போலிச் செய்திகளைக் கண்டறிய புதிய சேவையை அறிமுகம் செய்யும் வாட்ஸ்அப்!

இந்தியாவில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி 7 கட்டமாக மே 19-ம் தேதி வரை நடைபெறுகிறது.

news18
Updated: April 2, 2019, 5:48 PM IST
போலிச் செய்திகளைக் கண்டறிய புதிய சேவையை அறிமுகம் செய்யும் வாட்ஸ்அப்!
வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக்
news18
Updated: April 2, 2019, 5:48 PM IST
வாட்ஸ்அப் நிறுவனம் போலி செய்திகளைக் கண்டறிய இந்தியாவிற்கான பிரத்தியேக சேவையைச் செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்துள்ளது.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாட்ஸ்அப் நிறுவனம் இந்த வசதியை அறிமுகம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

போலி செய்திகளைக் கண்டறிவதற்காக இந்தியாவிற்கான ஸ்டார்ட்அப் நிறுவனம் ஒன்றை வாட்ஸ்அப் நிறுவனம் ஒன்றைத் தொடங்கியுள்ளது.


வாட்ஸ்அப் செயலியில் வரும் தகவல்கள் உண்மையா, பொய்யா, தவறாக வழிநடத்தப்படுகிறதா அல்லது சர்ச்சைக்குரியதாக உள்ளதா என்று தகவல்களைப் புகார் அளிக்கும் வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த வசதியைப் பயன்படுத்தி வரும் புகார்களைச் சேகரித்து வைத்து அந்த செய்தி குறித்த உண்மை நிலையைக் கண்டறிந்து போலி என்றால் நீக்கப்படும் என்றும் வாட்ஸ்அப் கூறியுள்ளது.

படிக்க.... வாட்ஸ் அப் செயலியை தமிழில் பயன்படுத்துவது எப்படி? 

Loading...


வாட்ஸ்அப் செயலியைப் புதுப்பிக்கும் போது இந்த புதிய வசதிகளைப் பெற முடியும்.

இந்தியாவில் வாட்ஸ்அப் செயலியை 200 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.

வாட்ஸ்அப்பின் தாய் நிறுவனமான ஃபேஸ்புக் திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில் இந்தியாவில்  போலிச் செய்திகளை பரப்பியதாக 712 பக்கங்கள்  நீக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

இந்தியா மட்டுமில்லாமல் பாகிஸ்தானிலிருந்தும் 390 போலி கணக்குகளை ஃபேஸ்புக் நீக்கியுள்ளது. அதில் பெரும்பாலானவை பாகிஸ்தான் ராணுவத்திற்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது.

இந்தியாவில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி 7 கட்டமாக மே 19-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்தியாவில் உள்ள பெரும்பலமான கட்சிகள் போலி செய்திகள் பரப்புவதை வாடிக்கையாக வைத்துள்ளன என்று கூறப்படுகிறது.

பல அரசியல் கட்சிகள் வாட்ஸ்அப் செயலியைத் தவறான நோக்கத்தில் பயன்படுத்தவே விரும்புகின்றன என்று அந்நிறுவனத்தின் மூத்த நிர்வாகி ஒருவர் பிப்ரவரி மாதம் கூறியிருந்தார்.

இந்தியா மட்டுமில்லாமல் பிரேசிலிலும் இதே போன்ற ஒரு நிலையைச் சென்ற ஆண்டு தேர்தலின் போது வாட்ஸ்அப் சந்தித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பார்க்க:

மேலும் வணிக செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  வணிக செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

ஐ.பி.எல் தகவல்கள்

POINTS TABLE:


SCHEDULE TIME TABLE:


ORANGE CAP:


PURPLE CAP:


RESULTS TABLE:
First published: April 2, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...