ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

குரூப்பில் 1024 பேர்.. 2ஜிபி ஃபைல்.. புது அப்டேட்களை வெளியிட்ட வாட்ஸ் அப்.. டெலகிராமை சமாளிக்க புது யுக்தி..!

குரூப்பில் 1024 பேர்.. 2ஜிபி ஃபைல்.. புது அப்டேட்களை வெளியிட்ட வாட்ஸ் அப்.. டெலகிராமை சமாளிக்க புது யுக்தி..!

வாட்ஸ் அப்

வாட்ஸ் அப்

டெலகிராம் செயலிக்கு போட்டியாக பல புதிய சிறப்பம்சங்களை வாட்ஸ் அப் அறிமுகம் செய்துள்ளது

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  உலகம் முழுவதும் பல கோடி  பயனர்கள் பயன்படுத்தக்கூடிய தகவல் பரிமாற்ற செயலியாக வாட்ஸ்அப் செயல்பட்டு வருகிறது. வாட்ஸ் அப் இல்லையென்றால் ஒரு நொடி கூட இருக்க முடியாது என்ற மனநிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ள நிலையில், பயனர்களின் வசதிக்காக பல்வேறு அம்சங்களை வாட்ஸ் அப் அவ்வப்போது அப்டேட் செய்து வருகிறது.

  ஆரம்பத்தில் வாட்ஸ் அப் குழுவில் 256 நபர்கள் இணைய முடியும் என்ற எண்ணிக்கை 512 ஆக அதிகரித்தது.  விரைவாக மெசேஜ்களுக்கு ரிப்ளே செய்ய ஈமோஜிகளை அனுப்புவது போன்ற பல அப்டேட்டுகளை மெட்டா நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

  இந்நிலையில் வாட்ஸ் அப் மேலும் சில சிறப்பம்சங்களை அப்டேட்டாக கொண்டு வந்துள்ளது. இது குறித்து வாட்ஸ் அப் ஓனர் மார்ட் தன்னுடைய சோஷியல் மீடியாவில் வீடியோ ஒன்றை வெளியிட்டு புதிய அப்டேட் தொடர்பான விளக்கத்தை அளித்தார்.

  அதன்படி, இனி குரூப்பில் 1024 நபர்களை இணைத்துக்கொள்ள முடியும்.  சூப்பர் அப்டேட்டாக இனி வாட்ஸ் அப்பில் 2ஜிபி வரை ஃபைல்களை அனுப்ப முடியும்.

  Twitter செயலிக்கு மாற்றாக Bluesky உருவாக்கும் ஜாக்!

  வாட்ஸ் அப்பில் கம்யூனிட்டிஸ் என்ற ஆப்ஷனை அறிமுகம் செய்துள்ளனர். இந்த கம்யூனிட்டி மூலம் சிறு குரூப்கள், மல்டிபிள் த்ரட்ஸ் (multiple threads) போன்ற புது ஆப்ஷன்களை உருவாக்க முடியும். அதாவது ஒரு கம்யூனிட்டிக்குள் பல குரூப்களை இணைத்துக்கொள்ள முடியும். இதன் மூலம் எந்த குரூப்பில் இருந்தும் எளிதாக தகவல்களை பெற முடியும். அதேபோல் கம்யூனிட்டியின் அட்மின் எந்த ஒரு தகவலையும் ஒவ்வொருவருக்கும் எளிதாக தெரிவிக்க முடியும்.

  வாட்ஸ் அப்

  மேலும் பேஸ்புக்கில் இருப்பது போன்ற வாக்கெடுப்பு நடத்தும் போல்ஸ் (Polls) ஆப்ஷனும் கொண்டு வரப்பட்டுள்ளது. அதேபோல் ஒரே நேரத்தில் 32 நபர்கள் வீடியோகாலிங்கில் இணைந்திருக்கும் சூப்பர் ஆப்ஷனும் கொண்டு வரப்பட்டுள்ளது.

  வாட்ஸ் அப்

  அனைத்துமே பாதுகாப்பான end to end encryption முறையாகும். end to end encryption முறை என்பது நம்முடைய தகவல்களை எந்த விதத்திலும் வாட்ஸ் அப்பால் பார்க்க முடியாது என்பதே.

  வாட்ஸ் அப்

  வாட்ஸ் அப்பின் இந்த புதிய அப்டேட்கள் கிட்டத்தட்ட போட்டி நிறுவனமான டெலகிராமில் இருப்பது. வாட்ஸ் அப்க்கு போட்டியாக டெலகிராம் வளர்ந்து வரும் நிலையில் அங்குள்ள சில சூப்பர் சிறம்சங்களை தற்போது வாட்ஸ் அப் கொண்டு வருகிறது.

  Published by:Murugadoss C
  First published:

  Tags: Mark zuckerberg, Telegram, WhatsApp