ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

வாட்ஸ்அப் அப்டேட் - விரைவில் வாய்ஸ் மெசேஜில் வரவுள்ள புதிய அம்சம்!

வாட்ஸ்அப் அப்டேட் - விரைவில் வாய்ஸ் மெசேஜில் வரவுள்ள புதிய அம்சம்!

வாய்ஸ் மெசேஜில் வரவுள்ள புதிய அம்சம்

வாய்ஸ் மெசேஜில் வரவுள்ள புதிய அம்சம்

தற்போது வெளியிடப்பட்ட ஒரு வீடியோவின் படி, வாட்ஸ்அப் யூசர்கள் வாய்ஸ் மெசேஜ்களை தற்போது எப்படி பதிவு செய்கிறார்களோ அதே வழியில் பதிவு செய்வார்கள், ஆனால் பதிவை இடையில், இடைநிறுத்த (pause செய்ய) ஒரு புதிய ஆப்ஷன் சேர்க்கப்படும்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

கோடிக்கணக்கான யூசர்களைக் கொண்ட வாட்ஸ்அப், அவ்வபோது யூசர் எக்ஸ்பீரியன்சை மேம்படுத்த, புதிய அப்டேட்களை வெளியிடுகிறது. வாட்ஸ்அப் சாட்டின் செய்திகளை தட்டச்சு செய்து அனுப்புவதற்கு கூடுதல் தேர்வாக, குரல் பதிவு செய்து வாய்ஸ் மெசேஜாக அனுப்பவதும் பிரபலமாகி உள்ளன. இந்த நிலையில் வாய்ஸ் மெசேஜில் அப்டேட் ஒன்று விரைவில் வெளிவரப் போகிறது என்ற செய்தி வெளிவந்துள்ளது. அதைப் பற்றிய விவரங்கள் இங்கே.,

வாட்ஸ்அப் யூசர்கள், குரல் பதிவு செய்து அனுப்பும்போது, இடையில் இடைநிறுத்த அனுமதிக்கும் வகையில் புதிய அம்சத்தை உருவாக்கி வருவதாகக் கூறப்படுகிறது. தற்போது, வாய்ஸ்நோட் எனப்படும் வாய்ஸ் மெசேஜ்களை யூசர்கள் எந்த இடைவெளியும் இல்லாமல் மட்டுமே பதிவு செய்ய முடியும். இந்த நிலையில் வரவுள்ள புதிய அப்டேட்டில் தற்போதைய அம்சம் போல இல்லாமல், யூசர்கள் தாங்கள் பதிவு செய்து அனுப்பும் வாய்ஸ் மெசேஜ்களை தெளிவாக, துல்லியமாகவும் இருக்கும் வகையில் மாற்ற உள்ளனர்.

மேலும் இந்த புதிய அப்டேட், வாய்ஸ் மெசேஜ்களை பதிவு செய்து கொண்டிருக்கும் போது இடைநிறுத்தி (pause) மீண்டும் நிறுத்திய இடத்திலிருந்து தொடங்க அனுமதிக்கும். இதனால் யூசர்கள் புதிய அனுபவத்தை பெற முடியும். வாட்ஸ்அப் செயலியை புதுப்பிக்கும் செயல்முறைகளில், இந்த அம்சம் ஆண்டிராய்டு மற்றும் iOS மட்டுமின்றி, ஆண்டிராய்டு பீட்டா வெர்ஷனிலும் இடம்பெறக்கூடும் என்று கூறப்படுகிறது. ஆனால், வாட்ஸ்அப்பின் தலைமையான ஃபேஸ்புக் நிறுவனமும் இதைப்பற்றி எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.

தற்போது வெளியிடப்பட்ட ஒரு வீடியோவின் படி, வாட்ஸ்அப் யூசர்கள் வாய்ஸ் மெசேஜ்களை தற்போது எப்படி பதிவு செய்கிறார்களோ அதே வழியில் பதிவு செய்வார்கள், ஆனால் பதிவை இடையில், இடைநிறுத்த (pause செய்ய) ஒரு புதிய ஆப்ஷன் சேர்க்கப்படும். வாய்ஸ் மெசேஜ்களை அனுப்ப, யூசர்கள் கீழ் வலதுபுறத்தில் உள்ள பொத்தானை தேர்ந்தெடுக்கலாம், பதிவு செய்ததை டெலிட் செய்யும் விருப்பம் கீழே இடதுபுறத்தில் உள்ளது.

இதற்கிடையில், தேர்ந்தெடுக்கப்பட்ட பீட்டா சோதனையாளர்களுக்கு முழுவதும் என்க்ரிப்ட் செய்யப்பட்ட சாட் பேக்கப்களை உருவாக்கத் தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

Also read... WhatsApp-ல் நவராத்திரி ஸ்டிக்கர்களை டவுன்லோட் & ஷேர் செய்வது எப்படி!

இந்த அம்சத்தைப் பற்றிய செய்தியை ஃபேஸ்புக் சில வாரங்களுக்கு முன்பு அறிவித்தது. இதன் மூலம், யூசர்கள் 64-bit கீ மற்றும் ஒரு கிளவுட் அடிப்படையிலான கீ மற்றும் கடவுச்சொல்லை தேர்வு செய்யலாம். இந்த தரவு, கூகுள் டிரைவ் அல்லது iCloud இல் சேமித்து வைக்கலாம். ஆனால், பதிவேற்றும் முன்பு, அனைத்து தரவுகளுமே என்க்ரிப்ட் செய்யப்படும்.

ஒரே நேரத்தில் பல சாதங்களில் லாகின் செய்து பயன்படுத்த முடியும் என்ற அப்டேட்டை வாட்ஸ்அப் சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இதற்கான பாதுகாப்பு குறித்தும் வாட்ஸ்அப் விளக்கியது. ஆனால், சமீபத்தில், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் ஆகிய செயலிகள் உலக அளவில் முடங்கிய நிகழ்விற்கு பிறகு, நிறுவனம் பல்வேறு விதத்தில் யூசர்களிடமிருந்து எதிர்ப்பை சந்தித்தது. சர்வர்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, யூசர்களால் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த முடியவில்லை என்று நிறுவனம் தெரிவித்தது. இந்த மாதிரி மற்றுமொரு உலகளாவிய பாதிப்பு ஏற்படாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

First published:

Tags: WhatsApp Audio, Whatsapp Update