வாட்ஸ்அப்-பில் லாகின் OTP-க்கு பதிலாக இருமடங்கு பாதுகாப்புடன் வரப்போகிறது "ஃப்ளாஷ் கால்"!

வாட்ஸ் அப்

மோசடி செய்பவர்களை தடுக்கும் வகையில் இந்த அம்சம் வாட்ஸ் ஆப்பில் விரைவில் கொண்டுவரப்பட உள்ளது.

  • Share this:
வாட்ஸ்அப் செயலியை இன்ஸ்டால் செய்தபிறகு கணக்கில் உள்நுழைய நீங்கள் பெறும் லாகின் OTP மெசேஜ்களுக்கு மாற்றாக விரைவில் மற்றொரு அம்சம் வரப்போகிறது. இதனால் யூசர்களுக்கு, OTP லாகின் ஒரு ஆப்ஷனாக மாறலாம் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. WABetaInfo வெளியிட்ட புதிய பதிவின்படி, வாட்ஸ்அப் ‘ஃபிளாஷ் கால்’ என்ற புதிய அம்சத்தை சோதித்து வருவதாக குறிப்பிட்டுள்ளது. மேலும் அதன் ஒரே நோக்கம் வழக்கமான ஒரு முறை கடவுச்சொல்லை (OTP) மாற்றுவதன் மூலம் வாட்ஸ்அப்பில் உள்நுழையும் யூசர்களின் நம்பகத்தன்மையை சரிபார்ப்பதே ஆகும்.

ஃபிளாஷ் கால்களுக்கு ஒரு யூசர் தங்கள் தொலைபேசி டயலருக்கு வாட்ஸ்அப் அணுகலையும், அவர்களின் கால் லிஸ்ட்டுக்கான அணுகலையும் வழங்க வேண்டும். தற்போது இந்த அம்சம் யூசர்கள் தேர்வு செய்யும் விருப்பமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் வாட்ஸ்அப் லாகின் ஃபிளாஷ் கால் மிகவும் பாதுகாப்பான விருப்பமாகக் கருதப்பட்டால், செயலியின் Android யூசர்கள் விரைவில் அதை தங்கள் நிலையான ஆப்களில் பெறலாம் என்றும் கூறப்படுகிறது.

Also Read:   ‘சச்சினிடம் கற்றேன்; இந்த டெக்னாலஜி அப்போதே இருந்திருந்தால்’: ஆதங்கத்தை கொட்டிய வீரேந்தர் சேவக்!

இந்த நேரத்தில் பீட்டா வெளியிட்டுள்ள தகவலின்படி, வாட்ஸ்அப் செயலியின் "ஃபிளாஷ் கால்"அம்சத்திற்கு யூசர்கள் தங்கள் மொபைலில் மேலே குறிப்பிட்ட அனுமதிகளை வழங்க வேண்டும். அனுமதிகள் வழங்கப்பட்டதும், அந்த யூசரின் தொலைபேசி எண்ணுக்கு ஆட்டோமேட்டிக் வாட்ஸ்அப் சேவையக அழைப்பு வரும். மேலும் அந்த அழைப்பு தானாகவே துண்டிக்கப்படும். இதைச் செய்வதன் மூலம், யூசர்கள் சாதாரணமாக லாகின் செய்யும்போது செயலியில் கைமுறையாக லாகின் OTP-ஐ உள்ளிட வேண்டிய தேவை இருக்காது.

மோசடி செய்பவர்களை தடுக்கும் வகையில் இந்த அம்சம் விரைவில் கொண்டுவரப்பட உள்ளது. உண்மையான யூசருக்கான OTP அணுகலைத் தடுக்கும் வகையில் லாகின் முயற்சியை ஒரு ஹேக்கர் முரட்டுத்தனமாகக் செய்யக்கூடும் என்று ஒரு சமீபத்திய அறிக்கையில் ஹேக் மூலம் யூசர்களின் கணக்குகள் திருடப்படலாம் என்பதும் தெரியவந்தது. இதன் விளைவாக வாட்ஸ்அப் நிறுவனம் தங்களது யூசர்களின் பாதுகாப்பை பலப்படுத்தும் அம்சங்களில் பணிபுரிந்து வருகிறது.

Also Read:   நிரந்தர தலைவர் கோரி சோனியாவுக்கு கடிதம் எழுதிய காங்கிரஸ் தலைவர் பாஜகவில் இணைந்தார்

பீட்டா அறிக்கையின்படி, இந்த அம்சம் செயல்படும் விதம் குறித்து நிறுவனம் ஆராய்ந்து வருவதாகவும், மேலும் யூசர்களுக்கு அதை வழங்க சிறந்த வழியை வாட்ஸ்அப் விரைவில் வெளியிடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பீட்டா வெளியிட்ட அறிக்கையில், வாட்ஸ்அப் தானியங்கி சரிபார்ப்பு அழைப்புத் திரை, அதற்கு ஏன் அனுமதிகள் தேவை என்பதை விவரிக்கும் சில ஸ்க்ரீன் ஷாட்களையும் வெளியிட்டுள்ளது.

மேலும் வாட்ஸ்அப் கால் ஆப்ஷனுக்காக யூசர் மொபைலில் உள்ள கால் லாக் மற்றும் டயலரை ஒரு முறை மட்டுமே அணுகும். அதற்குப் பிறகு அணுகாது என்றும் கூறப்படுகிறது. அழைப்பு செயல்முறையுடன் யூசர் வெரிபை (Verify) செயல்முறையை விவரிக்கும் ஒரு பக்கத்துடன் யூசர்களை அந்த ஸ்க்ரீன் இணைக்கும். அதன் மூலம் அம்சம் குறித்த அனைத்து தகவல்களையும் தெரிவித்து கொள்ளலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த அம்சம் Android-ல் அறிமுகமானாலும், iOS யூசர்கள் அம்சத்தை அணுக முடியாது. ஐபோனில் ஒரு யூசர் பயன்படுத்தும் எந்தஒரு செயலியும் டயலர் மற்றும் அழைப்பு பட்டியலுக்கு அணுகலை பெற அதன் API ஐ அனுமதி வழங்காது. அதாவது அனைத்து ஐபோன் பயனர்களும் வாட்ஸ்அப்பில் லாகின் செய்வதற்கு OTPக்களையே தொடர்ந்து நம்ப வேண்டிய சூழ்நிலை ஏற்படும். எல்லா மேனுவல் லாகின்களையும் புறக்கணிப்பதால், OTP வைத்து ஒரு யூசரின் கணக்கை கையகப்படுத்த ஹேக் செய்பவர்களால் காட்டாயம் முடியாது என நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
Published by:Arun
First published: