உலகம் முழுவதும் பல மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்திவரும் தகவல் பரிமாற்றச் செயலிதான் வாட்ஸ்அப். தற்போது வாட்ஸ்அப் இல்லாமல் மக்களால் ஒரு நிமிடம் கூட இருக்கவே முடியாது. அந்தளவிற்கு மக்கள் உபயோகித்து வருகின்றனர். தனி நபர் அல்லது குழுக்களாக இணைந்து நம்முடைய நண்பர்கள் , உறவினர்கள் மற்றும் அலுவலக ரீதியான உரையாடல்கள் என எண்ணற்ற செயல்கள் இந்த செயலியில் நடைபெற்று வருகிறது.
நம்மில் பலரும் 5க்கும் மேற்பட்ட குழுக்களில் உறுப்பினராகவோ அல்லது அட்மின்களாகவே இருப்போம். இந்த நேரத்தில் சில சமயங்களில் தவறுதலாக மெசேஜ்களை அனுப்பிவிடும் போது Delete for everyone என்ற ஆப்ஷனைப்பயன்படுத்தி டெலிட் செய்வோம். ஆனால் சில நிமிடங்கள் மட்டுமே அந்த ஆப்சன் நமக்கு கிடைக்கப்பெறும். இதனால் பல நேரங்களில் யூசர்கள் மிகுந்த சிரமத்தைச் சந்திக்கும் நிலையில் தான், வாட்ஸ்அப் பீட்டா வெர்சன் 2.22.15.8 இன் படி சில யூசர்களுக்கு செய்திகளை நீக்குவதற்கான கால வரம்பை 2 நாள்கள் மற்றும் 12 மணி நேரம் வரை வாட்ஸ்அப் அதிகரித்துள்ளது.
குறிப்பாக டெலிகிராம் 48 மணிநேரத்திற்கு பிறகு அனுப்பிய மெசேஜை டெலிட் செய்ய அனுமதிக்கும் நிலையில், தற்போது மெட்டா கொண்டு வந்துள்ள புதிய வசதி வாட்ஸ்அப் யூசர்களுக்கு கூடுதலாக 12 மணி நேரம் வழங்குவது குறிப்பிடத்தக்கது.
மேலும் பீட்டா பதிப்பில், செய்திகளை நீக்குவதற்காக அதிகரித்த வரம்பு குறித்த யூசர்களை எச்சரிக்கும் அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. அதில் ஒரு குழுவிற்கு ஒரு செய்தியை அனுப்புவதன் மூலம் இரண்டு நாள்களுக்கு பிறகு அதை நீக்க முயற்சிக்க வேண்டும். மேலும் குழு நிர்வாகிகள் மற்ற உறுப்பினர்களுக்கான உரையாடல்கள், அரட்டைகளை குழுவில் உள்ள எவருக்கும் நீக்க அனுமதிக்கும் மற்றொரு நீக்குதல் செய்தி அம்சத்தை வாட்ஸ்அப் கொண்டுவருகிறது.
டிவியை ரிமோட்டில் மட்டும் ஆஃப் செய்தால் கரண்ட் பில் ஏறும் | அதிர்ச்சித் தகவல்
அதற்கான உரிமையைக் குழு அட்மின்கள் மற்ற உறுப்பினர்களுக்கு வழங்கலாம். இதன் மூலம் இனி தேவையில்லாமல் அனுப்பும் மெசேஜ்களை குழுவில் உள்ள யார் வேண்டுமானாலும் டெலிட் செய்துவிடலாம். இது வாட்ஸ்அப் யூசர்களுக்கு மிகவும் பயனளிக்ககூடிய விஷயமாக உள்ளது.
சமீப காலங்களாக வாட்ஸ்அப், யூசர்களின் வசதிக்காக பல்வேறு மாற்றங்களை கொண்டுவருகிறது. குறிப்பாக வாட்ஸ்அப் மெசேஜ்-க்கு கீழேயே எமோஜிகளை அனுப்புவது, வாட்ஸ்அப் மெசேஜ் டெலிட் செய்யும் முறை 7 நிமிடங்களிலிருந்து அதிகரித்தது, வாட்ஸ்அப் குழுவில் உள்ள அட்மின்கள், தங்களது குழுவில் 256 லிருந்து 512 பேர் வரை குழுவில் இணைத்து கொள்வதற்கு அனுமதி, 30 பேர் வரை கால் செய்து பேசுவது போன்ற பல்வேறு வசதிகளை கொண்டுவந்தது. மேலும் குரூப்பில் அனுப்பிய மெசேஜ்களை எடிட் செய்யும் வசதியையும் விரைவில் வாட்ஸ்அப் நிறுவனம் கொண்டு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக ஐடி விதிகள் 2021-ன் படி மே மாதத்தில் மட்டும் இந்தியாவில் 19 லட்சத்திற்கும் அதிகமான மோசமானக் கணக்குகளைத் தடை செய்துள்ளதாக வாட்ஸ்அப் சமீபத்தில் அறிவித்துள்ளது. மேலும் ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் 16.6 லட்சத்திற்கும் அதிகமான கணக்குகளையும் தடை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.