Home /News /technology /

வாட்ஸ்அப் இனி உங்க கன்ட்ரோல்ல தான்.. யூசர்களுக்காக அசத்தலான அப்டேட்!

வாட்ஸ்அப் இனி உங்க கன்ட்ரோல்ல தான்.. யூசர்களுக்காக அசத்தலான அப்டேட்!

வாட்ஸ்அப்

வாட்ஸ்அப்

இந்த வரிசையில் வாட்ஸ்அப் யூசர்களுக்காக புதிய பிரைவசி அம்சங்களை வெளியிட்டுள்ளது. இது உங்கள் செய்திகளைப் பாதுகாக்கவும், எப்போதும் யூசர்களின் கட்டுப்பாட்டில் இருக்கவும் இது உதவியாக இருக்கும்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
    வாட்ஸ்அப் யூசர்கள் தங்களது தனிப்பட்ட உரையாடல்களை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளும் வகையில் குழுவில் இருந்து அமைதியாக வெளியேறுவது, ஆன்லைனில் இருப்பதை யார் பார்க்கலாம் என தேர்வு செய்வது, செய்திகளின் ஸ்கீரின் ஷாட் தடுப்பது போன்ற பல்வேறு அம்சங்களை வாட்ஸ்அப் நிறுவனம் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

    உலகம் முழுவதும் பல மில்லியன் கணக்கான யூசர்கள் பயன்படுத்தக்கூடிய தகவல் பரிமாற்ற செயலியாக வாட்ஸ் அப் செயல்பட்டு வருகிறது. வாட்ஸ் அப் இல்லாமல் இருக்கவே முடியாது என்ற நிலையில், மக்களின் வசதிக்காக பல்வேறு புதிய மற்றும் பயனுள்ள அம்சங்களை வாட்ஸ்அப் அவ்வப்போது அப்டேட் செய்து வருகிறது. குறிப்பாக ஆரம்பத்தில் வாட்ஸ் அப் குழுவில் 256 நபர்கள் இணையமுடியும் என்ற எண்ணிக்கை 512 ஆக அதிகரித்தது. விரைவாக மெசேஜ்களுக்கு ரிப்ளே செய்ய ஈமோஜிகளை அனுப்புவது போன்றவை அப்டேட் செய்யப்பட்டது.

    இந்த வரிசையில் வாட்ஸ்அப் யூசர்களுக்காக புதிய பிரைவசி அம்சங்களை வெளியிட்டுள்ளது. இது உங்கள் செய்திகளைப் பாதுகாக்கவும், எப்போதும் யூசர்களின் கட்டுப்பாட்டில் இருக்கவும் இது உதவியாக இருக்கும். இதோடு மற்ற வாட்ஸ்அப் யூசர்களுடன் நேருக்கு நேர் நிகழும் உரையாடல்களைப் பாதுகாப்பாக வைத்திருப்போம் என்று மெட்டாவின் நிறுவனரும், CEO மார்க் ஸக்கர்பெர்க் கூறியுள்ள நிலையில், என்னென்ன புதிய அம்சங்கள்? எப்படி யூசர்களுக்கு உதவியாக இருக்கும்? என இங்கே அறிந்து கொள்வோம்..

    குழுவில் இருந்து அமைதியாக வெளியேறும் வசதி:

    முன்னதாக வாட்ஸ் அப் குழுவில் இருந்து வெளியேறும் போது அனைவருக்கும் தெரியும். ஆனால் தற்போது வரவுள்ள புதிய அம்சத்தின் படி, யூசர்களை யாருக்கும் தெரிவிக்காமல் குழுவிலிருந்து வெளியேற அனுமதிக்கிறது. மேலும் குழுவில் இருந்து வெளியேற விரும்பும் போது அட்மின்களுக்கு மட்டுமே தெரிவிக்கப்படும் அம்சமும் உள்ளது.



    ஆன்லைனில் இருப்பதை யார் பார்க்கலாம் என தேர்வு செய்வது:

    வாட்ஸ்அப்பில் நுழைந்தவுடன் நாம் ஆன்லைனில் இருப்பதை அனைவருக்கும் காண்பிக்கும். இனி அந்த கவலை வேண்டாம். நீங்கள் ஆன்லைனில் இருப்பதை தனிப்பட்டதாக வைத்திருக்கவும், யாரெல்லாம் பார்க்க வேண்டும், யாரெல்லாம் நீங்கள் ஆன்லைனில் உள்ளதை பார்க்க முடியாது என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளமுடியும். இதன் மூலம் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்களுடன் சாட் செய்யும் நிச்சயம் அனைவருக்கும் ஒரு பிரைவசியை கொடுக்கும்.

    செய்திகளின் ஸ்கிரீன்ஷாட் தடுப்பது:

    அடுத்த முக்கியமான அம்சம் என்னவென்றால் ஒரு முறை செய்திகளின் ஸ்கிரீன்ஷாட் தடுப்பது. நிரந்தர டிஜிட்டல் பதிவு இல்லாமல் அனுப்பப்படும் புகைப்படங்கள் அல்லது வீடியோவை ஸ்கிரீன் ஷாட் எடுத்து மற்றவர்களுடன் பகிர்வதைத் தடுக்கிறது. நிச்சயம் தேவையற்ற மெசேஜ்கள் மற்றும் வீடியோக்கள் ஆன்லைனில் வலம் வருவதைத் தடுக்கும் பாதுகாப்பு அம்சமாகவும் உள்ளது. இந்த அம்சம் தற்போது சோதனையில் மட்டும் இருப்பதால் விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த அம்சங்கள் குறித்து வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவிக்கையில், வாட்ஸ் அப் செயலியைப் பயன்படுத்தும் 72 சதவீத மக்கள் நேர்மறையாக பேசவும், மீதமுள்ள நபர்கள் தங்களுக்கு பாதுகாப்பு தேவை என்று கருதியதால் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.
    Published by:Vijay R
    First published:

    Tags: WhatsApp

    அடுத்த செய்தி