Home /News /technology /

வாட்ஸ் அப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அந்த அப்டேட் விரைவில் வருகிறதாம்... குஷியில் பயனர்கள்...

வாட்ஸ் அப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அந்த அப்டேட் விரைவில் வருகிறதாம்... குஷியில் பயனர்கள்...

WhatsApp

WhatsApp

WhatsApp latest Update | வாட்ஸ்அப் தற்போது ஒரு புதிய அப்டேட்டை தரவுள்ளது. இது பலரும் எதிர்பார்த்த அப்டேட்களில் ஒன்றாக உள்ளது. பொதுவாக உங்கள் ஸ்மார்ட்போனில் நீங்கள் சேமிக்காத தொலைபேசி எண்ணிற்கு வாட்ஸ்அப் செய்ய வேண்டும் என்றால் அவரின் நம்பரை சேமித்தாக வேண்டும். ஆனால், அந்த நம்பரை சேமிக்காமலே வாட்ஸ்ஆப் தளத்தில் மற்றவருடன் தொடர்புகொள்ள ஒரு புது வசதியை கொண்டு வந்துள்ளனர்.

மேலும் படிக்கவும் ...
உலக அளவில் பல செயலிகள் இருந்தாலும் மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய கூடிய ஒரு செயலியை தான் பெரும்பாலும் விரும்பி பயன்படுத்துவார்கள். அந்த வகையில் வாட்ஸ்அப் செயலியானது உலக அளவில் பல கோடி மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதே போன்று மக்களின் விருப்பங்களை தெரிந்து கொண்டு அவ்வப்போது சிறப்பான அப்டேட்களை வாட்ஸ்அப் நிறுவனம் தந்து வருகிறது. அதன்படி ஒவ்வொரு மாதமும் சில முக்கிய அப்டேட்களை வாட்ஸ்அப் செயலியில் நம்மால் காண முடியும்.

இந்நிலையில் தற்போது ஒரு புதிய அப்டேட்டை தரவுள்ளது. இது பலரும் எதிர்பார்த்த அப்டேட்களில் ஒன்றாக உள்ளது. பொதுவாக உங்கள் ஸ்மார்ட்போனில் நீங்கள் சேமிக்காத தொலைபேசி எண்ணிற்கு வாட்ஸ்அப் செய்ய வேண்டும் என்றால் அவரின் நம்பரை சேமித்தாக வேண்டும். ஆனால், அந்த நம்பரை சேமிக்காமலே வாட்ஸ்ஆப் தளத்தில் மற்றவருடன் தொடர்புகொள்ள ஒரு புது வசதியை கொண்டு வந்துள்ளனர். நீங்கள் சாட்-இல் சேமிக்கப்படாத தொலைபேசி எண்ணைப் பெற்றால், அந்த நபருக்கு நீங்கள் ஒரு செய்தியை அனுப்பலாம்.

வாட்ஸ்அப்-இல் அந்த நம்பருடன் உரையாட மற்றொரு ஆப்ஷனை வழங்கும். ஒருவேளை அந்த நபருக்கு கால் செய்ய விரும்பினால் அது உங்களை டயலர் பயன்பாட்டிற்கு கொண்டு செல்லும். அதே போன்று, உங்கள் அட்ரஸ் புத்தகத்தில் ஃபோன் எண்ணைச் சேமிப்பதற்கான ஆப்ஷனும் இருக்கும். ஆனால், இதில் கால் மற்றும் டைரக்ட் மெசேஜ் ஆப்ஷன் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. எனவே இதை பயன்படுத்தி அந்த நம்பரை சேமிக்காமலே சாட் செய்ய முடியும்.



மேலும் அந்த ஃபோன் எண் வாட்ஸ்அப்பில் இல்லை என்றால், மெசேஜிங் செயலி அதில் தோன்றும். அதை பயன்படுத்தி கொள்ளலாம். ஒருவேளை அந்த நம்பரை சேமிக்க விரும்பினால் சேமித்தும் கொள்ளலாம். இந்த புதிய வழிமுறையை தற்போது சிறிய உதாரணத்துடன் தெளிவாக புரிந்து கொள்வோம்.

Also Read : 10 லட்சத்துக்கும் மேற்பட்ட WhatsApp கணக்குகள் முடக்கம்..!

எடுத்துக்காட்டாக, யாராவது உங்களுக்கு சாட்-இல் +91 ஃபோன் எண்ணில் இருந்து சாட் செய்திருந்து, அந்த எண் வாட்ஸ்அப்பில் இருந்தால், உங்களுக்கு மூன்று ஆப்ஷன்கள் காட்டப்படும். முதலில் +91 உடன் சாட் செய்யவும் என்று காட்டும். அடுத்து +91 நம்பருக்கு டயல் செய்யவும் என்று காட்டும் மற்றும் மூன்றாவதாக கான்டெக்ட்டில் சேர்க்கவும் என்று காட்டப்படும். மறுபுறம், இந்த எண் வாட்ஸ்அப் இல் இல்லை என்றால், நீங்கள் இரண்டு ஆப்ஷன்களை பெறுவீர்கள். ஒன்று +91 எண்ணிற்கு டயல் செய்வது, மற்றொன்று கான்டெக்ட்டில் சேர்ப்பது.

Also Read : வாட்ஸ்அப் அக்கவுண்ட்டை ஒரே நேரத்தில் 4 டிவைஸ்களில் பயன்படுத்தும் அம்சம் அறிமுகம்!

தற்போது, மக்கள் சேமிக்கப்படாத தொலைபேசி எண்ணுக்கு செய்தி அனுப்ப http://wa.me/phone என்கிற லிங்க்-ஐ சென்று பார்க்கலாம். பொதுவாக வாட்ஸ்அப்பில் தெரியாத நபர்கள் அல்லது சேவை தொடர்பான எண்ணைச் சேமிப்பதற்கு பல நேரங்களில் நீங்கள் விரும்புவதில்லை. இது போன்ற சூழ்நிலைகளில் மேலே கொடுக்கப்பட்ட இணைப்பு பயன்படுத்தப்படுகிறது. வாட்ஸ்அப்பின் 2.22.8.11 வெர்ஷனில் இந்த புதிய அப்டேட் வரவுள்ளது. மேலும் இது இன்னும் டெஸ்டிங் முறையில் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Selvi M
First published:

Tags: Technology, Whatsapp Update

அடுத்த செய்தி