ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

ஆஹா.. சூப்பர்! வாட்ஸ் அப்பில் ஓட்டுப்போடும் புதிய வசதி

ஆஹா.. சூப்பர்! வாட்ஸ் அப்பில் ஓட்டுப்போடும் புதிய வசதி

வாட்ஸ்அப்

வாட்ஸ்அப்

Whatsapp | வாட்ஸ் அப்பை உலகம் முழுவதும் பில்லியன் கணக்கிலான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  உலக அளவில் தகவல்களை பரிமாறிக்கொள்ள உதவும் முதன்மையான செயலியாக வாட்ஸ் அப் உள்ளது. வெறும் குறுஞ்செய்திகள் மட்டுமின்றி, வீடியோ, வாய்ஸ், டெக்ஸ்ட் சாட் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மற்றும் தனிநபர் மட்டுமல்லாது குழுவிலும் செய்திகளை பரிமாறிக்கொள்ளும் வசதிகள் உள்ளதால் வாட்ஸ் அப்பை உலகம் முழுவதும் பில்லியன் கணக்கிலான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

  மல்டி டிவைஸ் சப்போர்ட், மெசேஜ் தானாக டெலிட், ஆடியோ மெசெஜ் ப்ரீவ்யூ, என நாள் ஒரு வண்ணம் பொழுதொரு மேனியுமாக வாட்ஸ் அப்-பை அதன் தாய் நிறுவனமான மெட்டா அப்டேட் செய்து வருகிறது. சமீபத்தில் கூட வாட்ஸ்அப் செயலியில், ஃபேஸ்புக் பக்கத்தைப் போல கவர் போட்டோ வைக்கும் வசதி ஏற்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த வசதி வாட்ஸ்-அப் பிசினஸ் கணக்கு வைத்திருப்போருக்கு அறிமுகப்படுத்தும் என என்ற தகவலும் வெளியானது.

  Also Read : ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளத்தில் அறிமுகமாகும் வாட்ஸ்அப் கம்யூனிட்டிஸ்!

  இப்படி நாளுக்கு நாள் புதுப்புது அப்டேட்டுகளை வெளியிட்டு வரும் வாட்ஸ் அப் நிறுவனம் தற்போது புதிதாக Poll போடும் வசதியை வாட்ஸ் அப்பில் அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதியை பயன்படுத்தி நமது தனிப்பட்ட கருத்திற்கு மற்றவர்களின் கருத்துகளை கேட்டறிய முடியும். கருத்து கணிப்பு போன்றவற்றிக்கு பயன்படும் இந்த poll ஆப்சனை பயன்படுத்தி மற்றவர்கள் ஓட்டு போடுவது மூலமாக தங்களது முடிவை வெளிப்படுத்தலாம்.

  இந்த வசதியின் மூலம் தனி நபர் மற்றும் குரூப்பிலும் இருக்கும். 12 தேர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் குரூப்பில் ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட ஓட்டுக்களை அளிக்க முடியும். யார் எதற்கு வாக்கு அளித்தார்கள் என்பது மற்றவர்களுக்கு வெளிப்படையாக தெரியும் வகையில் இருக்கிறது.

  வாட்ஸ் அப்பில் சாட்டிங் ஆப்ஷனில் இருக்கும் Attach buttonஐ க்ளிக் செய்வதன் Poll ஆப்ஷன்களை நீங்கள் உருவாக்கலாம். உங்கள் மொபைலில் இந்த அப்டேட் கிடைக்கவில்லை என்றால் கூகுள் ப்ளே ஸ்டோரில் அப்டேட் செய்து இந்த வசதியை பெற முடியும்.

  Published by:Vijay R
  First published:

  Tags: WhatsApp