ஜியோபோனில் வாட்ஸ்அப்: தெரிந்துகொள்ள வேண்டிய 10 தகவல்கள்!

news18
Updated: September 13, 2018, 8:29 PM IST
ஜியோபோனில் வாட்ஸ்அப்: தெரிந்துகொள்ள வேண்டிய 10 தகவல்கள்!
வாட்ஸ் அப்
news18
Updated: September 13, 2018, 8:29 PM IST
ஜியோபோனில் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தும் வசதி தற்போது வந்துவிட்டது.

கடந்த ஆண்டு ஜியோபோனை ரிலையன்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்தது. மிக மிக குறைந்தவிலை கொண்ட 4ஜி ஃபீச்சர் போனான ஜியோபோனை பயன்படுத்துவோர் எண்ணிக்கை ஓராண்டில் 2.5 கோடியாக உயர்ந்தது. இது மேலும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் போன்களில் பயன்படுத்துவது போன்று ஜியோ போனிலும் வாட்ஸ் அப் செயலி கிடைக்கும் என்று ரிலையன்ஸ் அண்மையில் அறிவித்திருந்தது. அதன்படி, தற்போது வாட்ஸ் அப் செயலி ஜியோபோனில் கிடைக்கிறது.

எப்படி இன்ஸ்டால் செய்வது?

 • ஜியோபோனில் ஜியோஸ்டோர் என்ற செயலி இருக்கும்

 • அதனுள் வாட்ஸ் அப் செயலிக்கான ஐகான் இடம்பெற்றிருக்கும்
 • Loading...
 • அதனை கிளிக் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்

 • வழக்கம் போல், எண்ணை பதிவிட்டு ஜியோபோனில் வாட்ஸ் அப்பை பயன்படுத்தலாம்


ஜியோபோனில் வாட்ஸ் அப்பை பயன்படுத்துவோர் தெரிந்துகொள்ள வேண்டிய 10 தகவல்கள்

 1.  ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் போன்களைப் போன்று ஜியோபோனில் இருந்து படங்கள், வீடியோக்களை வாட்ஸ் அப்பில் பகிரலாம்

 2. அக்கவுண்ட், செட்டிங்ஸ்சில் Last Seen, Read Receipts, Blocked Contacts அமைப்புகளை மாற்றிக்கொள்ளலாம்.

 3. வாட்ஸ் அப் ப்ரொபைல் போட்டோவை மாற்றி அமைக்கலாம்

 4. குரூப்களை உருவாக்கலாம். அட்மின்களுக்கான அனைத்து உரிமைகளையும் ஜியோபோனில் உள்ள வாட்ஸ் அப்பில் பெற முடியும்

 5. ஜியோபோனில் உள்ள வாட்ஸ் அப் செயலியில் ஸ்டேட்டஸ் வைக்க முடியாது

 6.  வாய்ஸ் மற்றும் வீடியோ கால் செய்ய முடியாது. பிறராலும் அழைக்க முடியாது

 7. பிராட்காஸ்ட் எனப்படும் ஒரே நேரத்தில் பலருக்கு மெசேஜ் அனுப்பும் வசதி கிடையாது

 8. வாட்ஸ் அப் வெப் எனப்படும் கணினியில் பயன்படுத்தும் வசதி கிடையாது

 9. குறிப்பிட்ட மெசேஜ்களை Star குறியிட்டுக்கொள்ளும் வசதியும் ஜியோபோன் வாட்ஸ் அப்பில் இல்லை

 10. வாட்ஸ் அப் இன்ஸ்டாலில் ஏற்படும் சந்தேகங்களுக்கு 1991 என்ற உதவி எண் மூலம் ஜியோ வாடிக்கையாளர்கள் தீர்வு பெறலாம்

First published: September 13, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்