Home /News /technology /

Status-ஐ குறிப்பிட்ட நபர்களிடமிருந்து மறைக்க அனுமதிக்கும் பீட்டா வெர்ஷனை வெளியிட உள்ள வாட்ஸ்அப்.!

Status-ஐ குறிப்பிட்ட நபர்களிடமிருந்து மறைக்க அனுமதிக்கும் பீட்டா வெர்ஷனை வெளியிட உள்ள வாட்ஸ்அப்.!

வாட்ஸ்அப்

வாட்ஸ்அப்

WhatsApp Update | வாட்ஸ்அப் அவ்வப்போது புது புது அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ்-இற்கான ஒரு புது அப்டேட்டை கொடுக்க உள்ளது. இது யூசர்கள் தங்கள் ஆன்லைன் ஸ்டேட்டஸை அவர்கள் தேர்ந்தெடுக்கும் நபர்களிடமிருந்து மறைக்க அனுமதிக்கிறது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
சமீபத்திய அறிக்கைகளின்படி, மிக விரைவில் ஆண்ட்ராய்டு பீட்டா வெர்ஷன் 2.22.20.9-இல் தனது ஸ்டேட்டஸை குறிப்பிட்ட நபர்களிடம் இருந்து மறைக்க கூடிய அம்சத்தை வாட்ஸ்அப் கொண்டுவர உள்ளது. இதன் மூலம் யூசர்கள் தங்கள் ஆன்லைன் ஸ்டேட்டஸை யார் பார்க்கலாம், யார் பார்க்க முடியாது என்பதைத் தேர்வு செய்ய இந்த அம்சம் அனுமதிக்கிறது.

மெட்டா நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ்அப்பானது, யூசர்கள் தங்கள் தொடர்புகளிலிருந்து 'Last Seen'-ஐ மறைக்க அனுமதிக்கிறது. இதனிடையே இந்த புதிய அம்சத்தின் மூலம், யூசர்கள் தங்கள் ஆன்லைன் ஸ்டேட்டஸை மறைக்க முடியும். மேலும் ஆன்லைன் ஸ்டேட்டஸ் மற்றும் லாஸ்ட் சீன் ஆகிய இரண்டையும் மறைக்க விரும்பும் யூசர்கள் இதற்கான குறிப்பிட்ட நபர்களை தேர்வு செய்ய முடியும். இந்த அம்சத்தின் வெளியீடு WABetaInfo-ஆல் முதலில் வெளியிடப்பட்டது. மேலும் இந்த மாற்றங்கள் வரும் மாதங்களில் அனைத்து யூசர்களுக்கும் கிடைக்கும் என்று தெரிய வந்துள்ளது.

இந்த அறிக்கையின்படி, வாட்ஸ்ஆப் ஆனது ‘Last Seen’ என்ற தனியுரிமை அமைப்பை ‘Last Seen and Online’ என மாற்றியுள்ளது. கடைசியாகப் பார்த்த விருப்பத்தை 'Nobody', 'Contacts' மற்றும் 'Everyone' ஆகிய நிலையை கொண்டதாக காண்பிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இவற்றுடன் ஒரு கூடுதல் ஆப்ஷனும் கிடைக்கவுள்ளது. ‘Everyone except..’ என்கிற ஆப்ஷன் கிடைக்கவுள்ளது. ​​



இந்த அம்சம் தற்போது பீட்டா வெர்ஷனில் உள்ளது. நீங்கள் பீட்டா வெர்ஷனில் இல்லாவிட்டால், தற்போது இந்த புது அப்டேட் உங்களுக்கு வர வாய்ப்பில்லை. இந்த ஆப்ஷனை பெற செட்டிங்ஸ்-க்குள் செல்லவும். அதன்பிறகு, அக்கவுண்ட் என்பதை கிளிக் செய்யவும். அடுத்து, அதில் பிரைவஸி என்கிற ஆப்ஷனை தேர்வு செய்யவும். இறுதியாக Last Seen and Online என்பதை தேர்வு செய்யவும். இது ஒருவரின் வாட்ஸ்ஆப் ஆன்லைன் நிலையை யார் பார்க்கலாம், யார் பார்க்க முடியாது என்பதை எளிதில் மாற்ற உதவும்.

Also Read : இனி வாட்ஸ்அப் பயன்படுத்துவதற்கும் தனியாகக் கட்டணம் - மகிழ்ச்சியில் டெலிகாம் நிறுவனங்கள்.. ஆனால் யூசர்கள்?

இந்த புது அப்டேட் பிரைவசியை விரும்பும் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும். இந்த புது அப்டேட் டெஸ்க்டாப் வெர்ஷனில் வருவதற்கு இன்னும் கூடுதல் காலம் ஆகலாம் என்று கூறப்படுகிறது. அதே போன்று ஆப்பிள் போன்களுக்கு இந்த அப்டேட் வரவும் சிறிது காலம் எடுக்கலாம். மேலும், இதுபோன்று மேலும் பல அம்சங்களை வாட்ஸ்ஆப் நிறுவனம் இனி வரும் காலங்களில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாட்ஸ்ஆப் ஸ்டேட்ஸில் இதுபோன்ற அப்டேட்கள் சிறப்பான முறையில் அந்த செயலியை பயன்படுத்த உதவும். இதற்கு முன்னதாக வாட்ஸ்ஆப் ஸ்டிக்கர்ஸ் போன்றவற்றால் அப்டேட்கள் வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Selvi M
First published:

Tags: Status, Technology, Whatsapp Update

அடுத்த செய்தி