ஆறு புதிய வண்ணங்களில் வாட்ஸ்அப்... டார்க் மோட்-க்கு அடுத்தபடியாக புது அப்டேட்!

"வாட்ஸ்அப் செயலியில் டார்க் மோட் பயன்படுத்தும் போது அது உங்களது ஸ்மார்ட்போனின் பேட்டரியை சேமிக்க வழிவகுக்கும்"

ஆறு புதிய வண்ணங்களில் வாட்ஸ்அப்... டார்க் மோட்-க்கு அடுத்தபடியாக புது அப்டேட்!
வாட்ஸ்அப்
  • News18
  • Last Updated: February 8, 2020, 11:40 AM IST
  • Share this:
நீண்ட காத்திருப்புக்குப் பின்னர் வாட்ஸ்அப் தற்போது பீட்டா வெர்ஷன் ஸ்மார்ட்போன்களுக்கு டார்க் மோட் அம்சத்தை வெளியிட்டுள்ளது.

கூகுள் ப்ளே பீட்டா ப்ரோகிராம் மூலம் புதிய அப்டேட்டை பயனாளர்கள் பெற முடியும். டார்க் மோட் அம்சத்துக்கு மாற்றாக ஆறு புதிய வண்ணங்களில் வால்பேப்பரை மாற்றிக்கொள்ளும் வசதியை வாட்ஸ்அப் செயலியில் அறிமுகம் செய்கிறது ஃபேஸ்புக் நிறுவனம்.

கறுப்பு, அடர் ப்ரவுன், அடர் நீலம், ஆலிவ் நிறம், அடர் பர்பிள் மற்றும் அடர் வெல்வெட் ஆகிய 6 நிறங்கள் புதிதாக வந்துள்ளன. இந்த வண்ணங்களில் உங்கள் வாட்ஸ்அப் சாட்டிங் பக்கம் மாற முதலில் வாட்ஸ்அப் செயலியை திறக்கவும். அதன் பின்னர் Settings->Chats option->Wallpaper->Solid Colour என்ற வழிமுறையப் பின்பற்றவும்.


பீட்டா ப்ரோகிராம் பயன்படுத்தும் பயனாளர்களுக்கு வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷன் 2.20.31 விரைவில் கூகுள் ப்ளே ஸ்டோரில் வழங்கப்பட உள்ளது. வாட்ஸ்அப் செயலியில் டார்க் மோட் பயன்படுத்தும் போது அது உங்களது ஸ்மார்ட்போனின் பேட்டரியை சேமிக்க வழிவகுக்கும். இதேபோலத்தான் அடர் வண்ணங்களும் உங்கள் பேட்டரியை சேமிக்க உதவும் என வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.

மேலும் பார்க்க: ஆண்டுக்கு 500 லட்சம் போன்களை உற்பத்தி செய்த ப்ளாக்பெரி... சந்தையைவிட்டு வெளியேறுவதாக அறிவிப்பு!
First published: February 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்