் செய்ய முடியும். மேலும் வாட்ஸ்அப் யூஸர்கள் அதனை தங்களது முகப்பு படமாக வைத்துக்கொள்ளும் வசதியும் வழங்க உள்ளது.

மெட்டா சிஇஓ மார்க் ஜுக்கர்பெர்க் தனது அவதாரை மெட்டாவெர்ஸில் அறிமுகப்படுத்தினார். அவதாரில் தலை, உடல், கைகள் மட்டுமே உள்ள நிலையில், விரைவில் கால்களும் உருவாக்கப்படும் என மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோல் அவதாரை தங்களுக்கு பிடித்தமான வகையில் டிசைன் செய்து கொள்ள முடியும். அதற்காக மெட்டாவெர்ஸில் உண்மையான பணத்தை செலுத்தி, அவதாரை வடிவமைக்க ஏற்ற பொருட்களை வாங்கிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : உங்கள் வாட்ஸ்அப் கணக்கு முடக்கப்படுவதற்கான காரணங்கள் - அதிகாரப்பூர்வமான விளக்கம்.!

வாட்ஸ்அப் கருத்துக்கணிப்பு:

ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூகவலைத்தளங்களில் உள்ள Poll எனப்படும் கருத்துக்கணிப்பு ஆப்ஷன் விரைவில் வாட்ஸ்அப்பிலும் வர உள்ளது. Poll அம்சத்தை வெளியிடுவது தொடர்பாக ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்கள் இரண்டிலும் பீட்டா யூஸர்களிடம் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வாக்கெடுப்பு அம்சத்தின் முந்தைய பதிப்பு, ஒரு குழுவில் கருத்துக் கணிப்புகளை உருவாக்க பயனர்களை அனுமதிக்கிறது, ஆனால் சமீபத்திய புதுப்பிப்பு தனிப்பட்ட அரட்டைகளுக்கு இந்த திறனைக் கொண்டுவருகிறது மற்றும் பயனர்கள் ஒருவருக்கு ஒருவர் கருத்துக்கணிப்புகளை உருவாக்க உதவுகிறது.

வாட்ஸ்அப் குரூப் மற்றும் தனி பயனர்கள் என இரண்டு தரப்பிலும் இனி வாக்கெடுப்புகளை நடத்த முடியும் என்றும், வாக்கெடுப்பில் 12 விருப்பங்களைச் சேர்க்கலாம் என்றும் கூறப்படுகிறது. வாட்ஸ்அப் வாக்கெடுப்பைப் பெறும்போது தானாகவே வாக்கெடுப்பைப் புதுப்பிக்கும் வசதியும் இடம் பெறும் எனத் தெரிகிறது. இனி வாட்ஸ்அப் குரூப்பில் எதைப் பற்றியாவது இறுதி முடிவு எடுக்கவோ, எங்காவது செல்ல நண்பர்களை அழைக்கவோ Poll ஆப்ஷனை பயன்படுத்தி கருத்துக்கணிப்பு நடத்திக்கொள்ளலாம்.

Also Read : ரூ.15,000 பட்ஜெட்டிற்குள் கிடைக்கும் சிறந்த 5 ஸ்மார்ட்போன்கள் பட்டியல்.! 

ஆட்டோ டவுன்லோட்:

வாட்ஸ்அப் ஆட்டோ டவுன்லோட் அம்சம் மூலமாக இனி போனில் தேவையில்லாமல் அதிக அளவிலான வீடியோ, ஆடியோ, ஆவணங்கள் மற்றும் புகைப்படங்கள் டவுன்லோடு ஆவதை தவிர்க்க இயலும். இந்த ஆப்ஷன் மூலமாக இனி டெஸ்க்டாப்பில் வாட்ஸ்அப் சம்பந்தப்பட்டவற்றை டவுன்லோடு செய்து கொள்ள முடியும். தற்போது இந்த அம்சம் சோதனை முயற்சியாக வாட்ஸ்அப் டெஸ்க்டாப் பீட்டா பயன்பாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் செட்டிங்கில் media auto-download என்ற ஆப்ஷன் புதிதாக சேர்க்கப்படும் என்றும், இதன் மூலமாக வாட்ஸ்அப் டவுன்லோட்டை நிர்வாகிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த ஆப்ஷனை பயன்படுத்துவதன் மூலமாக இனி புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் ஆவணங்களுக்கான தானாக பதிவிறக்கம் செய்யப்படுவதை யூஸர்களால் கட்டுப்படுத்த முடியும்.

Published by:Selvi M
First published:

Tags: Technology, Whatsapp Update