• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • In-App Business Directory அம்சத்தை அறிமுகம் செய்யும் வாட்ஸ்அப்! உள்ளூர் கடைகள் & சர்வீஸ்களை தேடலாம்

In-App Business Directory அம்சத்தை அறிமுகம் செய்யும் வாட்ஸ்அப்! உள்ளூர் கடைகள் & சர்வீஸ்களை தேடலாம்

மாதிரி படம்

மாதிரி படம்

முன்னதாக Matt Idema கூறிய போது, தங்கள் வாட்ஸ்அப் எண்களை வணிகர்கள் பேக்கேஜிங், வெப்சைட்ஸ் அல்லது ஃபேஸ்புக் விளம்பரங்களை பயன்படுத்தி யூஸர்களை வாட்ஸ்அப்பில் சேட்களுக்குள் கொண்டு வருவதாக அவர் கூறினார்.

  • Share this:
ஃபேஸ்புக்கின் மெசேஜிங் சர்வீஸான வாட்ஸ்அப் கடந்த புதன்கிழமை In-App Business Directory என்ற ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. In-App Business Directory எனப்படும் இந்த புதிய அம்சத்தை பயன்படுத்துவதன் மூலம், முதல் முறையாக வாட்ஸ்அப் App-ற்குள் யூஸர்கள் வணிக நிறுவனங்களை தேட முடியும் என்று சர்வதேச செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸிடம் நிறுவனம் தெரிவித்துள்ளது. துவக்கத்தில் இந்த அம்சம் பிரேசிலின் சாவோ பாலோவில் (São Paulo) சோதிக்கப்படுகிறது.

இது தொடர்பாக தகவல் தெரிவித்துள்ள வாட்ஸ்அப், பிரேசிலின் São Paulo சுற்றுப்புறங்களில் ஃபுட், ரீட்டெயில், மற்றும் லோக்கல் சர்வீஸ் போன்ற வகைகளில் ஆயிரக்கணக்கான வணிகங்களை இந்த புதிய சோதனை உள்ளடக்கும் என்று தெரிவித்துள்ளது. In-App Business Directory எனப்படும் இந்த புதிய அம்சமானது வாட்ஸ்அப் பயன்படுத்தும் யூஸர்கள், அந்த App-ற்குள் கொடுக்கப்பட்டிருக்கும் ஒரு விவரங்கள் அடங்கிய டைரெக்டரி (Directory) மூலம் கடைகள் மற்றும் சர்வீஸ்களை (shops and services) கண்டறிந்து கொள்ள அனுமதிக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஃபேஸ்புக்கின் சமீபத்திய சேவையாக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ள இந்த அம்சம், அதன் சேவைகளில் மின்வணிகத்தை (ecommerce) அதிகரிக்க செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே ஃபேஸ்புக்கின் வணிக செய்தித் துணைத் தலைவாரான Matt Idema, தனது சமீபத்திய பேட்டி ஒன்றில், "இது வாட்ஸ்அப்பில் ஒரு வணிக செயல்முறையைத் தொடங்குவதற்கான முதன்மையான வழியாக இருக்கலாம்" என்று குறிப்பிட்டார். ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போல வாட்ஸ்அப் அதன் பயன்பாட்டில் விளம்பரங்களை இயக்காது.

முன்னதாக Matt Idema கூறிய போது, தங்கள் வாட்ஸ்அப் எண்களை வணிகர்கள் பேக்கேஜிங், வெப்சைட்ஸ் அல்லது ஃபேஸ்புக் விளம்பரங்களை பயன்படுத்தி யூஸர்களை வாட்ஸ்அப்பில் சேட்களுக்குள் கொண்டு வருவதாக அவர் கூறினார். நீடித்து வரும் கோவிட் தொற்று காரணமாக ஆன்லைன் ரீட்டெயில் விற்பனை தொடர்ந்து பெருகி வரும் காரணத்தால், ஃபேஸ்புக் நிறுவனம் அதன் ஆப்களில் In-App அம்சங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது. கடந்த ஜூன் மாதத்தில், மார்க் ஜுக்கர்பெர்க் ஃபேஸ்புக்கின் ஷாப்ஸ் அம்சம், பல நாடுகளில் வாட்ஸ்அப்பில் விரிவாக்கம் செய்யப்படும் என்று அறிவித்து இருந்தார்.

சமீபத்திய ஆண்டுகளில் வாட்ஸ்அப் ப்ராடக்ட் கேட்லாக்ஸ் (product catalogues) மற்றும் ஷாப்பிங் கார்ட்ஸ் (shopping carts) போன்ற ஷாப்பிங் டூல்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதனிடையே பிரேசிலை தொடர்ந்து in-app business directory அம்சத்தை வாட்ஸ்அப்பில் அறிமுகப்படுத்த இந்தியாவும், இந்தோனேஷியாவும் சிறந்த தேர்வாக இருக்கும் என்று Matt Idema கூறி இருக்கிறார்.

Also read... வாட்ஸ்அப் பைல்கள் உங்கள் போன் மெமரியை காலி செய்கிறதா? அதை தடுப்பதற்கான டிப்ஸ்!

இருப்பினும், எதிர்காலத்தில் வாட்ஸ்அப் பயன்பாட்டு விளம்பரங்களை அறிமுகப்படுத்தும் சாத்தியத்தை Idema மறுக்கவில்லை. இந்நிலையில் சுமார் 1 மில்லியன் விளம்பரதாரர்கள் தற்போது பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின்‘click to WhatsApp’ ads-ஐ பயன்படுத்தி, யூஸர்களை தங்களது மெசேஜிங் சர்வீஸ் ஆப்பிற்கு அனுப்புவதாக வாட்ஸ்அப் நிறுவனம் கூறி இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: