• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • வாட்ஸ்அப்பில் கொரோனா ஸ்டிக்கர்ஸ் - சத்தமில்லால் வந்த புதிய அப்டேட்!

வாட்ஸ்அப்பில் கொரோனா ஸ்டிக்கர்ஸ் - சத்தமில்லால் வந்த புதிய அப்டேட்!

வாட்ஸ் ஆப்

வாட்ஸ் ஆப்

தடுப்பூசி குறித்து மக்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 150 நாடுகளுடன் வாட்ஸ்அப் நிறுவனமும் கரம்கோர்த்துள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
கொரோனா வைரஸூக்கு எதிராக தடுப்பூசி எடுத்துக்கொள்வதை ஊக்கப்படுத்தும் வகையில் வாட்ஸ்அப்பில் புதிய ஸ்டிகர்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் 2-வது அலை முதல் அலையை விட வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் அதேநேரத்தில் தடுப்பூசி எடுத்துக்கொள்வதையும் அனைத்து நாடுகளும் ஊக்கப்படுத்தி வருகின்றனர். தடுப்பூசி குறித்து மக்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 150 நாடுகளுடன் வாட்ஸ்அப் நிறுவனமும் கரம்கோர்த்துள்ளது. உலக சுகாதார நிறுவனம் (WHO) மற்றும் யுனிசெப்- உடன் இணைந்து அனைவருக்கும் தடுப்பூசி (Vaccines for All) என்ற விழிப்புணர்வை வாட்ஸ் அப் முன்னெடுத்துள்ளது.

இதன்ஒரு பகுதியாக வாட்ஸ்ஆப்பில் புதிதாக அனைவருக்கும் தடுப்பூசி தொடர்பான ஸ்டிக்கர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆன்டிராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் வெர்சன் மொபைல் வாட்ஸ் ஆப்புகளிலும் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஸ்டிக்கர்ஸ் கிடைக்கும். புதிதாக சேர்க்கப்பட்டுள்ள இந்த ஸ்டிக்கர்ஸ்கள் உலக சுகாதார நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டு, அந்த மையத்தின் ஒப்புதலுடன் யூசர்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

23 ஸ்டிக்கர்கள் இதில் இருக்கும். அனைத்து ஸ்டிக்கர்களும் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்வது குறித்தும், நோயில் இருந்து நிவாரணம் பெற முடியும் என்ற தன்னம்பிக்கை, மகிழ்ச்சி ஆகியவற்றை மக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது. உலக சுகாதார மையத்தின் டிஜிட்டல் சேனல்களின் தலைவராக உள்ள ஆன்டி பேட்டிசன் பேசும்போது, கொரோனா தடுப்பூசி உலக அளவில் மக்களிடையே கொண்டு சேர்க்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

ஒரு சில இடங்களில் தடுப்பூசி தொடர்பாக இருக்கும் தவறான புரிதல்கள் மற்றும் போலிச் செய்திகளை முறியடிக்க உலக சுகாதார நிறுவனம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், அதன் ஒரு பகுதியாக வாட்ஸ்அப் நிறுவனத்துடன் இணைந்து அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி என்ற விழிப்புணர்வை மேற்கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். ஸ்டிக்கர்ஸ் மட்டுமல்லாது கொரோனா தொடர்பான உதவி எண்களையும் வாட்ஸ் ஆப் சேர்த்துள்ளது. இதன் மூலம் உலக சுகாதார நிறுவனத்தின் உதவி மையம் முதல் உள்ளூர் அரசுகளின் உதவி மையம் வரையிலான தொடர்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

Also read... ஆன்லைனில் லீக்கான 533 மில்லியன் பேஸ்புக் யூசர்களின் சுயவிவரங்கள்...!

மேலும், வாட்ஸ்அப்பின் புதிய அம்சத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு இந்தியா, ஆப்பிரிக்கா, பிரேசில், அர்ஜென்டினா உள்ளிட்ட நாடுகளின் அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் இதுவரை சுமார் 9 கோடி பேர் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டுள்ளனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் தாயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசிகள் பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

உலக நாடுகளுக்கு தடுப்பூசி விநியோகிப்பதில் இந்தியா முன்னணியில் உள்ளது. வாட்ஸ் ஆப் நிறுவனத்தின் உதவி எண்களை பயன்படுத்தி இந்தோனேஷியாவில் இதுவரை 5 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. இந்தியாவில் MyGov என்ற அரசு செயலியுடன் பார்ட்னராக இணைந்துள்ளது. கொரோனா பரவல் இந்தியாவில் தொடங்கியதில் இருந்து அது தொடர்பான தகவல்களையும், விழிப்புணர்வுகளையும் MyGov வெளியிட்டு வருகிறது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: