ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

வாட்ஸ் அப் மெசேஜை டெலீட் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிப்பு?

வாட்ஸ் அப் மெசேஜை டெலீட் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிப்பு?

வாட்ஸ்அப்

வாட்ஸ்அப்

WhatsApp Update : வாட்ஸ் அப் மெசேஜை டெலீட் செய்வதற்கான கால வரம்பை நீட்டிப்பது குறித்து வாட்ஸ் அப் நிறுவனம் பரிசீலனை செய்து வருகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

வாட்ஸ் அப் பயன்படுத்தும் எல்லோருமே முன் யோசனையின்றி அல்லது கை தவறி அல்லது பிழைகளுடன் ஒரு செய்தியை குரூப் அல்லது பிறருக்கு அனுப்பி இருப்போம். அதுபோன்ற சூழலில் பதறிப்போய் ‘டெலீட் பார் எவரி ஒன்’ என்ற வாய்ப்பை பயன்படுத்தி நாம் மெசேஜை அழிப்பது வழக்கம்.

ஆனால், இந்த வாய்ப்பு சிறிது நேரத்துக்கு மட்டுமே கிடைக்கும். அதற்குப் பிறகு டெலீட் பார் எவரி ஒன் கொடுக்க முடியாது. இதனால், பயனாளர்கள் வருந்துவது உண்டு. இந்நிலையில், ஒவ்வொரு பயனாளருக்கும், மெசேஜ்களை டெலீட் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிப்பது குறித்து வாட்ஸ் அப் ஆப்-ஐ நிர்வகித்து வரும் மெடா நிறுவனம் ஆலோசித்து வருகிறது.

தற்போது அமலில் உள்ள விதியின்படி ஒரு மணி நேரம், 8 நிமிடங்கள், 16 நொடி வரையிலும் மட்டுமே நீங்கள் டெலீட் பார் எவரி ஒன் என்ற வாய்ப்பை பயன்படுத்தி, அனைவரது பார்வையில் இருந்தும் மெசேஜை டெலீட் செய்ய முடியும். இந்நிலையில், இந்த கால வரம்பை நீட்டிப்பது குறித்து வாட்ஸ் அப் நிறுவனம் பரிசீலனை செய்து வருகிறது என்று வாபேடா இன்ஃபோ என்ற நிறுவனம் தகவல் தெரிவிக்கிறது. ஆனால், இது எப்போது அமலுக்கு வரும் என்பது குறித்த தகவல் இல்லை.

இதையும் படியுங்கள் : இந்தியர்களின் 1.32 கோடி வாட்ஸ்அப் கணக்குகள் 6 மாதங்களில் நீக்கம்

வாட்ஸ் அப் பீட்டா வெர்சன் 2.22.410 என்ற மேம்படுத்தப்பட்ட ஆப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு, மெசேஜை நிரந்தரமாக டெலீட் செய்வதற்கான வாய்ப்பை இரண்டு நாள், 12 மணி நேரத்துக்கு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. அதாவது, ஒரு மெசேஜை நீங்கள் பதிவு செய்த பிறகு, இரண்டரை நாள் கழித்தும் கூட மற்றவர்களின் பார்வையில் இருந்து நிரந்தரமாக டெலீட் செய்ய முடியும். மெசேஜ் டெலீட் செய்யப்பட்ட பிறகு, “திஸ் மெசேஜ் வாஸ் டெலீடட் (இந்த மெசேஜ் டெலீட் செய்யப்பட்டது)’’ என்ற நோட்டிபிகேஷன் உங்களுக்கு வரும்.

மெசேஜ் டெலீட் செய்வதற்கான கால அவகாசத்தை வாட்ஸ் அப் நிறுவனம் அதிகரிப்பது இது முதல்முறை அல்ல. இதற்கு முன்பு, மெசேஜ் டெலீட் செய்வதற்கான கால அவகாசத்தை 7 நாட்கள் வரையிலும் நீட்டிப்பது குறித்து வாட்ஸ் அப் நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆலோசனை செய்தது. ஆனால், ஒரு வாரம் கழித்து ஒரே மெசேஜை டெலீட் செய்ய எந்த ஒரு பயனாளரும் விரும்ப மாட்டார் எனக் கருதி அந்த பரிந்துரையை கைவிட்டது.

இதையும் படியுங்கள் : Android யூஸர்களுக்காக விரைவில் பயனுள்ள வாய்ஸ் மெசேஜ் அம்சத்தை அறிமுகப்படுத்தும் whatsapp..!

முதன் முதலில், மெசேஜை அனைவருக்கும் டெலீட் செய்வதற்கான கால வரம்பு 7 நிமிடங்களுக்கு மட்டுமே இருந்தது. பின்னர், அது ஒரு மணி நேரமாக நீட்டிக்கப்பட்டது. தற்போது, மீண்டும் கால அவகாசத்தை நீட்டித்து வாட்ஸ் அப் நிறுவனம் இறுதியான அறிவிப்பை வெளியிடுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

First published:

Tags: WhatsApp, Whatsapp Update