முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / WhatsApp Update: ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்ஃபோன் யூசர்களுக்காக வாட்ஸ்அப் செயலியின் புதிய அப்டேட்!

WhatsApp Update: ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்ஃபோன் யூசர்களுக்காக வாட்ஸ்அப் செயலியின் புதிய அப்டேட்!

Whatsapp

Whatsapp

யூசர்கள் தங்கள் ஆண்டிராய்டு ஸ்மார்ட்ஃபோன் கேலரியிலிருந்து புகைப்படங்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் வாட்ஸ்அப்பில் மறையும் புகைப்படங்களாக அனுப்பலாம் என்று WaBetaInfo பகிர்ந்த ஸ்க்ரீன்ஷாட்கள் தெரிவிக்கின்றன.

  • Last Updated :

கோடிக்கணக்கான யூசர்களை கொண்டுள்ள வாட்ஸ்அப் செயலி, அவ்வப்போது பல்வேறு புதிய அம்சங்களை வெளியிட்டு வருகிறது. தற்போது, மறையும் புகைப்படங்கள் என்ற புதிய அம்சத்தை வாட்ஸ்அப் செயலி அறிமுகப்படுத்தியுள்ளது.

வாட்ஸ்அப் நிறுவனம், தன்னுடைய பீட்டா யூசர்களுக்காக, ‘ஒரு முறைக் காண்க’ (view once) எனப்படும் மறையும் புகைப்படங்கள் அம்சத்தை வழங்கியுள்ளது. இன்ஸ்டாகிராம் செயலியின் காலாவதியாகும் மீடியா அம்சத்தைப் போலவே இந்த புதிய அம்சமும் செயல்படும். ஆண்ட்ராய்டு ஃபோன் பயன்படுத்தும் வாட்ஸ்ஆப் செயலியின் பீட்டா யூசர்கள் இந்த அம்சத்தை இன்று முதல் பயன்படுத்த முடியும்.

இந்த அம்சத்தின் பெயருக்கு ஏற்றார் போல, வாட்ஸ்அப் கணக்குகளில் பகிரப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை, அதன் பெறுநர் ஒரு முறை மட்டுமே பார்க்க முடியும். அதன் பிறகு, பெறுநரின் வாட்ஸ்அப்  சாட்டிலிருந்து அவை தானாகவே மறைந்து விடும். இந்த ஒரு முறை மட்டுமே பார்க்க அனுமதி என்ற அம்சம், பயனாளர்களுக்கு மேம்பட்ட தனியுரிமைக் கொள்கையை வழங்குகிறது.

Also Read:   உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெற்றிக்குபிறகு கோலியின் நெஞ்சில் சாய்ந்தது ஏன்? - கனே வில்லியம்சனின் சுவாரஸ்ய பதில்

உங்கள் வாட்ஸ்அப் கணக்கில் இந்த புதிய அம்சம் இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? நீங்கள் புகைப்படங்கள் அல்லது காணொளிகளை மற்றவர்களுக்கு பகிரும் போது, ‘ஒரு முறைக் காண்க’ (view once) என்ற அம்சம் உங்கள் கணக்கில் இல்லையென்றால், உங்களுக்கு இந்த அம்சம் இன்னும் புதுப்பிக்கப்படவில்லை என அர்த்தம்.

யூசர்கள் தங்கள் ஆண்டிராய்டு ஸ்மார்ட்ஃபோன் கேலரியிலிருந்து புகைப்படங்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் வாட்ஸ்அப்பில் மறையும் புகைப்படங்களாக அனுப்பலாம் என்று WaBetaInfo பகிர்ந்த ஸ்க்ரீன்ஷாட்கள் தெரிவிக்கின்றன.

Also Read:   வரதட்சணை கொடுமை:  நண்பர்களால் மனைவியை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்ய வைத்த கொடூர கணவர்!

புகைப்படத்தை தேர்வு செய்தவுடன், “கேப்ஷன் சேர்க்கவும்” பட்டியின் அருகே காண்பிக்கப்படும் கடிகாரம் போன்றிருக்கும் ஐகானைக் கிளிக் செய்ய வேண்டும். பிறகு, நீங்கள் உங்கள் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் மறையும் புகைப்படங்களை அனுப்பலாம்.

