ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

மீண்டும் செயல்படத் தொடங்கியது வாட்ஸ் அப்! - முடங்கியதற்கு இதுதான் காரணம்!

மீண்டும் செயல்படத் தொடங்கியது வாட்ஸ் அப்! - முடங்கியதற்கு இதுதான் காரணம்!

வாட்ஸ்அப்

வாட்ஸ்அப்

இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் சில மணிநேரமாக முடங்கியிருந்த வாட்ஸ் அப் சேவை மீண்டும் சீரானது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • inter, Indiaindiaindiaindiaindiaindiaindia

  தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுமார் 2 மணி நேரம் முடங்கி இருந்த வாட்ஸ் அப் மீண்டும் செயல்பட தொடங்கியது

  மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் உபயோகப்படுத்தும் செயலியாக  உள்ளது. வாட்ஸ் அப் சேவை திடீரென முடங்கியதால்  வாட்ஸ் -அப் மூலம் தகவல்களை அனுப்ப முடியாமலும், பெற முடியாமலும் பயனாளர்கள் தவித்து வந்தனர்.

  குறிப்பாக இன்று மதியம் சுமார் 12.45 மணியளவில் வாட்ஸ்அப் செயலி திடீரென முடங்கியது. இதுகுறித்து டுவிட்டரில் வாட்ஸ்அப் நிறுவனத்தை டேக் செய்து பல பயனர்கள் பதிவிட்டு வருகின்றனர்.  குறிப்பாக #WhatsappDown என்ற ஹேஷ்டேக் குறியிட்டு பல பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப் வேலைசெய்யவில்லை என்று புகார் தெரிவித்தனர்.

  முடங்கியது வாட்ஸ் அப்.. ட்விட்டரில் நடக்கும் அடிபிடி சண்டை! கலாய்த்து தள்ளும் இணையவாசிகள்!

  இதைத்தொடர்ந்து  வாட்ஸ் அப் சேவையை நிர்வகிக்கக்கூடிய மெட்டா நிறுவனம் விரைவில் சீராகும் என்று கூறி இருக்கிறது. இதனிடையே, மெட்டா நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் இது தொடர்பாக விளக்கமளித்துள்ளார். அதில், வாட்ஸ்-அப் முடங்கியுள்ளதை அறிவோம் என்றும் விரைவில் அதனை மீட்டெடுக்க பணியாற்றி வருவதாகவும் விளக்கமளித்துள்ளார்.

  மேலும்  சேவையை சீராக்கக் கூடிய பணியில் மெட்டா  நிறுவனத்தினுடைய தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டு இருக்கிறார்கள். எனவே வாட்ஸ் அப் சேவை விரைவில் சீராகும் என்று அவர்கள் கூறியிருந்தனர்.

  இந்நிலையில்  சில மணிநேரமாக முடங்கியிருந்த வாட்ஸ் அப் சேவை மீண்டும் சீரானது.

  Published by:Lakshmanan G
  First published:

  Tags: WhatsApp