• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • இந்திய யூஸர்களை கவர UPI பேமெண்ட்ஸ்களுக்கு கேஷ்பேக் கூப்பன்களை வழங்க WhatsApp திட்டம்!

இந்திய யூஸர்களை கவர UPI பேமெண்ட்ஸ்களுக்கு கேஷ்பேக் கூப்பன்களை வழங்க WhatsApp திட்டம்!

வாட்ஸ் அப்

வாட்ஸ் அப்

இந்தியாவின் UPI பேமெண்ட்ஸ் சந்தையில் ஏற்கனவே Google Pay, PhonePe, Paytm போன்ற நன்கு அறியப்பட்ட ஆப்ஸ்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், தானும் இந்த பட்டியலில் சேர வாட்ஸ்அப் நிறுவனம் தனது பேமெண்ட்ஸ் அம்சத்தை யூஸர்களிடம் பிரபலப்படுத்தும் முயற்சியாக நடவடிக்கையில் இறங்கி உள்ளது.

  • Share this:
ஃபேஸ்புக்கிற்கு சொந்தமான மற்றும் உலகம் முழுவதும் பிரபல மெசேஜிங் App-ஆக இருந்து வரும் வாட்ஸ்அப்-பின் லேட்டஸ்ட் அம்சங்களில் ஒன்று தான் வாட்ஸ்அப் பேமண்ட்ஸ். இந்தியாவிலேயே கோடிக்கணக்கான மக்கள் வாட்ஸ்அப்பை மெசேஜிங் காரணங்களுக்காக பயன்படுத்தினாலும் கூட, இதன் பேமெண்ட்ஸ் ஆப்ஷனை யாரும் அவ்வளவாக பயன்படுத்தப்படுவதில்லை. எனவே வாட்ஸ்அப் தனது பேமெண்ட்ஸ் அம்சத்தை வாடிக்கையாளர்கள் பயன்படுத்த ஊக்குவிக்கும் முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு உள்ளது.

இதன் ஒரு பகுதியாக வாட்ஸ்அப் தனது பேமெண்ட்ஸ் அம்சத்தை மார்க்கெட்டிங் செய்ய, போட்டியாளரான கூகுளின் பேமெண்ட் சேவையான Google Pay-வை போலவே கேஷ்பேக் ஆஃபர்களை கொண்டு வரலாம் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. வாட்ஸ்அப் டிராக்கரான WABetaInfo-ன் தகவலின் படி, வாட்ஸ்அப் மூலம் செய்யப்படும் UPI பேமெண்ட்ஸ்களுக்கு, விரைவில் வாட்ஸ்அப் கேஷ்பேக் சலுகைகளை தர உள்ளதாக கூறப்பட்டு இருக்கிறது. இருப்பினும் இந்த அம்சம் இன்னும் டெவலப்பிங் ஸ்டேஜில் உள்ளது மற்றும் பீட்டா டெஸ்டர்ஸுக்கு இது சென்றடைய இன்னும் சில வாரங்கள் ஆகலாம் என்றும் கூறப்படுகிறது.

2018-ஆம் ஆண்டின் துவக்கத்தில் வாட்ஸ்அப் யுபிஐ அடிப்படையிலான பேமெண்ட்ஸ்களை அறிமுகப்படுத்தியது. எனினும் இந்த சேவை சில வருடங்கள் பீட்டா வெர்ஷனில் இருந்தது, அதே நேரத்தில் வாட்ஸ்அப் யுபிஐ சேவைகளை வழங்க தேவையான அனைத்து அனுமதிகளையும் பெற்றது.இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு, அனைத்து யூஸர்களுக்கும் வாட்ஸ்அப் பேமெண்ட்ஸ் அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டது. என்றாலும் கோடிக்கணக்கான இந்திய யூஸர்களை கொண்ட வாட்ஸ்அப்-பின் இந்த புதிய அம்சம் நாட்டில் பெரியளவில் இன்னும் வரவேற்பை பெறவில்லை.

ALSO READ |  Redmi 9 Activ - இந்த புதிய ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை!

இந்நிலையில் தான் கூகுள் பே மற்றும் பேடிஎம் போன்ற போட்டியாளர்களுடன் போட்டியிடவும், வாடிக்கையாளர்களிடையே வாட்ஸ்அப் பேமெண்ட்ஸ் அம்சத்தை பிரபலப்படுத்தவும் ரிவார்ட் டிஸ்கவுன்ட்ஸ்களை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்த உள்ளதாக கூறி இருக்கும் WABetaInfo, அடுத்தடுத்து வரும் வாட்ஸ்அப் வெர்ஷன் அப்டேட்களின் போது இந்த சலுகை அம்சம் சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் WABetaInfo தகவல் தெரிவித்து, வரவிருக்கும் அம்சத்தின் ஸ்கிரீன்ஷாட்டயும் சோஷியல் மீடியா போஸ்ட்டில் சேர்த்துள்ளது.



அந்த ஸ்கிரீன்ஷாட் "உங்கள் அடுத்த பேமெண்டில் கேஷ்பேக் பெறுங்கள்" மற்றும் "தொடங்குவதற்கு டேப் செய்யவும்." இந்த சேவை இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே. ரூ 10 அல்லது அதற்கு மேற்பட்ட பேமெண்ட்ஸ்கள் கேஷ்பேக் வவுச்சர்களுக்கு தகுதியுடையதாக இருக்கலாம்" என்று காட்டுகிறது.

ALSO READ | சென்னை நிறுவனம் உருவாக்கிய ஆசியாவின் முதல் பறக்கும் கார்: அசரவைக்கும் தகவல்கள்

இந்தியாவின் UPI பேமெண்ட்ஸ் சந்தையில் ஏற்கனவே Google Pay, PhonePe, Paytm போன்ற நன்கு அறியப்பட்ட ஆப்ஸ்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், தானும் இந்த பட்டியலில் சேர வாட்ஸ்அப் நிறுவனம் தனது பேமெண்ட்ஸ் அம்சத்தை யூஸர்களிடம் பிரபலப்படுத்தும் முயற்சியாக மேற்கண்ட நடவடிக்கையில் இறங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankaravadivoo G
First published: