Home /News /technology /

இனி மெசேஜ்களை எல்லாருக்கும் ஃபார்வர்ட் செய்ய முடியாது – WhatsApp-ன் புதிய அப்டேட்.!

இனி மெசேஜ்களை எல்லாருக்கும் ஃபார்வர்ட் செய்ய முடியாது – WhatsApp-ன் புதிய அப்டேட்.!

Whatsapp Update

Whatsapp Update

WhatsApp Update | வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷன் பயன்படுத்துபவர்களுக்கு இந்த அம்சம் அப்டேட் ஆகியுள்ளது. வாட்ஸ்அப்பைப் பொறுத்தவரை எந்த புதிய அப்டேட் ஆக இருந்தாலும் முதலில் வாட்ஸ்அப் பீட்டா பயன்படுத்தும் யூசர்களுக்கு அது வழங்கப்படும். பீட்டா யூசர்களின் பயன்பாட்டை பார்த்த பின்பு அந்த அம்சம் மற்ற அனைத்து யூசர்களுக்கும் கிடைக்குமாறு அப்டேட் இருக்கும்.

மேலும் படிக்கவும் ...
உலகை ஒரு புள்ளியில் இணைக்கும் தொழில்நுட்ப முன்னேற்றத்தில், மெசேஜிங் சேவைகளை எளிமைப்படுத்திய பெருமை வாட்ஸ்அப்பை சேரும். செய்திகள் தவிர்த்து புகைப்படங்கள், வீடியோக்கள், ஆவணங்கள் என்று எல்லா தகவல்களையும் இதில் பகிரலாம். தொழில்நுட்பம் வளர வளர வாட்ஸ்அப்பில் புதிய அம்சங்களும் சேர்க்கப்பட்டன. அதே நேரத்தில், பாதுகாப்பு அம்சங்களும் மேம்படுத்தப்பட்டன, கட்டுப்பாடுகளும் உண்டாக்கப்பட்டன. அதில் முக்கியமானது, ஸ்பாம் என்று அறியப்படும் செய்திகளை தவிர்ப்பது. ஒரே செய்தியை அதன் நம்பகத்தன்மை தெரியாமல் ஆயிரக்கணக்கில் ஃபார்வர்டு செய்வது ஏற்கனவே கட்டுப்படுத்தப்பட்டது. தற்போது, மீண்டும் மெசேஜ்களை ஃபார்வர்டு செய்வது பற்றி புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது வாட்ஸ்அப்.

மெசேஜ்களை ஃபார்வார்டு செய்ய முடியாது என்ற இந்த புதிய கட்டுப்பாடு ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் டிவைஸ்கள் இரண்டுக்குமே பொருந்தும். செய்திகளை ஃபார்வார்டு செய்ய வேண்டும் என்றால் அதை ஒரே ஒரு குழுவில் மட்டும் தான் பார்வர்ட் செய்ய முடியும். அதற்கு மேற்பட்ட குழுவிற்கு ஃபார்வார்டு செய்ய முடியாது என்பதுதான் இந்த புதிய அப்டேட்.

இதற்கு முன்பு ஏதேனும் ஒரு செய்தி வந்தால் அல்லது ஏதேனும் வீடியோவோ, புகைப்படமோ, வாட்ஸ்அப் கான்டாக்ட்கள் மற்றும் வாட்ஸ்அப் குழுக்களுக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் ஃபார்வார்டு செய்யலாம் என்று இருந்தது. தற்போது யூசர்களின் பாதுகாப்பை கருதி 2018 ஆம் ஆண்டு முதல்  ஒரே நேரத்தில் ஐந்து குழுக்களுக்கு மட்டுமே ஃபார்வர்ட் செய்ய முடியும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. மேலும், பல்வேறு விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களின் பகுதியாக, வாட்ஸ்அப்பை பயனுள்ளதாக மற்றும் எந்த அச்சுறுத்தலும் இல்லாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, ஃபார்வார்டு மெசேஜ்களை ஒரே ஒரு குழுவிற்கு மட்டும் தான் அனுப்ப முடியும் என்ற புதிய கட்டுப்பாட்டை நிறுவனம் விதித்துள்ளது.



அதுமட்டுமின்றி இந்த புதிய அப்டேட் ஏற்கனவே சோதனை செய்யப்படுகிறது. வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷன் பயன்படுத்துபவர்களுக்கு இந்த அம்சம் அப்டேட் ஆகியுள்ளது. வாட்ஸ்அப்பைப் பொறுத்தவரை எந்த புதிய அப்டேட் ஆக இருந்தாலும் முதலில் வாட்ஸ்அப் பீட்டா பயன்படுத்தும் யூசர்களுக்கு அது வழங்கப்படும். பீட்டா யூசர்களின் பயன்பாட்டை பார்த்த பின்பு அந்த அம்சம் மற்ற அனைத்து யூசர்களுக்கும் கிடைக்குமாறு அப்டேட் இருக்கும்.

Also Read : 10 லட்சத்துக்கும் மேற்பட்ட WhatsApp கணக்குகள் முடக்கம்..!

வாட்ஸ்அப் பீடா வெர்ஷன் 2.22.7.2 இல் ஆண்டிராய்டு யூசர்களுக்கு இந்த அம்சம் வழங்கப்பட்டுள்ளது. அதே போல iOS 22.7.0.76 வெர்ஷனில் ஆப்பிள் யூசர்களுக்கும் இந்த அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. WABetaInfo வழங்கிய தகவலின் படி, நீங்கள் ஒரு முறை ஒரு குழுவிற்கு மெசேஜ் பார்வார்டு செய்து மீண்டும் செய்ய முயன்றால், இது ஏற்கனவே ஃபார்வார்டு செய்யப்பட்டது, இனி ஃபார்வார்டு செய்ய முடியாது என்ற செய்தி காட்டப்படும் என்று அறியப்படுகிறது.

Also Read : உலக அளவில் கெத்து காட்டும் டிக்டாக்.!

போலியான தகவல்களை வாட்ஸ்அப் வழியே பரப்புவதைத் தடுக்க முக்கிய நடவடிக்கையாக இந்த அம்சத்தை கொண்டு வரப்போவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
Published by:Selvi M
First published:

Tags: Technology, Whatsapp Update

அடுத்த செய்தி