இந்தப் பயன்முறையின் மூலம் நீங்கள் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் GIF வடிவ படங்களையும் அனுப்பலாம். இந்த அம்சம் தற்போது வாட்ஸ்ஆப் 2.21.14.3 ஆண்டிராய்டு பதிப்பில் கிடைக்கிறது.

வாட்ஸ்அப் ஆப்-பில் இந்த அம்சத்தைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

நீங்கள் read receipts எனப்படும் இரண்டு நீல நிற ‘டிக்’ மார்க்குகளை ஆஃப் செய்து வைத்திருந்தாலும், இந்த அம்சம் மூலம் அனுப்பப்பட்ட புகைப்படம் அல்லது வீடியோக்களை நீங்கள் பார்த்துவிட்டீர்களா இல்லையா என்பதை அனுப்புபவர் தெரிந்து கொள்ள முடியும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், எப்போது நீங்கள் புகைப்படத்தை பார்த்தீர்கள் என்பதை அறிந்து கொள்ள முடியாது.

மறையும் புகைப்படத்தை நீங்கள் வாட்ஸ்அப் குழுவில் பகிர்ந்தால், நீங்கள் read receipts ஆஃப் செய்து வைத்திருந்தாலும், குழுவில் உள்ள உறுப்பினர்கள் எப்போது அந்த புகைப்படங்களைப் பார்த்தார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள முடியும்.

Also Read:   உலக கோப்பையையே தவறவிட்டதை போல உணர்ந்தேன் - டிம் சவுத்தியை கலங்க வைத்த இந்திய வீரர்!

அதே நேரத்தில், மறையும் புகைப்படங்கள் அல்லது வீடியோவை பெறுபவர்கள், புகைப்படத்தை சேமிக்கவும், ஸ்க்ரீன் ஷாட் எடுக்கவும் முடியும். மற்றும் ஸ்க்ரீன் ரெக்கார்டிங் மூலமாகவும் வீடியோக்களை சேமிக்க முடியும். ஸ்க்ரீன் ஷாட் எடுப்பது அல்லது ஸ்க்ரீன் ரெக்கார்டிங் செய்வதைக் கண்டறியும் அம்சம் இல்லாததால், அதைப்பற்றிய தகவலை வாட்ஸ்அப் உங்களுக்குத் தெரிவிக்காது என்பதையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு முறைக் காண்க என்ற அம்சத்தைப் பயன்படுத்தி, வாட்ஸ்அப் குழுவில் நீங்கள் பகிரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிரலாம். மேலும், “மெசேஜ் தகவல்” மூலம், குழு உறுப்பினர்கள் யாரெல்லாம் நீங்கள் அனுப்பியவற்றை பார்த்துள்ளார்கள் என்பதை அறிந்து கொள்ள முடியும். வாட்ஸ்அப் குழுக்களில் இந்த அம்சம் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.

Also Read:   உணவு டெலிவரிக்காக சென்ற போது பெண் மருத்துவரை பாலியல் வன்புணர்வு செய்த கடைக்காரரின் மகன்!

“வாட்ஸ்அப் குழுக்களில் தடுக்கப்பட்ட தொடர்புகளும் புகைப்படங்களையும், காணொளிகளையும் பார்க்க முடியும். தனிப்பட்ட தொடர்பாக வாட்ஸ்அப்பில் செய்தி அனுப்பவோ, அழைக்கவோ முடியாது. ஆனால், குழுவில் தொடர்பு கொள்ள, உரையாட முடியும்” என்று WaBetaInfo தெரிவித்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நீங்கள் இந்த ஒரு முறைக் காண்க அம்சத்தைப் பயன்படுத்தி, இந்த அம்சம் இல்லாத மற்றொரு வாட்ஸ்அப் யூசருக்கு புகைப்படம் அனுப்பினாலும், இந்த அம்சம் உங்கள் கணக்கில் செயல்படும். வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் நிறுவனரான மார்க் ஜுக்கர்பெர்க், இந்த மறையும் புகைப்படங்கள் அம்சத்தைப் பற்றி உறுதி செய்துள்ளார். மேலும், இந்த அம்சம் அனைத்து வாட்ஸ்அப் பயனாளர்களுக்கும் புதுப்பிக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, இந்த அம்சம் அனைவருக்கும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

First published:

Tags: Technology, WhatsApp, Whatsapp Update