நீண்ட எதிர்பார்ப்பில் இருந்த புதிய அப்டேட் - வெளியிட்டது வாட்ஸ்அப்..!

iOS பயனாளர்களுக்காக வாட்ஸ்அப் புதிதாக ஆடியோ ப்ளேபேக் அம்சம் ஒன்றையும் அறிமுகம் செய்ய சோதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாம்.

நீண்ட எதிர்பார்ப்பில் இருந்த புதிய அப்டேட் - வெளியிட்டது வாட்ஸ்அப்..!
வாட்ஸ்அப்
  • News18
  • Last Updated: September 20, 2019, 11:32 AM IST
  • Share this:
வாட்ஸ்அப் செயலியில் ம்யூட் செய்யப்பட்ட ஸ்டேட்டஸ் அப்டேட்களை முற்றிலுமாக மறைக்கக்கூடிய வகையிலான புதிய அப்டேட் ஒன்று ஆண்ட்ராய்டு பயன்பாட்டுக்காக அறிமுகமாகி உள்ளது.

கடந்த சில மாதங்களாகவே இந்தப் புதிய அப்டேட் குறித்து சோதனை முயற்சி செய்து வந்த வாட்ஸ்அப் இதை தற்போது அறிமுகம் செய்துள்ளது. இந்த அப்டேட் விரைவில் பயனாளர்களின் பயன்பாட்டுக்கு இன்னும் ஓரிரு நாட்களில் வந்துவிடும் என்றே தெரிகிறது. வாட்ஸ்அப்-ன் புதிய பீட்டா வெர்ஷனில் இந்த அப்டேட் காணப்படும்.

அப்டேட் வெர்ஷனை APK mirror மூலமாகவும் டவுன்லோடு செய்துகொள்ள முடியும். முதன்முதலாக இந்த ‘மியூடட் ஸ்டேட்டஸ் அப்டேட்’ அம்சம் வாட்ஸ்அப்-ன் பீட்டா வெர்ஷன் 2.19.183-ல் கடந்த ஜூன் மாதம் காணப்பட்டது. இந்த அம்சத்தை ஆக்டிவேட் செய்ததும் மியூட் செய்யப்பட்ட ஸ்டேட்டஸ் அப்டேட் மறைக்கப்பட்டுவிடும்.


iOS பயனாளர்களுக்காக வாட்ஸ்அப் புதிதாக ஆடியோ ப்ளேபேக் அம்சம் ஒன்றையும் அறிமுகம் செய்ய சோதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாம். தொடர்ந்து போட்டியாளர்கள் மத்தியில் அப்டேட் ஆக செயல்பட பல புதிய அம்சங்களை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது வாட்ஸ்அப்.

மேலும் பார்க்க: இந்தியாவுக்கான கூகுள்பே: பாதுகாப்பான பணப் பரிமாற்றங்களுக்கு ஏற்ற அப்டேட்!

ஆக்கிரமிப்பை அகற்றாமல் பல்லாவரம் பெரிய ஏரியில் தூர்வாரும் பணி..
First published: September 20, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்