Home /News /technology /

பிசினஸ் அக்கவுண்ட் யூஸர்களுக்கு கூடுதல் அம்சங்களை தர WhatsApp-ல் விரைவில் வருகிறது சந்தா திட்டம்..

பிசினஸ் அக்கவுண்ட் யூஸர்களுக்கு கூடுதல் அம்சங்களை தர WhatsApp-ல் விரைவில் வருகிறது சந்தா திட்டம்..

வாட்ஸ் அப்

வாட்ஸ் அப்

Whatsapp Business Account | தங்கள் வணிக வளர்ச்சிக்காக பல யூஸர்கள் வாட்ஸ்அப் பிசினஸ் அக்கவுண்ட்டை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த வகை யூஸர்களுக்கு விரைவில் நிலைமை மாற போகிறது. மெட்டாவுக்குச் சொந்தமான இன்ஸ்டன்ட் மெசேஜிங் ஆப்-ஆன வாட்ஸ்அப் விரைவில் அதன் முதல் கட்டணச் சேவையை தொடங்க தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் படிக்கவும் ...
உலகம் முழுவதும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் மெசேஜிங் பிளாட்ஃபார்மாக இருந்து வருகிறது வாட்ஸ்அப். தற்போது வரை இது எல்லா யூஸர்களுக்கும் இலவச மெசேஜிங் சர்விஸை வழங்கி வருகிறது.

எனினும் தங்கள் வணிக வளர்ச்சிக்காக பல யூஸர்கள் வாட்ஸ்அப் பிசினஸ் அக்கவுண்ட்டை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த வகை யூஸர்களுக்கு விரைவில் நிலைமை மாற போகிறது. மெட்டாவுக்குச் சொந்தமான இன்ஸ்டன்ட் மெசேஜிங் ஆப்-ஆன வாட்ஸ்அப் விரைவில் அதன் முதல் கட்டணச் சேவையை தொடங்க தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

WABetaInfo வெளியிட்டுள்ள புதிய அறிக்கை ஒன்றில், WhatsApp-ன் பிசினஸ் அக்கவுண்ட்டை பயன்படுத்தி வரும் யூஸர்களுக்காக கூடுதல் அம்சங்களை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது வாட்ஸ்அப். ஆனால் எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ள பல கூடுதல் நன்மைகளை பெற வாட்ஸ்அப் பிசினஸ் அக்கவுண்ட் யூஸர்கள் பிரத்யகமாக கட்டணம் செலுத்தி சந்தா திட்டத்தை (subscription plan) பயன்படுத்த வேண்டியிருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ள சந்தா திட்டம் என்பது பிசினஸ் அக்கவுண்ட் யூஸர்களுக்கு ஒரு கூடுதல் விருப்பமாகவே இருக்கும். subscription plan-ல் அளிக்கப்படும் சலுகைகளை வேண்டாம் என்று நினைப்பவர்கள் தற்போது இருப்பது போலவே வாட்ஸ்அப் பிசினஸை பயன்படுத்த முடியும் என்றும் WABetaInfo வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. மேலும் இந்த அறிக்கையின்படி கட்டணச் சந்தா சேவையில் வாட்ஸ்அப் பல அம்சங்களைச் சேர்க்க திட்டமிட்டுள்ளது, அவற்றில் ஒன்று 'linked devices' அம்சத்துடன் அதிக டிவைஸ்களை ஆட் செய்யும் திறன் ஆகும். இந்த அம்சம் பிசினஸ் அக்கவுண்ட்ஸ்களுக்கான இணைக்கப்படும் டிவைஸ்களுக்கான லிமிட்டை விரிவுபடுத்துகிறது. யூஸர்கள் தங்கள் முக்கிய ஸ்மார்ட் போனுடன் கூடுதலாக பிரவுஸர்ஸ் வழியே பல கணினிகளில் ஒரே WhatsAppWeb அக்கவுண்ட்டை அணுக அனுமதிக்கும். பிரதான ஃபோனில் நெட்வொர்க் இணைப்பு இல்லாத போதும் இந்த அம்சம் வேலை செய்யும் என்று அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.



வாட்ஸ்அப் தற்போது 4 டிவைஸ்களை இணைக்க யூஸர்களை அனுமதித்து வருகிறது. அதுவே கட்டணம் செலுத்தி சந்தா சேவையை பெறும் பிசினஸ் அக்கவுண்ட் யூஸர்கள் இந்த வரம்பை 10 டிவைஸ்களாக பெற முடியும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. எனவே இந்த அம்சம் பிசினஸ் அக்கவுண்ட்ஸ்களுக்கு ஏற்றதாக இருக்கும். சந்தா திட்டம் (subscription plan) தற்போது வரை அறிமுகமாகவில்லை என்றாலும் விரைவில் Android மற்றும் iOS-க்கான வாட்ஸ்அப் பிசினஸ் பீட்டாவில் (WhatsApp Business beta) கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read : உங்கள் தனி விவரங்கள் மற்றும் வங்கி விவரங்களை இந்த வாட்ஸ் அப் அக்கவுண்ட்கள் திருட கூடும் - ஜாக்கிரதை!

சந்தா சேவையில் linked devices அம்சம் தவிர பிசினஸ் அக்கவுண்ட் யூஸர்களின் வசதிக்காக இன்னும் பல கூடுதல் கூடுதல் அம்சங்கள் பின்னர் சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Published by:Selvi M
First published:

Tags: Technology, WhatsApp, Whatsapp Update

அடுத்த செய்தி