ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

Whatsapp-ன் புதிய அசத்தல் அப்டேட்... மற்றவர்களுக்கு தெரியாமல் நீண்ட நேரம் பயன்படுத்தலாம்

Whatsapp-ன் புதிய அசத்தல் அப்டேட்... மற்றவர்களுக்கு தெரியாமல் நீண்ட நேரம் பயன்படுத்தலாம்

வாட்ஸ் அப்

வாட்ஸ் அப்

Whatsapp Updates | வாட்ஸ்அப்பில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னதாக எந்தவொரு அம்சமும் சோதனை செய்யப்படும். அப்படியாக 'டெஸ்ட்' செய்யப்படும்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

மெட்டாவுக்கு (முன்னதாக ஃபேஸ்புக்) சொந்தமான வாட்ஸ்அப் நிறுவனம் ஒரு புதிய விருப்பத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய விருப்பத்தின் வழியாக, குறிப்பிட்ட வாட்ஸ்அப் நம்பர்களின் பார்வையில் இருந்து உங்களின் 'லாஸ்ட் சீன்' ஸ்டேட்டஸை மறைக்கும் திறன் வாட்ஸ்அப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப்பில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னதாக எந்தவொரு அம்சமும் சோதனை செய்யப்படும். அப்படியாக 'டெஸ்ட்' செய்யப்படும் அம்சங்களை கண்டறிந்து அதை பற்றிய துல்லியமான தகவல்களை வழங்குவதற்கு பெயர்போன வாட்ஸ்அப்பீட்டா இன்ஃபோ (WABetaInfo) வழியாக கிடைத்த தகவல்களின் படி, யூசர்கள் தங்கள் 'லாஸ்ட் சீன்' ஸ்டேட்டஸ்-ஐ கட்டுப்படுத்த அனுமதிக்கும் ஒரு விருப்பத்தை வாட்ஸ்அப் தன் தளத்தில் சேர்த்துள்ளது.

'லாஸ்ட் சீன்' என்பது ஒரு வாட்ஸ்அப் அக்கவுண்ட்டை பயன்படுத்தும் ஒரு யூசர் எப்போது கடைசியாக ஆப்பிற்குள் இருந்து வெளியேறினார், எந்த நேரம் வரையிலாக தனக்கு கிடைத்த மெசேஜ்களை சரிபார்த்தார் என்பதை வெளிப்படுத்தும் ஒரு அம்சம் ஆகும். மேலும் ஒருவர் தன் வாட்ஸ்அப் அக்கவுண்ட்டில் 'ரீட் ரெசிப்ட்ஸ்' அம்சத்தை ஆஃப் செய்து வைத்து இருந்தாலும் கூட, நீங்கள் அனுப்பிய மெசேஜை அவர் பார்த்து இருப்பாரா என்பதை தோராயமாக அறிந்து கொள்ளவும் இந்த 'லாஸ்ட் சீன்' உதவும்.

Also Read : உங்கள் Whatsapp Profile-க்கு QR கோட் உருவாக்குவது எப்படி?

தற்போது அதற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கத்தின் கீழ், குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் 'லாஸ்ட் சீன்' ஸ்டேட்டஸ்-ஐ முடக்கும் ஒரு விருப்பம் வாட்ஸ்அப்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒரு மிக முக்கியமான ப்ரைவஸி அம்சமாக பார்க்கப்படும் இந்த புதிய விருப்பம், எப்போது அனைத்து வாட்ஸ்அப் யூசர்களும் அணுக கிடைக்கும் என்பதில் தெளிவு இல்லை. ஆனால் இது எப்படி வேலை செய்யும் என்பது பற்றி தகவல்கள் நம்மிடம் உள்ளன.

இந்த அம்சம் எப்படி வேலை செய்யும்?

வாட்ஸ்அப் ஐஓஎஸ் பீட்டா வெர்ஷன் 22.9.0.70 வழியாக அணுக கிடைக்கும் இந்த புதிய விருப்பம், ஆப்பின் ப்ரைவஸி செட்டிங்ஸ் இல் உள்ள 'லாஸ்ட் சீன்' பிரிவின் கீழ் 'மை காண்டாக்ட்ஸ் எக்செப்ட்' (My Contacts Except) என்கிற பெயரில் அணுக கிடைக்கிறது. வாட்ஸ்அப்பீட்டாஇன்ஃபோ-வின் கூற்றுப்படி, குறிப்பிட்ட விருப்பத்தின் கீழ் நீங்களொரு வாட்ஸ்அப் காண்டாக்ட்-ஐ சேர்க்கும் பட்சத்தில், அந்த நபரால் உங்களின் லாஸ்ட் சீன் ஸ்டேட்டஸ்-ஐ பார்க்க முடியாது.

முன்னரே குறிப்பிட்டபடி, இந்த புதிய விருப்பம் தற்போது வரை ஐஓஎஸ்-இன் பீட்டா வெர்ஷனின் கீழ் மட்டுமே அணுக கிடைக்கிறது. இது எப்போது ஆண்ட்ராய்டு யூசர்களுக்கு அணுக கிடைக்கும் என்பது குறித்த எந்த தகவலும் இல்லை. இந்த புதிய லாஸ்ட் சீன் விருப்பத்தை தவிர்த்து, வாட்ஸ்அப் நிறுவனம் ப்ரொஃபைல் போட்டோஸ் மற்றும் அபௌட் செக்ஷனினிலும் கூடுதல் ப்ரைவஸி கண்ட்ரோல்களையும் செயல்படுத்தி வருவதாக தெரிகிறது.

First published:

Tags: WhatsApp