Home /News /technology /

வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு சூப்பர் அப்டேட்! இனி இதை எளிதாக மறைக்க முடியுமாம்

வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு சூப்பர் அப்டேட்! இனி இதை எளிதாக மறைக்க முடியுமாம்

வாட்ஸ் அப்

வாட்ஸ் அப்

Whatsapp Update : நமது வாட்ஸ் அப் செட்டிங்ஸ் மெனுவில் கொடுக்கப்படும் ஆன்லைன் இண்டிகேட்டர் என்ற மெனுவை தேர்வு செய்து, அதில் நாம் ஆன்லைனில் இருக்கிறோம் என்பதை யாரெல்லாம் தெரிந்து கொள்ளலாம் என்று நாம் முடிவு செய்து கொள்ள முடியும்.

    நம் அனைவரது மொபைல்களிலும் தவறாமல் இடம்பெற்றிருக்கும் மெசெஞ்சர் ஆப் வாட்ஸ் அப் ஆகும். சாட்டிங், மீடியா அனுப்புவது, லேட்டஸ்டாக பணப் பரிமாற்றம் உள்பட பல வசதிகளை வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ்அப் நிறுவனம் வழங்கி வருகிறது. இந்நிலையில் யூசர்களின் தனியுரிமை பாதுகாப்பிற்காக பல்வேறு வசதிகளை வாட்ஸ் அப் நிறுவனம் படிப்படியாக அறிமுகம் செய்து வருகிறது.

    ரீட் ரெசிப்ட் அல்லது ப்ளூ டிக் போன்றவற்றை ஆப் செய்து வைப்பது முதல், புரொஃபைல் படத்தை குறிப்பிட்ட நபர்களுக்கு அல்லது அனைத்து காண்டாக்ட்களுக்கு மறைத்து வைக்கும் வசதி உள்ளிட்ட பல்வேறு தனியுரிமை பாதுகாப்பு அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

    ஆனால், நீங்கள் ஆப் ஓப்பன் செய்து பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும், நீங்கள் ஆன்லைனில் இருப்பதாக மற்றவர்களுக்கு பாப் அப் ஆகுவது தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில், அதனையும் யூசர்கள் மறைத்து வைப்பதற்கான வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகம் செய்கிறது.

    அதாவது, இனி உங்கள் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், சக யூசர்கள் போன்றோருக்கு நீங்கள் வாட்ஸ்அப்-பில் ஆன்லைனில் உள்ளீர்கள் என்பதை தெரியப்படுத்தாமலேயே நீங்கள் அதை தொடர்ந்து உபயோகிக்க முடியும்.



     

    ஆன்லைன் ஸ்டேட்டஸ் கட்டுப்பாடு :

    வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிடும் ஒவ்வொரு அப்டேட் குறித்தும் WABetaInfo என்ற நிறுவனம் முன்கூட்டியே தகவல்களை வெளியிட்டு வருகிறது. தற்போது யூசர்கள் தங்களின் ஆன்லைன் ஸ்டேட்டஸை கட்டுப்படுத்தும் வகையிலான புதிய வசதியை அறிமுகம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

    also read : அமேசான் பிரைம் யூஸர்களா நீங்கள்.? இரண்டே கிளிக்குகளில் உங்களது சந்தாவை ரத்து செய்யலாம்..!

     

    செட்டிங்க்சில் தேர்வு செய்யலாம் :

    நமது வாட்ஸ்அப் செட்டிங்ஸ் மெனுவில் கொடுக்கப்படும் ஆன்லைன் இண்டிகேட்டர் என்ற மெனுவை தேர்வு செய்து, அதில் நாம் ஆன்லைனில் இருக்கிறோம் என்பதை யாரெல்லாம் தெரிந்து கொள்ளலாம் என்று நாம் முடிவு செய்து கொள்ள முடியும். இதற்கு முன்பு, Last Seen குறித்த இண்டிகேட்டருக்கு நீங்கள் எப்படி விருப்பங்களை தேர்வு செய்தீர்களோ, அதைப்போலவே ஆன்லைன் ஸ்டேட்டஸ் காட்டுவதற்கும் தேர்வு செய்து கொள்ளலாம்.



    எப்போது அமலுக்கு வரும்?

    தற்போது ஆப்பிள் ஐஓஎஸ் டிவைஸில் இந்த ஆன்லைன் இண்டிகேட்டர் கட்டுப்பாடு குறித்து ஆப்ஷன் சோதனை முறையில் பரிசோதிக்கப்பட்டு உள்ளது. அதேபோன்று ஆண்டிராய்டு மற்றும் டெஸ்க்டாப் வெப் வாட்ஸ்அப் வெர்சன்களுக்கும் ஆப்ஷன் ஏற்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும், இந்த அம்சம் எப்போது அமலுக்கு வரும் என்று சரியான கால வரையறை குறிப்பிடப்படவில்லை.

    ஆன்லைன் இண்டிகேட்டர் கட்டுப்பாட்டிற்கான அப்டேட் என்பது முதலில் பேட்டா யூசர்களுக்கு வழங்கப்பட்ட பிறகு தான் மற்ற யூசர்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

     
    Published by:Tamilmalar Natarajan
    First published:

    Tags: WhatsApp, Whatsapp Update

    அடுத்த செய்தி