பயனாளர்களின் சௌகரியம் கருதி அவ்வப்போது மேம்பட்ட வசதிகளை வாட்ஸ் அப் அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக, குரூப்களில் தற்போது 256 உறுப்பினர்களை மட்டுமே இணைக்க முடியும் என்ற சூழலில், அந்த எண்ணிக்கையை விரிவுபடுத்திக் கொள்வதற்கான வசதியை விரைவில் அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மற்றவர்கள் அனுப்பும் மெசேஜ்களுக்கு ரியாக்ஷன் செய்வதற்கான எமோஜிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
வாட்ஸ் அப்-பில் சர்ச்சைக்குரிய பதிவுகள், ஆட்சேபகரமான பதிவுகள், வன்முறையைத் தூண்டும் பதிவுகள் போன்றவற்றை கட்டுப்படுத்தும் வகையில், குரூப் மெம்பர்களின் பதிவுகளை அட்மின் டெலீட் செய்வதற்கான அதிகாரத்தை வழங்கவும் வாட்ஸ் அப் நடவடிக்கை எடுத்துள்ளது.
கம்பானியன் மோடு
சமீபத்திய முயற்சியாக கம்பானியன் மோடு என்னும் வசதியை அறிமுகம் செய்வதற்கான முயற்சிகளை வாட்ஸ் அப் நிறுவனம் தொடங்கியுள்ளது. அதாவது, ஒரே வாட்ஸ் அப் அக்கவுண்ட்-ஐ நீங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட டிவைஸ்களில் பயன்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பை இது வழங்கும்.
ஏற்கனவே வாட்ஸ் அப் வெப் என்ற வசதியின் மூலமாக உங்கள் ஸ்மார்ட் ஃபோனில் உள்ள வாட்ஸ் அப்-ஐ கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் வசதி பயன்பாட்டில் இருந்து வருகிறது.
ஒரு ஃபோனில் லாக் அவுட் ஆகும்
இத்தகைய சூழலில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஸ்மார்ட் ஃபோன்கள் அல்லது மொபைல்களில் உங்கள் வாட்ஸ் அப் அக்கவுண்ட்-ஐ பயன்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பை வழங்குவதாக புதிய அப்டேட் இருக்கப் போகிறது. இதுகுறித்து WABetaInfo என்னும் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், “ரெஜிஸ்டர் செய்யப்பட்ட வாட்ஸ் அப் அக்கவுண்ட்-ஐ உங்கள் ஃபோனில் இணைப்பதற்கான வசதியை கம்பானியன் மோடு வழங்க இருக்கிறது. கம்பானியன் மோடு-க்கு நீங்கள் மாறும்போது உங்களின் தற்போதைய வாட்ஸ் அப் அக்கவுண்ட்-இல் இருந்து லாக் அவுட் செய்யப்படுவீர்கள்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Also Read : மீண்டும் 18 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம்..! 25 சதவிகிதக் கணக்குகள் இந்தியாவை சேர்ந்தவை.!
மேலும் அந்த அறிக்கையில், “கம்பானியன் மோடுக்கு மாறும்போது, லோக்கலில் சேமிக்கப்பட்ட உங்கள் டேட்டா முழுவதுமாக நீக்கபடும். குறிப்பாக மெசேஜ் மற்றும் மீடியா உள்ளிட்ட அனைத்தும் நீக்கப்படும். அதாவது, இரண்டாவது ஸ்மார்ட் ஃபோனில் நீங்கள் லாகின் செய்யும்போது முதலாவது ஃபோனில் இருந்து நீங்கள் லாக் அவுட் செய்யப்படுவீர்கள்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது?
கம்பானியன் மோடு வசதியை வாட்ஸ் அப் நிறுவனம் தற்போது சோதனை செய்து வருகிறது. அதே சமயம், இது எப்போது அறிமுகம் செய்யப்படும் என்பது குறித்து இதுவரையிலும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
Also Read : வாட்ஸ் அப் அக்கவுண்ட்கள் திருட கூடும் - ஜாக்கிரதை!
வாட்ஸ் அப் குரூப்களில் 512 உறுப்பினர்களை வரை இணைத்துக் கொள்ளவும், 2 ஜிபி வரை டேட்டா அனுப்பிக் கொள்ளவும் வசதிகளை அறிமுகம் செய்வதற்கான நடவடிக்கைகளை வாட்ஸ் அப் மேற்கொண்டு வருகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.